நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு இலங்கை அடைந்த முன்னேற்றங்களை அங்கீகரித்திருக்கிறது

பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒடுக்குதல் தொடர்பான உலகளாவிய கொள்கையை நிர்ணயிப்பவரான நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு இலங்கை அதன் நடவடிக்கைத் திட்டத்தினை நிறைவுசெய்திருக்கின்றது என்பதனை ஆரம்பத்தில் தீர்மானித்ததுடன் இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒடுக்குதல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதனை சரிபார்ப்பதற்கான தலத்திலான மதிப்பீடொன்றின் தேவைப்பாட்டினை கருத்திற்கொண்டு அதனை ஆரம்பித்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இது எதிர்காலத்தில் வலுவான நடைமுறைப்படுத்தல் இடம்பெறுவதற்கான அரசியல் கடப்பாட்டிற்கு அவசியமான ஒன்றாகவும் காணப்பட்டது. தீர்மானமானது, 2019 பெப்புருவரி 20 - 22 காலப்பகுதியில் பரிஸில் நடைபெற்ற நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் முழுமையான சமவாயத்தில் எடுக்கப்பட்டது. 

2016 ஒத்தோபரில், பணம் தூயதாக்கலுக்கெதிரானஃ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒடுக்குதல் தொடர்பில் நாட்டில் அடையப்பெற்ற காத்திரமான முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்கான நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் பன்னாட்டு ஒத்துழைப்பு மீளாய்வுக் குழுவின் மீளாய்வொன்றிற்கு இலங்கை உட்படுத்தப்படவேண்டுமென அறிவித்தது. அநேக கலந்துரையாடல் மற்றும் முன்னேற்ற அறிக்கைகளின் பின்னர், நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு, இலங்கை பன்னாட்டு ஒத்துழைப்பு, மேற்பார்வை, சட்ட ஆட்கள் மற்றும் ஒழுங்குகள், ஆயுதப் பெருக்கம் மீதான இலக்கிடப்பட்ட நிதியியல் தடைகள் (வடகொரியா மற்றும் ஈரான்) ஆகிய நான்கு துறைகளில் போதுமான முன்னேற்றத்தினை அடையவில்லை என்பதனை எடுத்துக்காட்டியது. இதன் விளைவாக, நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு 2017 ஒத்தோபரில் ஆஜன்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸில் நடைபெற்ற அதன் முழுநிறைவான சமவாயத்தில் நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் இணங்குவிப்பு ஆவணத்தில் உபாய பணம் தூயதாக்கலுக்கெதிரானஃ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒடுக்குதல் முறைப்பாடுகளுடன்கூடிய ஆட்சிப் பிரதேசமாக இலங்கையினை அட்டவணைப்படுத்தியது. இவ்வாவணம் பொதுவாக 'சாம்பல் பட்டியல்" (Grey List) என அறியப்படுகின்றது. இவ்வாறு பட்டியலிடப்பட்டமையினைத் தொடர்ந்து அடையாளம் காணப்பட்ட உபாயக் குறைபாடுகளை தீர்ப்பதற்காக நேரக் கட்டமைப்புடன்கூடிய நடவடிக்கைத் திட்டமொன்று இலங்கைக்கு வழங்கப்பட்டது.

2017 நவெம்பரில் பட்டியலிடப்பட்டதனைத் தொடர்ந்து, நிதியியல் உளவறிதல் பிரிவு ஏனைய ஆர்வலர்களுடன் சேர்ந்து நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் நடவடிக்கைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குக் காத்திரமானதும் வெளிப்படையானதுமான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இலங்கை, நடவடிக்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அடையப்பெற்ற முன்னேற்றங்களை நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவிற்கு கிரமமாக அறிவித்தது. நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் முழுமையான சமவாயத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் நடவடிக்கைத் திட்டங்களின் நடவடிக்கைகளைச் சரிபார்ப்பதற்காகவும் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒடுக்குதல் என்பனவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கையின் அரசியல் கடப்பாடுகளைக் கண்டறிந்துகொள்வதற்காகவும் மதிப்பீட்டாளர் குழுவொன்று 2019 மேமாத காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்து தனியார் துறையினர் மற்றும் அரசியல் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்பான ஆர்வலர்களைச் சந்திக்கும். தலத்திலான பரீட்சிப்புக் குழு அவர்களது விதந்துரைப்புக்களை 2019 யூனில் நடைபெறுவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ள நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் முழுமையான சமவாயத்திற்கு வழங்கும். இது 2019 யூனில் இலங்கை சாம்பல் பட்டியலிலிருந்து வெளியேறுவதற்கு வழிவகுக்கக்கூடும்.

