இலங்கை பாராளுமன்றம், இலங்கை அரசாங்கத்தினால் தீவிர பொறுப்பு முகாமைத்துவத்தினை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு உள்ளேயோ அல்லது வெளியிலிருந்தோ கடன்கள் மூலமாக ரூ.310 பில்லியனைத் திரட்டுவதற்கான தீர்மானத்தினை நிறைவேற்றியிருக்கிறது

பாராளுமன்றம் 2018.10.26 அன்று 2018ஆம் ஆண்டின் தீவிர பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தின் 3ஆம் பிரிவின் கீழ் “இலங்கை அரசாங்கம், 2018ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க தீவிர பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தின் ஏற்பாடுகளில் குறித்துரைக்கப்பட்டவாறான அத்தகைய நோக்கங்களுக்காக ரூ.310.0 பில்லியனை விஞ்சாத தொகையொன்றினை கடன் மூலமாக இலங்கைக்கு உள்ளேயோ அல்லது வெளியிலேயோ திரட்டுவதற்கான தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது.”

 இலங்கை அரசாங்கம் அதன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயங்களில் குறித்துரைக்கப்பட்ட வெளிநின்ற படுகடன் பொறுப்புக்களை முழுமையாக அறிந்துள்ளது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அதிர்வுகளின் சாத்தியமான தாக்கங்கள் காணப்படுகின்றமைக்கு மத்தியிலும் படுகடன் உறுதிப்பாட்டையும் பேரண்ட பொருளாதார உறுதித்தன்மையையும் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் நாட்டின் பொதுப்படுகடன் தோற்றப்பாட்டையும் முன்மதியுடைய தன்மையினையும் முகாமைப்படுத்துவதற்காக சட்ட ரீதியான கட்டமைப்பொன்றினை நிறுவனமயப்படுத்துவது அவசியமானதென்ற நோக்குடன் பாராளுமன்றம் 2018 மாச்சில் தீவிர பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தினை நிறைவேற்றியது. தீவிர பொறுப்பு முகாமைத்துவச் சட்டம் 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டம், உள்நாட்டுத் திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 417), பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 420) மற்றும் 1957ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க வெளிநாட்டுக் கடன் சட்டம் என்பன உள்ளிட்ட தொடர்பான சட்டங்களின் நியதிகளில், பொதுப்படுகடனை முகாமைப்படுத்துவதற்காக இலங்கைக்குள்ளேயோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு தீவிர பொறுப்பு முகாமைத்துவச் சட்டம் சட்ட ரீதியான கட்டமைப்பினை வழங்குகிறது.

 

முழுவடிவம்

Published Date: 

Friday, October 26, 2018