Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

02 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படும் சிறப்பு வைப்புக் கணக்குகளுக்காக ஆண்டிற்கு 2% வரையிலான மேலதிக வட்டி

நாட்டினுள் கணிசமான வெளிநாட்டுச் செலாவணியினை ஈர்ப்பதற்கும் அதன் பயனாக நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்குநிலை மீதும் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின்  மீதும் சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்துவதற்கும் சிறப்பு வைப்புக் கணக்குகளின் உள்ளார்ந்த ஆற்றலினைக் கருத்திற்கொண்டு, கௌரவ நிதி அமைச்சர், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையுடன் அத்தகைய வைப்புக்கள் வைப்பிலிடப்பட்ட ஆரம்பத் திகதியிலிருந்து 24 மாதங்களைக் கொண்ட திரண்ட காலப்பகுதியொன்றுக்கு சிறப்பு வைப்புக் கணக்குகளை நீடிப்பதற்கு அனுமதி வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளார். அவ்வாறு நீடிக்கப்படுகின்ற சிறப்பு வைப்புக் கணக்குகள், அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஆண்டிற்கு 02% வரையிலான மேலதிக வட்டிக்கு தகைமையுடையனவாகவிருக்கும்.  

நாட்டில் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் தாக்கங்களை வெற்றிகொள்ளும் தேசிய முயற்சிக்கான உதவியினை நாடுவதற்கு இலங்கை அரசாங்கம் 2020 ஏப்பிறல் 08 அன்று சிறப்பு வைப்புக் கணக்குகளை அறிமுகப்படுத்தியது. அதற்கமைய, 2021 யூன் 25ஆம் திகதியன்று உள்ளவாறு சிறப்பு வைப்புக் கணக்குகளுக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வைப்புகள் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 451 மில்லியன் தொகையினைக் கொண்டிருந்தது.

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2021 யூலை 07ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பேரண்டப் பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலனையில் கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது.

இலங்கை - சீனாவுக்கிடையிலான 65 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன பொதுவுடைமைக் கட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக இலங்கை மத்திய வங்கி ஞாபகார்த்த நாணயக் குற்றிகளை வெளியிடுகின்றது

இலங்கை மத்திய வங்கி ரூ. 1000 முகப் பெறுமதியையுடைய தங்கம் மற்றும் வெள்ளி ஒரே சித்தரிப்புகளுடனான ஞாபகார்த்த நாணயக் குற்றிகளை இலங்கை - சீனாவுக்கிடையிலான 65 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன பொதுவுடைமைக் கட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவைக்  குறிக்கும் முகமாக  வெளியிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையைப் பாராட்டும் முகமாக இலங்கை அரசின் வேண்டுகோளின்படி நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை நாட்டுக்கான பன்னாட்டு முறிகளில் உரிமம்பெற்ற வங்கிகளின் முதலீடுகள்

இலங்கை மத்திய வங்கியானது பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர் சமூகத்திற்கு பின்வரும் தகவல்களை வழங்க விரும்;புகின்ற அதேவேளை, வங்கித்துறையின் நிலைத்திருக்கும் தன்மைக்கு சவால்விடுக்கின்ற தரமிடல் நிறுவனங்களின் அறிக்கைகள் மற்றும் இலங்கை நாட்டுக்கான பன்னாட்டு முறிகள் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகள் என்பவற்றில் உரிமம்பெற்ற வங்கிகளின் முதலீடுகள் தொடர்பான ஊகங்களையும் மறுக்கின்றது.

பின்வரும் முக்கிய இடர்நேர்வு தணிப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் முதலீட்டு வாய்ப்புக்களை வசதிப்படுத்துவதற்காகவும் நாட்டுக்கான வெளிநாட்;டுச் செலாவணியின் உட்பாய்ச்சலை மேலும் ஊக்குவிப்பதற்குமாக இலங்கை மத்திய வங்கியானது, வெளிமூலங்களிலிருந்தான வளங்களிலிருந்து நாட்டுக்கான பன்னாட்டு முறி மற்றும் இலங்கை அபிவிருத்தி முறி ஆகியவற்றில் சமமாகப் பகிரப்பட்டளவிலான முதலீடுகளை உரிமம்பெற்ற வணிக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவை மேற்கொள்ள அனுமதிக்கின்றது.

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2021 யூலை 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.

இலங்கையின் வெளிநாட்டுச் செலாவணி நிலையினைப் பேணுவதற்கு வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட புதிய கட்டளை

நாட்டின் செலாவணி வீதம் மீதான அழுத்தத்தினைக் குறைத்து வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலையினைப் பாதுகாப்பதன் மூலம் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு உதவியளித்து பேணும் நோக்குடன், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையுடனும் அமைச்சரவையின் ஒப்புதலுடனும் கௌரவ நிதியமைச்சர், 2021 யூலை 02ஆம் திகதியிடப்பட்ட 2234/49 அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் கட்டளையொன்றினை வழங்கியுள்ளார்.

அதற்கமைய, வெளிமுகப் பணவனுப்பல்கள் மீது பின்வரும் இடைநிறுத்தல்கள்/ கட்டுப்பாடுகள் 2021 யூலை 02ஆம் திகதியிலிருந்து தொடங்குகின்ற ஆறு (06) மாதங்களுக்கு நடைமுறையிலிருக்கும்.

முழுவடிவம்

Pages

சந்தை அறிவிப்புகள்