‘A Step by Step Guide to Doing Business in Sri Lanka’ நூல் வெளியீடு

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் ‘இலங்கையில் வியாபாரம்; செய்வதற்கான படிப்படியான வழிகாட்டல்’ நூலின் ஒன்பதாவது தொடர் பதிப்பு தற்பொழுது பொதுமக்களுக்காக ஆங்கில மொழியில் கிடைக்கப்பெறுகின்றது. வியாபாரச் சமூகத்திற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் தேவையான தகவல்களை உள்ளடக்குகின்ற இந்நூல் அத்தகைய தகவல்களை பெற்றுக்கொள்வதில்  அவர்களின் நேரத்தையும் செலவையும்  மீதப்படுத்த வசதியளிக்கின்றது. இலங்கையில் தொழில்முயற்சியொன்றை தொடங்குதல், தொழிற்படுத்தல் மற்றும் மூடுதல் போன்றவற்றிற்கு ஏற்புடைய வலுவிலுள்ள அனைத்து ஒழுங்குவிதிகளையும் வாய்ப்புமிக்க தொழில்முயற்சியாளர்களுக்கு உபயோகமான ஏனைய தகவல்களையும்  தனியொரு மூலமாக   இக்கையேடு தன்னகத்தே கொண்டுள்ளது.

இக்கையேட்டிலுள்ள தகவல்கள் மூன்று பிரதான அத்தியாயங்களின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன அதாவது, ‘வியாபாரத்தை தொடங்குதல்’, 'வியாபாரத்தின் போதான செயற்பாடுகள்’, ஏனைய செயற்பாடுகள்’ என்பன.  நிறுவனங்கள் தொடர்பிலான அனைத்தையுமுள்ளடக்கிய தகவல்கள், ஆவணப்படுத்தல் தேவைப்பாடுகள், ஒழுங்குமுறைப்படுத்தல் இசைவுத் தேவைப்பாடுகள்,  இணைந்த செலவுகள்  அத்துடன் பயனர்கள்  மேலதிக தெளிவுபடுத்தல்களை பெற உதவுகின்ற தொடர்பு விபரங்கள் போன்றவை இவ்வத்தியாயங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களும் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டு இப்பதிப்பில் கூட்டிணைக்கப்பட்டுள்ளன.

இவ்வெளியீட்டின் இலத்திரனியல் பதிப்பை இலங்கை மத்திய வங்கியின்(http://www.cbsl.gov.lk) என்ற இணையதளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும். அச்சிடப்பட்ட பதிப்பு, சென்றல் பொயின்ட் கட்டடம் (செத்தாம் வீதி, கொழும்பு - 01) என்ற முகவரியில் அமைந்துள்ள விற்பனைக் கருமபீடம், தொலைபேசி இல- 011-2444502; இல.58, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மாவத்தை, இராஜகிரிய என்ற முகவரியில் அமைந்துள்ள வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வுநிலையம், தொலைபேசி இல- 011-2477803; இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகங்கள் (மாத்தறை, மாத்தளை, நுவரெலியா, கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் அநுராதபுரம்) போன்ற இடங்களில் விற்பனைக்கு கிடைக்கப்பெறுகின்றது.

Download PDF

Published Date: 

Tuesday, October 5, 2021