பன்னாட்டு நாணய நிதியம் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மீளாய்வு தொடர்பில் அலுவலர் - மட்டத்திலான உடன்படிக்கையை அடைந்துள்ளது

மனுவெல்லா கொறேட்டி தலைமையிலான பன்னாட்டு நாணய நிதிய அலுவலர் குழுவொன்று, மூன்று வருட விரிவாக்கப்பட்ட நிதி வசதியினால் துணைபுரியப்பட்ட இலங்கைப் பொருளாதாரத்தின் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஐந்தாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்களுக்காக 2019 பெப்புருவரி 14-28 வரையான காலப்பகுதியில் கொழும்பிற்கு விஜயம் செய்தது. விஜயத்தின் இறுதியில் செல்வி. கொறேட்டி பின்வருமாறான அறிக்கையை வெளியிட்டார்:

“2018இன் இறுதியில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியினைத் தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் அவர்களின் பொருளாதார சீர்த்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தினை மீண்டும் அதே பாதையில் கொண்டுசெல்வதற்கு தற்போது மேற்கொண்டுவருகின்ற முயற்சிகளை பன்னாட்டு நாணய நிதியத்தின் குழு வரவேற்கின்றது. குழுவானது ஐந்தாவது மீளாய்வு மற்றும் பொருளாதார சீர்த்திருத்த நிகழ்ச்சி நிரலை நிறைவுசெய்வதற்காக அதிகளவான நேரத்தை அனுமதித்தல், விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஒழுங்குபடுத்தலினை மற்றுமொரு ஆண்டிற்கு விரிவாக்குவதற்கு, எஞ்சிய பகிர்ந்தளிப்புக்களை இக்காலப்பகுதியில் சமமாக பரவலடைவதனை அனுமதிப்பதற்காக அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோள் என்பவை தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் அலுவலர் மட்டத்தில் புரிந்துணர்வினை அடைந்துள்ளது. விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்துடன் இணங்கிச்செல்லும் வகையில் பாராளுமன்றத்தில் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் திட்டமிடப்பட்ட சமர்ப்பிப்பிற்கு உட்பட்டு சபையானது 2019 மே மாதத்தில் அதனது ஐந்தாவது மீளாய்வினை முடிவுறுத்துவதற்கான இலங்கையின் வேண்டுகோளை கருத்திற்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இம்மீளாய்வு தொடர்பில் நிலுவையிலுள்ள அனைத்துவிதமான நடவடிக்கைகள் மற்றும் அமைப்பியல்சார் அடிப்படை அளவுக்குறி என்பவற்றை அடுத்துவரும் சில வாரங்களில் முடிவுறுத்துவதற்கு அதிகாரிகள் படிமுறைகளை எடுத்துவருகின்றனர்.

முழுவடிவம் 

Published Date: 

Friday, March 1, 2019