இலங்கை சுபீட்சச் சுட்டெண் – 2019

இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணானது  “பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல்” மற்றும் “சமூக-பொருளாதார உட்கட்டமைப்பு” ஆகிய துணைச் சுட்டெண்களின் சிறிதளவான வீழ்ச்சிகளுடன் 2018இன் 0.811 உடன் ஒப்பிடுகையில் 2019இல் 0.802 ஆகப் பதிவாகியது. அதேவேளை, “மக்கள் நலனோம்புகை” துணைச் சுட்டெண் ஆண்டுகாலப்பகுதியில் மேம்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் தொடர்புபட்ட கைத்தொழில்கள் மீது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் கசிவுத் தாக்கங்கள் தொழிலின்மையில் அதிகரிப்பொன்றினை ஏற்படுத்தியமை அத்துடன் 2019இன் பிந்திய பகுதியை நோக்கிய மோசமான வானிலை நிலைமைகளின் காரணமாக ஒப்பீட்டளவில் உயர்வான பணவீக்கம் என்பன பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல் துணைச் சுட்டெண்ணில் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு பற்றிய கரிசனைகளின் காரணமாக பொதுப் போக்குவரத்தினைக் குறைவாகப் பயன்படுத்தியமை சமூக-பொருளாதார உட்கட்டமைப்புச் சுட்டெண்ணில் வீழ்ச்சிக்கு முக்கிய ஏதுவாக அமைந்தது.

மக்களின் கல்வி, சுகாதார வசதிகள், செல்வம் தொடர்பான தரம் பற்றிய அம்சங்கள் மக்கள் நலனோம்புகைச் சுட்டெண்ணின் அதிகரிப்பிற்கு முக்கியமாக பங்களித்தவையாக விளங்கின.

முழுவடிவம்

Published Date: 

Monday, December 28, 2020