Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

நாணயக்கொள்கை மீளாய்வு: இல. 06 - 2023 ஓகத்து இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2023 ஓகத்து 23ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 11.00 சதவீதம் மற்றும் 12.00 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளின் கவனமான பகுப்பாய்வு மற்றும் 2023 யூனிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட நாணய நிலைமைகளின் குறிப்பிடத்தக்க தளர்வடைதலினையும் தொடர்ந்து சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. இதுவரையிலான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நாணயக்கொள்கை தளர்வடைதல் வழிமுறைகளிற்குப் பதிலிறுத்தும் விதத்தில் சந்தை வட்டி வீதங்களின் கீழ்நோக்கிய சீராக்கத்தினையும் சந்தை வட்டி வீதங்களை மேலும் சீராக்குவதற்கு விரைவாக இடமளிப்பதற்கான தேவைப்பாட்டினையும் நாணயச்சபை கருத்தில் கொண்டது. இருப்பினும், குறித்த சில கடன்வழங்கல் உற்பத்திகளின் சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் விஞ்சியளவில் காணப்படுவதனையும் அவை தற்போதைய நாணயக்கொள்கை நிலைப்பாட்டுடன் இசைந்து செல்லும் விதத்திலமையவில்லை என்பதனையும் சபை அவதானித்தது.

‘இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபரங்கள் - 2023’ வெளியீடு

‘இலங்கையின் பொருளாதார சமூகப் புள்ளிவிபரங்கள் - 2023’ என்ற இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களமானது இக்கையேட்டை வெளியிடுகின்றது. எட்டு முக்கிய விடயப்பரப்புக்களின் அதாவது ‘தேசிய கணக்குகள்’, ‘பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு’, ‘விலைகள், கூலிகள் மற்றும் தொழில்நிலை’, ‘வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் நிதி’, ‘அரச நிதி’, ‘பணம் மற்றும் மூலதனச் சந்தைகள்’, ‘நிதியியல் துறை’ அத்துடன் ‘ஏனைய நாடுகளின் புள்ளிவிபரங்கள்’ என்பவற்றின் கீழ் வகைப்படுத்தப்பட்ட புள்ளிவிபர அட்டவணைகளை இது உள்ளடக்குகின்றது. இவ்வெளியீடு சமூகப் பொருளாதார புள்ளிவிபரங்களில் ஆர்வமுள்ளோருக்கு பயனுள்ள தகவல் சேகரிப்பாகக் காணப்படும்.

காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி – 2023இன் முதலாம் அரையாண்டு

கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2023இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 15.2 சதவீதம் கொண்ட அதிகரிப்புடன் 215.3 ஆகப் பதிவாகியது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகள் முறையே 17.2 சதவீதம், 15.1 சதவீதம் மற்றும் 13.5 சதவீதம் கொண்ட வருடாந்த அதிகரிப்புகளுடன் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்குப் பங்களித்துள்ளன. அரையாண்டு அடிப்படையில், காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2022இன் இரண்டாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2023இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் 4.9 சதவீதத்தினால் அதிகரித்தது. இவ்வதிகரிப்பிற்கான அதிகூடிய பங்களிப்பு வதிவிடக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியிலிருந்து இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைக் குறிகாட்டிகள் காணப்பட்டன. எனினும், 2023இன் முதலரை காலப்பகுதியில் காணி விலை மதிப்பீட்டுக் குறிகாட்டியின் அரையாண்டு வளர்ச்சியில் வேகத்தளர்ச்சி அவதானிக்கப்பட்டது.

நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குவிதிகள்

இலங்கை மத்திய வங்கியானது 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 10(இ) பிரிவின் நியதிகளின் பிரகாரம் 2023ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு ஒழுங்குவிதிகளை வழங்கி, அதனை 2023.08.09 அன்று 2344/17ஆம் இலக்க அரசாங்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்ற அனைத்து நிதியியல் பணி வழங்குநர்களுக்கும் இவ்வொழுங்குவிதிகள் ஒரேசீர்மையான அடிப்படையில் ஏற்புடையதாவிருக்கும் என்பதுடன் இலங்கை மத்திய வங்கியின் குறிப்பாக, வங்கித்தொழில் சட்டம், நிதித்தொழில் சட்டம் மற்றும் நிதிக்குத்தகைக்குவிடுதல் சட்டம் என்பவற்றின் கீழ் வழங்கப்பட்ட நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு பணிப்புரைகளின் தற்போதைய நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இவ்வொழுங்குவிதிகள் சர்வதேச தரநியமங்களுக்கிசைவாக வகுக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை மத்திய வங்கி மூலமான சந்தை நடத்தை மேற்பார்வைக்கு அடித்தளத்தினை உருவாக்கி இலங்கையில் நம்பிக்கையான மற்றும் உறுதியான நிதியியல் முறைமையொன்றை உருவாக்குவதை வசதிப்படுத்தும்.

உள்நாட்டு படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்டத்தை அநுசரித்து தகைமையுடைய செலுத்தவேண்டிய இலங்கை அபிவிருத்தி முறிகளை ஐந்து (5) புதிய இலங்கை ரூபா திறைசேரி முறிகளுக்கான பரிமாற்றத் தீர்ப்பனவு

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் வெளியிடப்பட்ட 2023 யூலை 04ஆம் திகதியிடப்பட்ட இலங்கை அபிவிருத்தி முறிகளின் பரிமாற்று விஞ்ஞாபனத்திற்கும் (“பரிமாற்று விஞ்ஞாபனம்") அதனைத்தொடர்ந்து இலங்கை அபிவிருத்தி முறி பரிமாற்றத்திற்கான அழைப்பிதழுக்கான (பரிமாற்று விஞ்ஞாபனத்தில் வரைவிலக்கணம் செய்யப்பட்டவாறு) பெறுபேறுகளின் அறிவித்தலுக்கும் மேலதிகமாக, செலுத்தவேண்டிய தகைமையுடைய இலங்கை அபிவிருத்தி முறிகள் (தகைமையுடைய முறிகள்) ஐந்து (5) புதிய மாறிலி கூப்பன் (துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்* +1.00%) இலங்கை ரூபாவில் பெயர்குறிக்கப்பட்ட புதிய திறைசேரி முறிகளுக்கு மாற்றப்பட்டு 2023.08.15 அன்று பின்வருமாறு தீர்ப்பனவுசெய்யப்பட்டன:   

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (தயாரித்தல் மற்றும் பணிகள்) - 2023 யூலை

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2023 யூலையில் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலையும் தயாரித்தல் நடவடிக்கைகளில் சுருக்கத்தினையும் எடுத்துக்காட்டின.  

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2023 யூலையில் 44.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தொடர்ந்து வீழ்ச்சியடைந்து தயாரித்தல் நடவடிக்கைகள் மீட்சியடைவதில் தாமதத்தை  எடுத்துக்காட்டியது. அனைத்துத் துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட குறைவடைந்த செயலாற்றம் இப்பின்னடைவிற்கு பங்களித்தது.

பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2023 யூலையில் 59.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து மேலும் அதிகரித்து, பணிகள் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலை எடுத்துக்காட்டியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் இதற்கு முன்னிலை வகித்திருந்தன. எவ்வாறிருப்பினும், நிலுவையிலுள்ள பணிகள் மாதகாலப்பகுதியில் சுருக்கமடைந்து காணப்பட்டன.

Pages

சந்தை அறிவிப்புகள்