கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 திசெம்பரில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2020 நவெம்பரில் 4.1 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்பு மூலம் இது தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 நவெம்பரின் 10.3 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 9.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. எனினும், உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 நவெம்பரில் 1.6 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 2.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 திசெம்பரில் தொடர்ச்சியான மூன்றாவது மாதத்திற்காகவும் 4.6 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது 2020 திசெம்பரில் 0.66 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகளிலுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் இதற்குக் காரணமாக அமைந்தன. மேலும், உணவு மற்றும் உணவல்லா வகைகளின் மாதாந்த மாற்றங்கள் 2020 திசெம்பரில் முறையே 0.45 சதவீதத்தினையும் 0.22 சதவீதத்தினையும் பதிவுசெய்தன. அதற்கமைய, உணவு வகையினுள் தேங்காய், காய்கறிகள் மற்றும் அரிசி என்பவற்றின் விலைகள் 2020 திசெம்பரில் அதிகரித்தன. அதேவேளை, உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகள் மாத காலப்பகுதியில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன. இதற்குஇ போக்குவரத்து (பஸ் கட்டணம்) மற்றும் சுகாதாரம் (தனியார் மருத்துவ வைத்தியர் கட்டணம்) துணைத் துறைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் முக்கிய காரணமாக அமைந்தன.

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினை பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 நவெம்பரின் 3.0 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 3.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. எனினும்இ ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கமானது 2020 நவெம்பரின் 3.2 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 3.1 சதவீதத்திற்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Thursday, December 31, 2020