2015 பெப்புருவரி 01 - 2016 மாச்சு 31 திகதி வரையான காலப்பகுதியின் போது திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான சனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் மீதான முன்னேற்றம்

மத்திய வங்கியனாது, திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான சனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் திறைசேரி முறிகள் வழங்கல் பற்றிய பரிந்துரைகளுக்கிசைவாக இலங்கை மத்திய வங்கியின் தொழிற்பாடுகளின் பல்வேறு விடயப்பரப்புக்களில் வெளிப்படைத்தன்மையினையும் பொறுப்புக்கூறலினையும் வலுப்படுத்துவதற்கு பல வழிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றில் சில ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதனை பொதுமக்களுக்கு தெரிவிக்கவிரும்புகின்றது.

மத்திய வங்கி தொழிற்படுகின்ற சட்ட ரீதியான கட்டமைப்பு தொடர்பில் மத்திய வங்கிக்கு ஏற்புடையதான பல சட்டங்களை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாணயவிதிச் சட்டம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் தொடர்பில் திருத்தங்கள் முறைப்படுத்த்தப்பட்டு வருகின்றன. 

திறைசேரி முறிகளுக்காக புதிய ஏல முறைமையொன்றினை அறிமுகப்படுத்துவதனூடாக அரசாங்கப் பிணையங்கள் வழங்கலுடன் தொடர்புபட்ட தொழிற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டன. திறைசேரி உண்டியல்களுக்கும் இதையொத்த முறைமையொன்று முறைப்படுத்தப்பட்டு வருகின்றது. விலைக்குறிப்பீட்டிற்கு முன்னரான கூட்டங்கள் கிரமமாக நடைபெறுகின்றன, ஏல கலண்டர் உரிய காலத்திற்கு முன்னரே அறிவிக்கப்படுவதுடன் மொத்த முன்வைக்கப்பட்ட மொத்ததொகைக்கு மேலதிகமாக எத்தொகையினையும் ஏற்றுக்கொள்ளாத கொள்கையொன்று பின்பற்றப்படுகின்றது. வழங்கல் செயன்முறையுடன் தொடர்புபட்ட உள்ளகக் கட்டுப்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொழிற்பாட்டுக் கையேடு இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. 

ஊழியர் சேம நிதியத்தின் நிதிய முகாமைத்துவத் தொழிற்பாடானது ஆற்றல்வாய்ந்த கொள்கைக்கூற்று, முதலீட்டு மற்றும் வர்த்தகப்படுத்தல் வழிகாட்டல், வெளிப்படைத் தன்மையினையும் பொறுப்புக்கூறும் தன்மையினையும் அதிகரிப்பதற்கும் அதிகரிக்கப்பட்ட உள்ளகக் கட்டுப்பாட்டுடன்கூடிய தற்போது செயற்பாட்டிலுள்ள இற்றைப்படுத்தப்படட தொழிற்பாட்டுக் கையேடு என்பவற்றை நடைமுறைப்படுத்தியதன் மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. 

வளங்களை அதிகரிப்பதற்கு வழிமுறைகளுடன்கூடிய சட்ட ரீதியான தொழிற்பாடு வலுப்படுத்தப்பட்டு வருவதுடன் உள்ளகக் கணக்காய்வுத் தொழிற்பாடானது இடர்நேர்வு வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்ட நியதிகளில் அதன் செயற்பரப்பினையும் ஆழத்தினையும் மேம்படுத்தியுள்ளது. அனைத்து ஊழியர்களுக்குமாக தகவல் தெரிவித்தல் கொள்கையொன்றும் நடத்தைக் கோவையொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

பங்குரிமை மூலதனம் மற்றும் திறைசேரி முறிகள் நிதியமொன்றில் முதலீடுசெய்தல், திறைசேரி முறிகளை வழங்குதல், மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு மேற்பார்வைசெய்யப்படுகின்ற சில தெரிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் தொழிற்பாடுகள் போன்ற பல்வேறு விடயப்பரப்புகளில் பல தடயவியல் கணக்காய்வுகளுக்கான கொள்வனவுச் செயன்முறை முன்னெடுக்கப்படுகின்றது. தடயவியல் கணக்காய்வுகள் உலகளாவிய நடைமுறையுடன்கூடிய நிறுவனங்களினால் நடாத்தப்படவுள்ளன. பல உள்ளக ஒழுக்காற்று விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

மத்திய வங்கியினதும் ஊழியர் சேம நியத்தினதும் நிதிச் செலவில் முதனிலை வணிகர் ஒருவரினால் ஈட்டப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான இலாபங்களை மீள அறவிடுவதற்கு சிவில் மீள் அறவீட்டு வழக்கு நடவடிக்கையொன்று தொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட முறைபாடொன்றின் பேரில் சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளினால் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.   

Published Date: 

Monday, October 15, 2018