வளம்பெறத்தக்க வியாபாரங்கள் புத்துயிர் பெறுவதற்கு ஆதரவளிப்பதற்கு உரிமம்பெற்ற வங்கிகளில் வியாபார புத்துயிரளித்தல் பிரிவுகளைத் தாபிப்பதற்காக மத்திய வங்கி வழிகாட்டல்களை வழங்குகின்றது

ஏற்கனவே தாபிக்கப்பட்ட கொவிட்-19 நோய்த்தொற்றுக்குப் பிந்திய புத்துயிரளித்தல் பிரிவுகளின் தொழிற்பாடுகளை மேலும் வலுப்படுத்தி, அத்தகைய பிரிவுகளை வியாபார புத்துயிரளித்தல் பிரிவுகள் ஆக வடிவமைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி 2024 மாச்சு 28 அன்று உரிமம்பெற்ற வங்கிகளுக்கு விரிவான வழிகாட்டலை வழங்கியுள்ளது. முன்மொழியப்பட்ட வியாபார புத்துயிரளித்தல் பிரிவுகளின் மேம்படுத்தப்பட்ட நோக்கெல்லையானது அசாதாரண பேரண்டப்பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட வளம்பெறத்தக்க வியாபாரங்களுக்கென நிலைபேறான புத்துயிரளித்தலை வசதிப்படுத்தி உரிமம்பெற்ற வங்கிகளின் அதிகரித்த சேதமிழந்த சொத்துக்களை முறையாகக் கையாளுவதை உறுதிசெய்யும். இவ்வழிகாட்டல்களை வகுக்கின்றபோது மத்திய வங்கியானது வங்கித் தொழில்துறை மற்றும் வர்த்தக சம்மேளனம் அடங்கலாக தொடர்புடைய ஆர்வலர்களின் கருத்துக்களையும் கோரியது.

அண்மைய ஆண்டுகளில் நிலவிய சவால்மிக்க பேரண்டப்பொருளாதார நிலைமைகள் வியாபாரங்களின் வருமானம் ஈட்டுகின்ற செயற்பாடுகளை தடங்கல்களுக்குள்ளாக்குவதற்கு வழிவகுத்து தமது கடன்களை உரியவாறு செலுத்துவதற்கான கடன்பெறுநர்களின் இயலுமையை மோசமாகப் பாதித்தன. இதன்மூலம் உரிமம்பெற்ற வங்கிகளின் அறவீட்டுச் செயன்முறை சீர்குலைந்தது. ஆகையினால், புத்துயிர் பெறுவதற்கு அடிப்படையிலேயே வளம்பெறத்தக்கவையாகக் காணப்படுகின்ற வியாபாரங்களைக் கொணடுள்ள உரிமம்பெற்ற வங்கிகளின் செயலாற்றுகின்ற மற்றும் செயலாற்றமற்ற இருவகையான கடன்பெறுநர்களுக்கும் உதவுவதற்கு வியாபார புத்துயிரளித்தல் பிரிவுகளை நிறுவுவது மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, April 3, 2024