Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

ஊழியர் சேம நிதியம் தொடர்பாக எடுக்கப்பட்ட வழிமுறைகள் தொடர்பில் நாணயச் சபையினால் விடுக்கப்பட்ட அறிக்கை

ஊழியர் சேம நிதியம் தொடர்பில் அண்மையில் வெளிவந்த பல ஊடக அறிக்கைகள் கரிசனைகளைத் தோற்றுவிப்பனவாகவுள்ளன. 

2015 மற்றும் 2016ஆம் ஆண்டுப் பகுதியில் அரச பிணையங்கள் தொடர்பில் ஊ.சே. நிதியத்தின் கொடுக்கல்வாங்கல்கள் பற்றி நாணயச் சபையின் பணிப்புரையின் கீழ் தற்பொழுது உள்ளகப் பரீட்சிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை மத்திய வங்கி அலுவலர்களினால் மேற்கொள்ளப்பட்ட உள்ளகத் தொழிற்பாடுகளுடன் தொடர்பான பரீட்சிப்புக்களுடன் தொடர்புபட்டனவாக இருப்பதனால், சட்டத்தினை நடைமுறைக்கிடும் அதிகாரிகளும் 2015 மற்றும் 2016 காலப்பகுதியில் அரச பிணையங்களின் வழங்கல்கள் மற்றும் அவை தொடர்பான விடயங்கள் பற்றி வெளிவாரியான சுயாதீனமான புலானய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.  

ஊ.சே. நிதியத் தொழிற்பாடுகள் தொடர்பில், முதலீடுகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்கின்ற செயன்முறைகளை வலுப்படுத்துவதற்காக, கடந்த ஆறு மாதங்களாக நாணயச் சபை பல்வேறு வழிமுறைகளையும் மேற்கொண்டிருக்கிறது. 

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2016 திசெம்பர்

தயாரிப்புத் துறை  கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் திசெம்பரில் 58.3 ஆக விளங்கி, தயாரிப்பு நடவடிக்கைகள் 2016 திசெம்பரில் தொடர்ந்தும் விரிவடைந்தமையை எடுத்துக்காட்டியது.

பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2016 நவெம்பரில் 59.7 சுட்டெண் புள்ளியிலிருந்து திசெம்பரில் 59.8 சுட்டெண் புள்ளிகளுக்கு சிறிதளவால் அதிகரித்தது.

முழுவடிவம்

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2016 செத்தெமப்ர்

வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட சுருக்கம், சுற்றுலா வருவாய்களில் காணப்பட்ட தொடர்ச்சியான வளர்ச்சி என்பனவற்றின் காரணமாக 2016 செத்தெம்பரில் இலங்கையின் வெளிநாட்டுத் துறையின் செயலாற்றம் மேமப் ட்டது. ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட அதிகரிப்பு இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட குறைப்புடன் சேர்ந்தமையின் விளைவாக செத்தெம்பர் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை குறுக்கமடைந்தது. தொழிலாளர் பணவனுப்பல்கள் சிறிதளவு வீழ்ச்சியைப் பதிவுசெய்த போதும் இக்காலப்பகுதியில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் 2015 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பினைப் பதிவு செய்தன. மேலும், கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் அரச பிணையங்கள் சந்தை அதேபோன்று அரசாங்கத்திற்கான நீண்டகாலக் கடன் உட்பாய்ச்சல்கள் என்பன 2016 செத்தெம்பரில் நிதியியல் கணககு; வலுவடைய உதவின.

முழுவடிவம்

இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு, ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்திருக்கிறது

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கையின; நிதியியல் உளவறிதல் பிரிவு பணம் தூயதாகக்ல் மற்றும் பயங்கரவாதிக்கு நிதியிடல் தொடர்பான புலனாய்வுகளையும் வழக்குகள் தொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் வசதிப்படுத்தும் பொருட்டு தகவல்களைப் பெறுவதற்காக, இலங்கை மத்திய வங்கியில் 2017 சனவரி 11ஆம் நாளன்று ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்து கொண்டது. ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திரு. பி வியானி குணதிலக அவர்களும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் திரு. எச். அமரதுங்க அவர்களும் தொடர்பான திணைக்களங்களின் சார்பில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாகக் லுக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் என்பனவற்றிற்கான தேசிய இணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர். இந்திரஜித் குமாரசுவாமியின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்

நாணயக் கொள்கை மீளாய்வு - 2016 திசெம்பர்

இலங்கை தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக மதிப்பீடுகளின்டி, 2016இன் மூன்றாம் காலாண்டுப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் 5.6 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 4.1 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2016இன் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் பணிகள் துறை 4.7 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ள வேளையில் கைத்தொழில் நடவடிக்கைகள் 6.8 சதவீதம் கொண்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்தன. எனினும் வேளாண்மையுடன் தொடர்பான நடவடிக்கைகள; தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக சுருக்கத்தினைப் பதிவு செய்து 1.9 சதவீதத்தினால் குறைவடைந்தமைக்கு 2016இன் மூன்றாம் காலாண்டில் நிலவிய மோசமாக வானிலை நிலமைகளின் தாக்கமே காரணமாகும். முன்னணிப் பொருளாதார குறிகாட்டிகளில் காணப்பட்ட சாதகமான அபிவிருத்திகள் அதே போன்று 2015இல் நான்காம் காலாண்டில் காணப்பட்ட தாழ்ந்ததளம் என்பன, மோசமான வானிலை நிலமைகள் மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை என்பனவற்றிறகு; மத்தியிலும் 2016இன் நான்காம் காலாண்டில் பொருளாதாரத்தின் மேல்நோக்கிய வளர்ச்சிக்கு வழிகாட்டின. 

2016 நவெம்பரில் பணவீக்கம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013 = 100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 ஒத்தோபரின் 5.0 சதவீதத்திலிருந்து 2016 நவெம்பரில் 4.1 சதவீதத்திற்கு வீழச்சியடைந்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 நவெம்பரில்ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பங்களித்தன.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 நவெம்பரில் மாற்றமின்றி கடந்த மாதத்தின் 4.0 சதவீதத்தில் காணப்பட்டது.  

Pages