2017 திசெம்பரில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013ஸ்ரீ100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 நவெம்பரின் 8.4 சதவீதத்திலிருந்து 2017 திசெம்பர்pல் 7.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சிக்கு 2016 திசெம்பரில் நிலவிய உயர்ந்த தளத் தாக்கமே காரணமாகும்.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றம் 2017 நவெம்பரின் 7.5 சதவீதத்திலிருந்து 2017 திசெம்பரில் 7.7 சதவீதத்துக்கு அதிகரித்தது.

மாதாந்த மாற்றத்தினைப் பரிசீலனையில் கொள்ளும் போது, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2017 நவெம்பரின் 126.4 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2017 திசெம்பரில் 126.6 சுட்டெண் புள்ளிகளுக்கு அதிகரித்தது. இச்சிறிய மாதாந்த அதிகரிப்பிற்கு உணவு வகையிலுள்ள விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். காய்கறிகள், உடன்மீன் மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிப்புக்கள் குறிப்பிடத்தக்கதாக இருந்தன. இருப்பினும் கூட அரிசி, பச்சை மிளகாய் மற்றும் வாழைப்பழத்தின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. உணவல்லா வகையில் குறிப்பிடத்தக்களவு விலை அதிரிப்புக்கள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை.

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மையப் பணவீக்கம் ஆண்டின் தொடக்க மாதங்களிலிருந்து காட்டிய வீழ்ச்சிடைந்து செல்லும் போக்கினைத் தொடர்ந்தது. ஆகவே, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2017 நவெம்பரின் 2.8 சதவீதத்திலிருந்து 2017 திசெம்பரில் 2.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கத்தின் ஆண்டுச் சராசரி 2017 நவெம்பரின் 5.2 சதவீதத்திலிருந்து 2017 திசெம்பரில் 4.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Monday, January 22, 2018