காணி விலைச் சுட் டெண் - 2018இன் முதலரையாண்டு

உண்மைச் சொத்துத் துறையின் அபிவிருத்திகளைக் கண்காணிக்கும் பொருட்டு இலங்கை மத்திய வங்கியானது பல குறிகாட்டிகளைத் தொகுத்து பகுப்பாய்வு செய்கிறது. இதன்படி, காணி விலைச் சுட்டெண் (அடிப்படை ஆண்டு: 1998) 1998இலிருந்து 2008 வரை ஆண்டுதோறும் 2009 – 2017 காலப்பகுதியில் அரையாண்டிற்குகொரு தடவையும் தொகுக்கப்பட்டதுடன் அது கொழும்பு மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளின் 50 நிலையங்களை உள்ளடக்கியிருந்தது. உண்மைச் சொத்துத் துறையில் அண்மையில் ஏற்பட்ட அபிவிருத்திகளின் காரணமாக காணி விலைகளைக் கண்காணிக்கும் முக்கியத்துவம் அதிகரித்து வருவதனால் காணி விலைச் சுட்டெண்ணின் புவியியல் ரீதியான உள்ளடக்கப்படும் பிரதேசம் கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கிய 82 நிலையங்களை உள்ளடக்கும் விதத்தில் விரிவாக்கப்பட்டிருப்பதுடன் இவ்விரிவுபடுத்தலை உள்ளடக்கும் விதத்தில் அதன் அடிப்படையாண்டு 1998இலிருந்த 2017இன் முதலரைப்பகுதிக்குத் திருத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட உள்ளடக்கத்துடன் கூடிய காணி விலைச் சுட்டெண் 2017இலிருந்து அரையாண்டுக்கொரு தடவை கிடைக்கத்தக்கதாகவுள்ளது.

காணிப் பயன்பாட்டின் பல்லினத்தன்மையைக் கருத்திற் கொண்டு ஒரே விதமான சீர்மை அமைப்பினைப் பேணுவதற்காக வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணிகளுக்காக அரச மதிப்பீட்டுத் திணைக்களத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ஒரு பேர்ச்சு வெற்றுக் காணிக்கான விலையினைப் பயன்படுத்தி மூன்று துணைச் சுட்டெண்கள் வௌ;வேறாகக் கணிக்கப்பட்டுள்ளன. இம்மூன்று துணைச் சுட்டெண்களினதும் சராசரியினைக் கருத்திற் கொண்டு ஒட்டுமொத்த காணிவிலைச் சுட்டெண் கணிக்கப்படுகிறது.

 

முழுவடிவம்

Published Date: 

Thursday, October 25, 2018