இலங்கை தொடர்பில் நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவினால் விடுக்கப்பட்ட முழுமையான அறிக்கை வருமாறு;

இலங்கை பணம் தூயதாக்கலுக்கெதிரானஃ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒடுக்குதல் அமைப்பின் காத்திரமான தன்மையினை வலுப்படுத்துவதற்கும் காணப்படக்கூடிய ஏதேனும் தொழில்நுட்பக் குறைபாடுகளைக் கட்டுப்படுத்தவதற்குமாக, 2017 நவெம்பரிலிருந்து நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவுடனும் ஆசிய பசுபிக் குழுமத்துடனும் இணைந்து தொழிற்படுவதற்கான உயர்மட்ட அரசியல் கடப்பாடொன்றினை உருவாக்கியது. இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒடுக்குதல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதனை சரிபார்ப்பதற்கான தலத்திலான மதிப்பீடொன்றின் தேவைப்பாட்டினை கருத்திற்கொண்டு அதனை ஆரம்பித்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இது எதிர்காலத்தில் வலுவான நடைமுறைப்படுத்தல் இடம்பெறுவதற்கான அரசியல் கடப்பாட்டிற்கு அவசியமான ஒன்றாகவும் காணப்பட்டது. குறிப்பாக, இலங்கை பின்வரும் முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறது. 1) பரஸ்பர ஏற்றுக்கொள்ளல் அடிப்படையின் மீது வழங்கப்படக்கூடிய பரஸ்பர சட்ட உதவிகள் வழங்குவதனை உறுதிப்படுத்தும் விதத்தில் குற்றவியல் விடயச் சட்டத்தில் பரஸ்பர உதவிகளுக்கு திருத்தங்களை இயற்றுதல். 2) குறித்துரைக்கப்பட்ட நிதியல்லா வியாபாரம் மற்றும் தொழில்சார் நிபுணர்களுக்கு வாடிக்கையாளரை நுணுக்கமாக அறிந்துகொள்ளும் விதியினை விடுத்தல், ஏதேனும் தேவையான வழிகாட்டல்களை வழங்குதல் மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகள் மூலமாக இவ்விதியின் நடைமுறைப்படுத்தல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதனை உறுதிப்படுத்தல். 3) இடர்நேர்வினை அடிப்படையாகக் கொண்ட மேற்பார்வையினை அதிகரித்தல் மற்றும் பொருத்தமான விதத்தில் சரியான மற்றும் அறிவுரை வழங்குதல் மூலமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தடைகளை விதித்தல் உட்பட நிதியியல் நிறுவனங்களுக்கும் உயர் இடர்நேர்வுகளைக் கொண்ட குறித்துரைக்கப்பட்ட நிதியல்லா வியாபாரம் மற்றும் தொழில்சார் நிபுணர்களுக்கும் இதனை விரிவாக்குதல். 4) தகுதிவாய்ந்த அதிகாரிகள், சட்ட ரீதியான ஆட்கள் தொடர்பில் சரியான நேரத்தில் பயன்தரும் சொத்தாண்மைத் தகவல்களை பெற்றுக்கொள்வதனை இயலச்செய்யும் விதத்தில் விடய ஆய்வுகளையும் புள்ளிவிபரங்களையும் எடுத்துக்காட்டுதல். 5) திருத்தப்பட்ட நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டமொன்றினை விடுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் என்பன ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது என்பதனை எடுத்துக்காட்டுதல் அத்துடன் 6) ஈரான் தொடர்பான ஐக்கிய நாடுகளின் தொடர்பான நடைமுறைப்படுத்துலுக்கான இலக்கிடப்பட்ட நிதியியல் தடைகளை நிறுவுதல், நடைமுறைப்படுத்தல் என்பன ஆரம்பிக்கப்பட்டிருப்பதனை எடுத்துக்காட்டுதல் மற்றும் கொரிய சனநாயக சோசலிசக் குடியரசு தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒழுங்குவிதிகளின் நடைமுறைப்படுத்தல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதனை எடுத்துக்காட்டும் நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டிருக்கிறது.  

 

Published Date: 

Monday, February 25, 2019