“அண்மைய கொள்கைத் தீர்மானங்களை ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட சந்தைக் கடன் வழங்கல் வீதங்களுக்கு ஊடுகடத்துவதன் வினைத்திறனை அதிகரித்தல்” தொடர்பான 2019ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க நாணயவிதி சட்டத்தின் கட்டளை, மற்றைய விடயங்களுடன், ஒவ்வொரு உரிமம்பெற்ற வர்த்தக வங்கியும் 2019 ஏப்பிறல் 26ஆம் திகதியிடப்பட்ட வாராந்த பொருளாதார குறிகாட்டிகளின் வெளியீட்டில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அவற்றின் சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதத்துடன் ஒப்பிடுகையில் 2019 திசெம்பர் 27ஆம் நாளளவில் குறைந்தபட்சம் 250 அடிப்படைப் புள்ளிகளினால் அவற்றைக் குறைத்தல் வேண்டுமென தேவைப்படுத்தியது. இது, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளில் எவ்வங்கிகளின் சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதம் இக்கட்டளைத் திகதியன்று, அல்லது, அதற்குப் பின்னரான எந்த ஒரு நேரத்திலும் ஆண்டிற்கு 9.50 சதவீதத்தினை அடைந்துள்ளதோ அல்லது அதற்கும் கீழே வீழ்ச்சியடைந்துள்ளதோ அத்தகைய வர்த்தக வங்கிகளுக்கு ஏற்புடைத்தாகமாட்டாது.
















