Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2023 செத்தெம்பர்

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2022 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் 2023 செத்தெம்பரில் ஒப்பீட்டளவில் தாழ்ந்தளவிலான ஏற்றுமதி வருவாய்கள் மற்றும் உயர்ந்தளவிலான இறக்குமதிச் செலவினம் என்பவற்றின் இணைந்த தாக்கத்தின் காரணமாக விரிவடைந்தது. 2023 சனவரி தொடக்கம் செத்தெம்பர் வரையான காலப்பகுதியில் ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையானது குறிப்பிடத்தக்களவு தாழ்ந்தளவில் தொடர்ந்தும் காணப்பட்டது.

தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் என்பன முன்னைய ஆண்டின் தொடர்புடைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023 செத்தெம்பரில் குறிப்பிடத்தக்களவு மேம்பாடுகளைப் பதிவுசெய்தன.

சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் 2023 செத்தெம்பரில் முடிவடைகின்ற ஒன்பது மாத காலப்பகுதியில் ஒரு மில்லியனை விஞ்சிப் பதிவுசெய்யப்பட்டன.

அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் முன்னைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் 2023 செத்தெம்பர் மாத காலப்பகுதியில் தாழ்ந்தளவிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன.

இலங்கை மத்திய வங்கி-ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம்-ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பவற்றிற்கிடையிலான நான்காவது இணைந்த செயலமர்விற்கு இலங்கை மத்திய வங்கி இணை அனுசரணை வழங்கியது

இலங்கை மத்திய வங்கி-ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம்-ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பவை தொடர்ச்சியாக நான்காவது தடவையாகக் கூட்டிணைந்து 2023 ஒத்தோபர் 27ஆம் திகதியன்று மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்டர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்விற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம் மற்றும் ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பவற்றுடன் இணைந்து இலங்கை மத்திய வங்கி இணை அனுசரணை வழங்கியது.  இவ்வாண்டிற்கான மாநாடானது ‘ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் நாணயக் கொள்கை மற்றும் மத்திய வங்கித்தொழில் பிரச்சனைகள்’ எனும் கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் முதலாவது மீளாய்வு தொடர்பிலான அலுவலர் மட்ட உடன்படிக்கையினை பன்னாட்டு நாணய நிதியம் எட்டியுள்ளது

48 மாத காலம் கொண்ட விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட செயற்றிட்டத்தின் முதலாவது மீளாய்வினை நிறைவுசெய்வதற்கான பொருளாதாரக் கொள்கைகள் குறித்த அலுவலர் மட்ட உடன்படிக்கையினை பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களும் இலங்கை அதிகாரிகளும் எட்டியுள்ளனர். பன்னாட்டு நாணய நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை என்பவற்றினால் மீளாய்விற்கான ஒப்புதலளிக்கப்பட்டவுடன் சி.எ.உ 254 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 330 மில்லியன்) தொகைக்கான நிதியிடல் இலங்கைக்குக் கிடைக்கக்கூடியதாகவிருக்கும்.

பேரண்டப்பொருளாதார கொள்கை மறுசீரமைப்புக்கள் பலனளிக்கத் தொடங்கியுள்ளதுடன் பொருளாதாரம் உறுதிப்பாட்டின் தற்காலிக சமிக்ஞைகளைக் காண்பிக்கின்றது. மறுசீரமைப்பு உத்வேகத்தினை நிலைபெறச்செய்தல் மற்றும் ஆளுகைப் பலவீனங்கள் மற்றும் ஊழலினால் பாதிப்படையக்கூடியதன்மைகளை நிவர்த ;தி செய்தல் என்பன பொருளாதாரத்தினை நீடித்து நிலைத்திருக்கின்ற மீட்சி மற்றும் நிலையான மற்றும் அனைத்தையுமுள்ளடக்கிய வளர்ச்சி என்பவற்றினை நோக்கிய பாதையில் கொண்டு செல்வதற்கு இன்றியமையாதனவாகும்.

பன்னாட்டு நாணய நிதியத ;தின் நிறைவேற்றுச் சபையின் மூலம் மீளாய்வினை நிறைவு செய்தலானது பின்வருவனவற்றைத் தேவைப்படுத்துகின்றது: (i) அனைத்து முன்கூட்டிய நடவடிக்கைகளும் அதிகாரிகளினால் நடைமுறைப்படுத்துதல் மற்றும் (ii) நிதியிடல் உத்தரவாத மீளாய்வுகளின் நிறைவு.

