Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

பன்னாட்டு நாணய நிதியம் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் ஐ.அ.டொலர் 164.1 மில்லியன் கொண்ட ஆறாவது தொகுதிக் கடனை விடுவிக்கிறது

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ், பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை ஐந்தாவது மீளாய்வினை நிறைவுசெய்ததுடன் சிஎஉ 118.5 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 164.1 மில்லியன்) கொண்ட ஆறாவது தொகுதியை பகிர்ந்தளிப்பதற்கு ஒப்புதலளித்திருக்கிறது. நிறைவேற்றுச் சபை ஒழுங்கினை ஓராண்டினால் 2020 யூன் வரை நீடிப்பதற்கும் எஞ்சிய பகிர்ந்தளிப்புக்களை மீள்கட்டப்படுத்துவதற்கும் ஒப்புதல் அளித்திருக்கிறது.

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனங்கள், துணை - துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துக்களின் விற்பனை

இலங்கை மத்திய வங்கி, 2017இன் பிற்பகுதியில் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டினால் எதிர்நோக்கப்பட்ட கடுமையான திரவத்தன்மைத் தடைகள் உட்பட, 2011 இலிருந்து கம்பனியில் இடம்பெற்ற பல்வேறுபட்ட ஒழுங்கீனங்களையும் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளையும் மேற்கொண்டது.

ஈரிஐ பினான்ஸ்சின் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய திரவத்தன்மை நிலைமையினையும் வைப்பாளர்களுக்கான மீள்கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியாத நிலைமையினையும் பரிசீலனையில் கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கம்பனியின் தொழிற்பாடுகளை மட்டுப்படுத்தும் விதத்தில் 2018.01.02ஆம் திகதியன்று பணிப்புரைகளை விடுத்தது. மேலும், கம்பனியினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவின்படி, விற்பனைப் பெறுகைகளைப் பயன்படுத்தி வைப்பாளர்களுக்கு மீள்கொடுப்பனவுகளை மேற்கொள்ளச் செய்யும் நோக்குடன், நாணயச் சபை ஈரிஐ பினான்ஸ்சின் அடையாளம் காணப்பட்ட துணை நிறுவனங்கள், துணை – துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துக்களை ஐ.அ.டொலர் 75 மில்லியன் கொண்ட தொகைக்கு விற்பனை செய்வதற்கான சம்மதத்தினை 2018.02.21 அன்று வழங்கியது.

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வட்டி வீதங்களைக் குறைக்கவும் மற்றும் கடன் பாய்ச்சலை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்

இலங்கை மத்திய வங்கி நியதி ஒதுக்கு வீதத்தைக் குறைப்பதன் மூலம் வட்டி வீதங்களை குறைப்பதற்கும் சந்தைத் திரவத்தன்மையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் (உரிமம் பெற்ற வங்கிகள்) மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் என்பன அதிக வட்டி வீதங்களைக் கடன்களுக்கு அறவிடுவதையும் அதிகப்படியான வட்டி வீதங்களை வைப்புகளுக்கு வழங்குவதையும் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக பணவீக்கம் மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புக்கள் நன்றாக கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இலங்கையின் உண்மை வட்டி விகிதங்களைப் பிராந்தியப் பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் அதிகப்படியானதாகக் காணப்படுகின்றன.

2018ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை

இவ்வாண்டுப்பகுதியில் காணப்பட்ட தாழ்ந்த பணவீக்க சூழலுக்கிடையிலும் உண்மை பொருளாதார நடவடிக்கைகளில் காணப்பட்ட மிதமான விரிவாக்கத்துடன் உலகளாவிய மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களினால் இலங்கைப் பொருளாதாரத்தின் பாதிக்கப்படக்கூடியதன்மை 2018இல் அதிகளவிற்குப் புலனாகக் கூடியதொன்றாகவிருந்தது. 2018இல் உண்மை மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சி முன்னைய ஆண்டின் 3.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 3.2 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. இவ்வளர்ச்சிக்கு 4.7 சதவீதத்தினால் விரிவடைந்த பணிகள் நடவடிக்கைகளும் 4.8 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்த வேளாண்மை நடவடிக்கைகளில் ஏற்பட்ட மீட்சியும் பெருமளவிற்கு ஆதரவாக அமைந்தன. கட்டடவாக்கம் சுருக்கமடைந்தமையின் முக்கிய விளைவாக இவ்வாண்டுப்பகுதியில் கைத்தொழில் நடவடிக்கைகள் 0.9 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவிற்கு மெதுவடைந்தன. செலவின அணுகுமுறையின்படி, நுகர்வு மற்றும் முதலீட்டுச் செலவினம் இரண்டும் வளர்ச்சிக்கு ஆதரவளித்தன.

2019 மாச்சில் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் முன்னைய ஆண்டின் தொடர்பான மாதத்தில் நிலவிய தாழ்ந்த தளத்தின் காரணமாக 2019 பெப்புருவரியின் 2.4 சதவீதத்திலிருந்து 2019 மாச்சில் 2.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதேவேளையில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், உணவு மற்றும் உணவல்லாப் பணவீக்கமானது 2019 மாச்சில் -2.3 சதவீதம் மற்றும் 7.1 சதவீதங்களைப் பதிவுசெய்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 மாச்சில் 1.7 சதவீதத்தில் மாற்றமின்றியிருந்தது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 பெப்புருவரி

2019 பெப்புருவரியில் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஐ.அ.டொலர் 451 மில்லியனுக்கு மேலும் குறுக்கமடைந்து ஐந்து ஆண்டுகளுக்கும் கூடுதலான காலப்பகுதியில் மிகக்குறைந்த மாதாந்த பற்றாக்குறையினைப் பதிவுசெய்தது.

வர்த்தகப் பற்றாக்குறையில் காணப்பட்ட கணிசமான குறைப்பிற்கு இறக்குமதிச் செலவினம் 27.6 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில்) குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தமையும் 2019 பெப்புருவரியில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 7.2 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில்) அதிகரித்தமையும் காரணங்களாக அமைந்தன.

சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் தொடர்ந்தும் அதன் உத்வேகம் மிக்கச் செயலாற்றத்தினைக் காட்டி, 2018 திசெம்பருக்குப் பின்னர் மாதமொன்றிற்கு 240,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலா வருகைகளைப் பதிவுசெய்து, 2019 பெப்புருவரியில் 7.0 சதவீதம் கொண்ட வளர்ச்சியை (ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில்) பதிவுசெய்தது.

முழுவடிவம்

Pages