Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடனான மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின் அத்துடன் ஏற்றுக்கொள்ளல் நியதிகளுக்கெதிரான ஆவணங்களின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசியமற்ற/ அவசரமற்ற பொருட்களின் இறக்குமதிக்கெதிரான எல்லை வைப்புத்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2021 செத்தெம்பர் 08 அன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் உடனடியாகச் செயற்படும் வகையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடனான மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின் அத்துடன் ஏற்றுக்கொள்ளல் நியதிகளுக்கெதிரான ஆவணங்களின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசியமற்ற/ அவசரமற்ற பொருட்களின் இறக்குமதிக்கெதிராக 100 சதவீத காசு எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை விதிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. காசு எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை விதிப்பதற்கான தீர்மானம், குறிப்பாக, ஊகவியாபாரத் தன்மையிலான மிதமிஞ்சிய இறக்குமதிகளை ஊக்கமிழக்கச்செய்வதன் வாயிலாக செலாவணி வீத உறுதிப்பாட்டினையும் வெளிநாட்டு நாணயச் சந்தை திரவத்தன்மையினையும் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்குத் துணையளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

காசு எல்லை வைப்புத் தேவைப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள உற்பத்தி வகைகளின் தொகுப்பு 2019, 2020 மற்றும் 2021 இன் இதுவரையிலும் (தற்காலிகமானவை) ஒவ்வொரு வகையின் கீழுமான இறக்குமதிச் செலவினம் பற்றிய தகவல்களுடன் சேர்த்து கீழேயுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

கொவிட்-19 பாதித்த வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகள் மேலும் நீடிக்கப்பட்டிருக்கின்றன

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் புதிய தோற்றம் மற்றும் அதன் காரணமாக கடன்பாட்டாளர்களுக்கேற்பட்ட இடர்பாடுகளைக் கருத்திற்கொண்டு, கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட கடன்பாட்டாளர்களுக்கு 2021.12.31 வரை ஏற்கனவே (2021.08.31 வரை) வழங்கப்பட்ட சலுகைகளை நீடிப்பதனை பரிசீலனையில் கொள்ளுமாறு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளையும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளையும் (உரிமம்பெற்ற வங்கிகள்) இலங்கை மத்திய வங்கி கேட்டுக் கொண்டுள்ளதாக பொதுமக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறது. உரிமம்பெற்ற வங்கிகள் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் வழங்குகின்ற மேலதிகச் சலுகைகள் இலங்கை மத்திய வங்கியால் குறிப்பிடப்பட்ட நன்மைகளிலும் பார்க்க குறையாத விதத்தில் ஒட்டுமொத்த நன்மைகளைக் கொண்டதாக இருத்தல் வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

வெளிநாட்டு நாணயத் தவணை நிதியளித்தல் வசதிக்கான முன்மொழிவுகளுக்கான கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுக்கின்றது

இலங்கை அரசாங்கத்திற்கான வெளிநாட்டு நாணயத் தவணை நிதியிடல் வசதி 2021 மீது வெளியிடப்பட்ட முன்மொழிவுக்கான கோரிக்கையுடன் தொடர்புடைய இணையத் தொடர்புகள் பின்வருமாறு நிதி அமைச்சின் இணையத்தளத்திலும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் காணப்படுகின்றன:

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2021 ஓகத்தில் 6.0 சதவீதத்திற்கு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 யூலையில் 5.7 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 6.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து,  உணவுப் பணவீக்கம்,  (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூலையின் 11.0 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 11.5 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூலையின் 3.2 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 3.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 யூலையின் 4.2 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 4.3 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.

இலங்கை பன்னாட்டு நாணய நிதியத்தின் சிறப்பு எடுப்பனவு உரிமைகளின் ஒதுக்கீடு மற்றும் வங்காளதேச வங்கியுடனான நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாடுகளின் ஆரம்ப பகிர்ந்தளிப்புக்களைப் பெற்றுக்கொள்கின்றது

2021 ஓகத்து மாத காலப்பகுதியில் இலங்கை பன்னாட்டு நாணய நிதியத்தின் உலகளாவிய சிறப்பு எடுப்பனவு உரிமைகள் ஒதுக்கீட்டின் அதன் பகுதியினையும் இலங்கை மத்திய வங்கி மற்றும் வங்காளதேச வங்கிகளுக்கிடையிலான இருபுடை நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாட்டின் கீழ் ஆரம்ப பகிர்ந்தளிப்புக்களையும் பெற்றுக்கொண்டது.
இலங்கையினால் பெறப்பட்ட சிறப்பு எடுப்பனவு உரிமைகள் ஒதுக்கீட்டானது ஐ.அ.டொலர் 787 மில்லியனிற்கு சமனாக இருந்த அதேவேளை, வங்காளதேச வங்கியுடனான நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாடுகளின் கீழ் ஐ.அ.டொலர் 150 மில்லியன் பெற்றுக்கொள்ளப்பட்டது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2021 யூலையில் அதிகரித்துள்ளது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 யூனில் 6.1 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 6.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 யூனின் 9.8 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 11.0 சதவீதத்திற்கு அதிகரித்ததுடன் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 யூனின் 2.9 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 3.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணும் 2021 யூலையில் 5.4 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

Pages

சந்தை அறிவிப்புகள்