இலங்கை மத்திய வங்கி-ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம்-ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பனவற்றிற்கிடையிலான இணையவழி பேரண்ட பொருளாதார மாநாட்டிற்கு இலங்கை மத்திய வங்கி இணை அனுசரணை வழங்கியது

இலங்கை மத்திய வங்கி இலங்கை மத்திய வங்கி-ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம்-ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பனவற்றிற்கிடையிலான இணையவழி பேரண்ட பொருளாதார மாநாட்டிற்குத் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக 2021 செத்தெம்பர் 30ஆம் திகதி அன்று ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம் மற்றும் ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்புடன் கூட்டிணைந்து அனுசரணை வழங்கியது. இவ்வாண்டிற்கான கருப்பொருள் பேரண்ட பொருளாதார உறுதிப்பாட்டின் தோற்றம் பெற்றுவரும் பிரச்சனைகள் என்பதாகும்.

மாநாட்டினை ஆரம்பித்துவைத்த மத்திய வங்கி ஆளுநர் திரு. அஜித் நிவாட் கப்ரால் குறிப்பாக தற்போது உலகளாவிய ரீதியில் உணரப்படுகின்ற தளம்பலடையும்  பொருளாதார மற்றும் நிதியியல் சந்தை நிலைகளுக்கு மத்தியில் சான்றுகளின் அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்வதற்கான ஆய்வின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தினார். முன்னெப்பொழுதுமில்லாத சமூக பொருளாதார சவால்கள் நிறைந்த காலப்பகுதியொன்றில் ஒட்டுமொத்த உலகளாவிய பொருளாதாரமும் செல்லும் போது ஆர்வலர்களுக்கு மத்தியில் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கான தேவையினை ஆளுநர் வலியுறுத்தினார். இத்தன்மையிலமைந்த ஆய்வு நிகழ்வுகள் பொருளாதார பிரச்சனைகளை விரிவாகப் பரீட்சிப்பதற்கான வாய்ப்பினை வழங்குவதுடன் பேரண்ட பொருளாதார உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கான பொதுக் கொள்கை உருவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் தகவலறிந்த பகுப்பாய்வுகளை இயலுமைப்படுத்துமென ஆளுநர் குறிப்பிட்டார். ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையத்தின் பீடாதிபதி மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி  பேராசிரியர் டெட்ஷூ{சி சோனோபி தொடக்க உரையை வழங்கி, விரிவான கொள்கை சார்ந்த மற்றும் கூட்டடிணைந்த ஆய்வின் தேவையினை வலியுறுத்தினார்.

மாநாடானது மத்திய வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம் மற்றும் ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்பிலிருந்தான ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்புக்களின் இரண்டு அமர்வுகளை உள்ளடக்கியிருந்தது. அமர்வுகள் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் திரு. மஹிந்த சிறிவர்தன மற்றும் சிரேஷ்ட பொருளாதார ஆலோசனை நிபுணர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையத்தின் ஆராய்ச்சித் துணைத் தலைவர்  கலாநிதி பீட்டர் ஜே. மோர்கன் ஆகியோரினால் தலைமை தாங்கப்பட்டன.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, October 5, 2021