நாணயச் சபை, 2017 ஓகத்து 31ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் திருமதி. கே. எம். ஏ. என். டவுளுகல, திருமதி எஸ். குணரத்ன, திரு. என். டபிள்யு. ஜி. ஆர். பி. நாணயக்கார, திருமதி ரி. எம். ஜெ. வை. பி. பெர்னாண்டோ, திரு. ஜெ. பி. ஆர். கருணாரத்ன மற்றும் திருமதி கே. குணதிலக ஆகிய ஆறு உயர் அலுவலர் வகுப்புத் தரம் ஐஏ அலுவலர்களை 2017 ஓகத்து 31ஆம் திகதியிலிருந்து உதவி ஆளுநர்களாகப் பதவியுயர்த்தியுள்ளது. இப்பதவி உயர்வுகள் வங்கியினுடைய சுமூகமான தொழிற்பாட்டினை உறுதி செய்யும் வகையில் பதவி உயர்வுகளாலும் ஓய்வுபெறுகையினாலும் 2016 மேயிலிருந்து 2017 ஓகத்து வரை ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
திருமதி. கே. எம். ஏ. என் டவுளுகல
நாணயச் சபையின் துணைச் செயலாளரான இவர், நிதித் திணைக்களம் மற்றும் அலுவலகப் பணிகள் முகாமைத்துவத் திணைக்களம் என்பவற்றிற்குப் பொறுப்பான உதவி ஆளுநராகவும் அத்துடன் நாணயச் சபையின் துணை செயலாளராகவும் தொடர்ந்து செயற்படுவார்.