2023 ஏப்பிறல் 01 தொடக்கம் 2023 செத்தெம்பர் 26 வரை நிதியியல் நிறுவனங்கள் மீது இணங்குவிப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக நிதியியல் உளவறிதல் பிரிவினால் நிருவாக ரீதியான தண்டப் பணங்களை விதித்தல்/சேகரித்தல்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் பயனைக்கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்களின் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றை பரிசீலனையிற் கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம்.

அதற்கமைய, பணம் தூயதாக்குதலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துனர் என்ற ரீதியில், நிதியியல் உளவறிதல் பிரிவு நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு  2023 ஏப்பிறல் 01 தொடக்கம் 2023 செத்தெம்பர் 26 வரையான காலப்பகுதியில் கீழேகாட்டப்பட்டவாறு, மொத்தமாக ரூ.1.7 மில்லியன் கொண்ட தொகையினைத் தண்டப்பணமாக சேகரித்தது.  தண்டப்பணங்களாக சேகரிக்கப்பட்ட நிதி திரட்டு நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டன.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (தயாரித்தல் மற்றும் பணிகள்) - 2023 ​செத்தெம்பா்

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2023 செத்தெம்பரில் தயாரித்தல் நடவடிக்கைகளில் சுருக்கத்தையும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலையும் எடுத்துக்காட்டின.

தயாரிப்புக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2023 செத்தெம்பரில் 45.7 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரித்தல் நடவடிக்கைகளில் சுருக்கத்தினை எடுத்துக்காட்டியது. இப்பின்னடைவிற்கு அனைத்து துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட குறைவடைந்த செயலாற்றம் துணையளித்தது.

பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2023 செத்தெம்பரில் 54.7 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மெதுவான வேகத்தில் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் இதற்கு முன்னிலை வகித்திருந்தன. எவ்வாறிருப்பினும், நிலுவையிலுள்ள பணிகள் மாதகாலப்பகுதியில் சுருக்கமடைந்து காணப்பட்டன.

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் நாணயக்கொள்கைச் சபையினால் மேற்கொள்ளப்பட்;ட முதலாவது நாணயக்கொள்கை மீளாய்வு 2023 ஒத்தோபர் 04ஆம் நாளன்று நடைபெற்றது. இம்மீளாய்வில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 10.00 சதவீதத்திற்கும் 11.00 சதவீதத்திற்கும் 100 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்குச் சபை தீர்மானித்தது. தாழ்ந்தளவிலான பணவீக்கம் மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் சாதகமான பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பன உள்ளடங்கலாக தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளின் உன்னிப்பான பகுப்பாய்வொன்றினைத் தொடர்ந்து நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை எதிர்பார்க்கப்படுகின்ற 5 சதவீத மட்டத்தில் உறுதிநிலைப்படுத்துவதுடன் அதன்மூலம் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த வளர்ச்சியினை அடைவதனை இயலுமைப்படுத்தும் நோக்குடன் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு மத்திய வங்கியினால் உரிமம்பெற்ற வங்கிகளுக்கு வெளியிடப்பட்ட பணிப்புரைகள் மற்றும் அரச பிணையங்கள் மீதான இடர்நேர்வு மிகையின் குறிப்பிடத்தக்க குறைவு என்பன உள்ளடங்கலாக முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நாணயக்கொள்கையின் குறிப்பிடத்தக்க தளர்வடைதலுடன் இணைந்து கொள்கை வட்டி வீதங்களின் இக்குறைப்பு எதிர்வருகின்ற காலப்பகுதியில் சந்தை வட்டி வீதங்களில் குறிப்பாக, கடன்வழங்கல் வீதங்களில் கீழ்நோக்கிய சீராக்கமொன்றினை துரிதப்படுத்துமென சபை எதிர்பார்க்கின்றது. நாணய நிலைமைகளின் தொடர்ச்சியான தளர்த்தலின் நன்மைகளைத் தனிப்பட்டவர்களுக்கும் வியாபாரங்களிற்கும் போதுமானளவிலும் விரைவாகவும் ஊடுகடத்துவதுடன் அதன்மூலம் பொருளாதாரத்தின் எதிர்பார்க்கப்படுகின்ற மீளெழுச்சிக்கு ஆதரவளிக்குமாறு நிதியியல் துறை வலியுறுத்தப்படுகின்றது. 

Pages

சந்தை அறிவிப்புகள்