Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2017 யூன்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் யூன் மாதத்தில் 56.1 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 மே மாதத்துடன் ஒப்பிடும் போது 1.8 சுட்டெண் புள்ளிகளை கொண்ட ஒரு குறைவாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகள் 2017 யூன் மாதத்தில் ஒரு குறைவான வேகத்தில் விரிவடைந்தமையினை குறித்து காட்டுவதுடன் இதற்கு பாதகமான வானிலை நிலைமைகளினால் பகுதியளவில் செல்வாக்கு செலுத்தப்பட்ட புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி துணைச்சுட்டெண்களில் ஏற்பட்ட ஒரு குறைவே பிரதான காரணமாக அமைந்தன. இதன் விளைவாக மேலதிகமான இருப்பு மட்டங்கள் உருவாக்கப்பட்டதுடன் நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரத்தில் ஒரு சிறிதளவான குறைவும் உணரப்பட்டது. இருப்பினும், தொழில்நிலை மட்டமானது முன்னைய மாதத்தில் உணரப்பட்ட சுருக்கத்திலிருந்து மீட்சியடைந்து ஒரு மேம்பாட்டினை காட்டியது. மேலும், கொ.மு.சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை பதிவு செய்து ஒரு ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை காட்டியது. இதற்கு மேலும், நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கான மேம்பாடொன்றினை குறித்துக்காட்டியது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - ஏப்பிறல் 2017

2017 ஏப்பிறலில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை ஒரு கலப்புச் செயலாற்றத்தினைக் காட்டியது. 2017 ஏப்பிறலில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் அதிகரித்த போதிலும், இறக்குமதிச் செலவினங்களின் உயர்ந்தளவிலான வளர்ச்சியானது வர்த்தகப் பற்றாக்குறையில் ஓர் விரிவாக்கத்தினைத் தோற்றுவித்தது. 2017 ஏப்பிறலில் சுற்றுலா வருவாய்கள் அதிகரித்தமைக்கு மத்தியிலும் வர்த்தகப் பற்றாக்குறை விரிவாக்கத்துடன் கூடிய தொழிலாளர் பணவனுப்பல்களின் வீழ்ச்சியானது வெளிநாட்டு நடைமுறைக் கணக்கின் செயலாற்றத்தினை மிதமடையச் செய்தது. இருப்பினும், சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கானது 2017 ஏப்பிறலில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை மற்றும் அரச பிணையங்கள் சந்தை போன்றவற்றுக்கான தொடர்ச்சியான வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் மூலம் ஆதரவளிக்கப்பட்டன.

முழு உரை

Pages