தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மே மாதத்தில் 57.9 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன், இது 2017 ஏப்பிறல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 16.1 சுட்டெண் புள்ளிகள் கொண்ட அதிகரிப்பாகும். இது 2017 மேயில் தயாரிப்பு நடவடிக்கைகள் மீட்சியடைந்தமையினை குறித்துக்காட்டுவதுடன் 2017 ஏப்பிறலில் அவதானிக்கப்பட்ட பருவகால சுருக்கத்தினை தொடர்ந்து உற்பத்தி மற்றும் புதிய கடட் ளைகள் துணைச்சுட்டெண்களின் விரிவாக்கம் பெரிதும் காரணமாக அமைந்தது. மேலும், தொழில்நிலை துணைச்சுட்டெண்ணினை தவிர கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை பதிவு செய்தன. எவ்வாறாயினும், மாதத்தின் 25ம் நாள் தொடக்கம் உணரப்பட்ட பாதகமான காலநிலை நிலைமைகளால் உருவாகிய தொழிலாளர் வரவின்மை மற்றும் நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரத்தின் அளவு காரணமாக, நடவடிக்கைகளில் எதிர்பார்க்கப்பட்ட மீட்சியினை மெதுவடைய செய்தது. இருப்பினும்கூட, நடவடிக்கைகளின் எதிர்பார்ப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கான ஒரு மேம்பாடோன்றினை எடுத்துக்காட்டியது.