கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் - 2024 பெப்புருவரி

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண், 57.1 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்திருந்த மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 பெப்புருவரியில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது. தற்போதைய ஆக்கபூர்வமான சூழலும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பல கருத்திட்டங்கள் மீளத்தொடங்கியமையும் கட்டடவாக்க நடவடிக்கைகளில் வளர்ச்சிக்கு காரணமாகவிருந்தன என பல  நிறுவனங்கள் குறிப்பிட்டன.

தொடர்ச்சியாக இரண்டாவது மாதத்திற்காகவும் புதிய கட்டளைகள் தொடர்ந்தும் அதிகரித்து தொழில்துறையில் மேம்பட்ட கேள்வி நிலைமைகளைப் பிரதிபலித்தன. பாரியளவிலான உட்கட்டமைப்பு கருத்திட்டங்கள், குறிப்பாக வெளிநாட்டு நிதியளிக்கப்பட்டவை கிடைக்கப்பெறுகின்ற விலைக்கோரல் வாய்ப்புக்களுக்கு மத்தியில் காணப்படுவதாக பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர். எனினும், தொழில்நிலையானது முன்னைய மாதத்தைவிட மெதுவான வீதமாயினும் பெப்புருவரியில் சுருக்கமடைந்தே காணப்பட்டது. தேர்ச்சிபெற்ற மற்றும் அனுபவம்வாய்ந்த கட்டடவாக்கப் பணியாளர்களின் பற்றாக்குறை பற்றி பல அளவீட்டு பதிலிறுப்பாளர்கள் எச்சரிக்கை தெரிவிக்கின்றனர். அதிகரித்த குழாய் கருத்திட்டங்கள் காரணமாக கொள்வனவுகளின் அளவு மேம்பட்டது. மாதகாலப்பகுதியில் கட்டடவாக்கப் பொருட்களின் விலை மட்டங்கள் கீழ் நோக்கிய சரிப்படுத்தலை குறித்துக்காட்டின. அதேவேளை வழங்குநர்களின் விநியோக நேரம் பெப்புருவரியில் மேலும் நீட்சியடைந்தது.

முழுவடிவம்

 

Published Date: 

Thursday, March 28, 2024