Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் வைப்பு உடமையாளர்களுக்கான கொடுப்பனவு

இது ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமகால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி என்பன தொடர்பான 2018.01.02 திகதியிடப்பட்ட பத்திரிகை அறிவித்தலுக்கு மேலதிகமானதாகும்.
 

ரூபாவின் தேவையற்ற தேய்வினைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்திருக்கிறது

இலங்கை ரூபாவின் மீது நாணய அழுத்தத்தினை தேவைப்படுத்துகின்ற அடிப்படை அம்சங்கள் எதுவும் காணப்படவில்லை. தற்பொழுது மொத்த வெளிநாட்டு ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 9.1 பில்லியனாக ஆரோக்கியமான மட்டத்தில் காணப்பட்டதுடன் உண்மைத்தாக்கமுள்ள செலாவணி வீத சுட்டெண்கள் நாணயம் போட்டித்தன்மையுடையதாக விளங்குவதனை எடுத்துக்காட்டின.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் - 2018 ஏப்பிறல்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மாச்சு மாதத்திலிருந்து 20.1 சுட்டெண் புள்ளிகள் குறைவடைந்து ஏப்பிறல் மாதத்தில் 45.5 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்வதன் மூலம் சரிவடைந்திருந்தது. முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட உயர் மட்டத்திலான நடவடிக்கைகளை தொடர்ந்து ஏப்பிறல் மாதத்தில் காணப்பட்ட புத்தாண்டு விடுமுறைகள் தயாரிப்பு நடவடிக்கைகளை பின்னோக்கி இழுத்தத்துடன் முன்னைய வருடங்களில் அவதானிக்கப்பட்ட போக்கிற்கு ஏற்ற விதத்திலும் காணப்பட்டது. ஏப்பிறல் மாதத்தில் கொ.மு.சுட்டெண்ணில் காணப்பட்ட சரிவிற்கு உற்பத்திகள் மற்றும் புதிய கட்டளைகள் துணைச்சுட்டெண்களில் ஏற்பட்ட சரிவுகளே பெரிதும் காரணமாக அமைந்தன. கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை துணைச்சுட்டெண்களும் இம்மாதகாலப்பகுதியில் குறைவடைந்திருந்தன. மேலும், நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரம் இம்மாதகாலப்பகுதியில் மெதுவடைந்ததுடன் நிரம்பலர்கள் குறைந்தளவில் பரபரப்பாக காணப்பட்டமையினை பகுதியளவில் சுட்டிக்காட்டுகின்றது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2018 பெப்புருவரி

சுற்றுலா வருகைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சி, பங்குப் பரிவர்த்தனைக்கான தொடர்ச்சியான தேறிய வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் என்பனவற்றிற்கு மத்தியிலும் வர்த்தகப் பற்றாக்குறையில் குறிப்பிடத்தக்க விரிவு காணப்படுகின்றமை 2018 பெப்புருவரியில் ஏற்றுமதித் துறைச் செயலாற்றத்தின் முக்கிய பண்பாகக் காணப்பட்டது. ஏறத்தாழ 3½  ஆண்டு கால ஒட்டுமொத்த வணிக இறக்குமதிகளில் மிக விரைந்த அதிகரிப்பிற்கு பின்னால் முக்கிய தூண்டுதலாக தங்க இறக்குமதிகளில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்புக் காணப்பட்டதுடன் இது, 2018 பெப்புருவரியில் வர்த்தகப் பற்றாக்குறை மேலும் விரிவடைய வழிவகுத்தது. 2018 சனவரியிலிருந்து அவதானிக்கப்பட்ட வளர்ச்சி உத்வேகத்தின் தொடர்ச்சியாக சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் 2018 பெப்புருவரியில் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தன. எனினும், சனவரியில் காணப்பட்ட வளர்ச்சியினைத் தொடர்ந்து, 2018 பெப்புருவரியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் வீழ்ச்சியடைந்தன. சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு பங்குப் பரிவர்த்தனையில் வெளிநாட்டு முதலீடுகளின் தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்து 2018 பெப்புருவரியில் அரச பிணையங்கள் சந்தையில் ஏற்பட்ட தேறிய வெளிப்பாய்ச்சலை சமநிலைப்படுத்துவதற்கு உதவியிருக்கிறது.

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மாற்றமின்றிப் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2018 மே 10ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்தது. இதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதமும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதமும் முறையே 7.25 சதவீதத்திலும் 8.50 சதவீதத்திலும் தொடர்ந்தும் காணப்படும். சபையினது இத்தீர்மானத்தின் நோக்கம் யாதெனில், நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டத்தில உறுதிப்படுத்துவதும் அதன் மூலம் இலங்கைப் பொருளாதாரத்தின் சாதகமான வளர்ச்சித் தோற்றப்பாட்டிற்குப் பங்களிப்பதுமேயாகும்.

இலங்கையின் பொருளாதாரச் செயலாற்றத்திலும் இயலாற்றலிலும் வெளிநாட்டு ஆர்வம் நம்பிக்கைக்கான சமிக்ஞையினை காண்பிக்கின்றது.

இலங்கைப் பொருளாதாரத்தின் செயலாற்றம் தொடர்பில் அண்மைய நாட்களில் கடுமையான கரிசனைகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இதன் பின்னணியில், பன்னாட்டு மூலதனச் சந்தையிலிருந்து இலங்கையின் பொருளாதாரத்திற்கான வெளிநாட்டு ஆதரவு மட்டத்தினை மதிப்பிடுவது பயன்மிக்கதாகும். பன்னாட்டு மூலதனச் சந்தைகள் தமது கணிப்பீடுகளில் வளைந்து கொடுக்காமையினால் இது, இலங்கையின் பொருளாதாரத்தின் ஆரோக்கியம் பற்றிய சுயாதீன அளவீட்டுக்கருவியொன்றாகவிருக்கும்.

 

Pages

சந்தை அறிவிப்புகள்