2020 யூலை 13-23 காலப்பகுதியின் போது சௌபாக்யா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதி கட்டம் ஐஐ மற்றும் ஐஐஐஇன் கீழ் உரிமம்பெற்ற வங்கிகள் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட ரூ.11,829 மில்லியன் தொகையுடைய 3,985 புதிய கடன் விண்ணப்பங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
மேலே குறிப்பிடப்பட்ட புதிய ஒப்புதல்களின் மூலம் 2020 யூலை 23 வரை சௌபாக்யா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதியின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் இதுவரையிலும் ஒப்புதலளிக்கப்பட்ட கடன் விண்ணப்பங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 26,291ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று, 2020 யூலை 23 வரை இலங்கை மத்திய வங்கியினால் ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களின் மொத்தப் பெறுமதியும் ரூ.72,079 மில்லியனுக்கு அதிகரித்துள்ளது. 2020 யூலை 23 வரை கீழே அட்டவணை 1இல் காட்டப்பட்டவாறு தீவு முழுவதும் 18,007 கடன்பெறுநர்களுக்கு மத்தியில் ரூ.45,777 மில்லியன் தொகையினை உரிமம்பெற்ற வங்கிகள் ஏற்கனவே பகிர்ந்தளித்துள்ளன.