Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

காணி விலைச் சுட்டெண் - 2017இன் முதலரையாண்டு

உண்மைச் சொத்துத் துறையின் அபிவிருத்திகளை கண்காணிக்கும் பொருட்டு இலங்கை மத்திய வங்கியானது பல குறிகாட்டிகளை தொகுத்து பகுப்பாய்வு செய்கின்றது. 1998 முதல் கொழும்பு மாவட்டத்தினை உள்ளடக்கி தொகுக்கப்படுகின்ற அரையாண்டு காணி விலைச் சுட்டெண் இத்தன்மையிலான குறிகாட்டிகளிலொன்றாகும். காணி விலைச் சுட்டெண் தொகுக்கும் செயன்முறையில், இலங்கை மத்திய வங்கியானது கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளின் 1 சுமார் 50 நிலையங்களை உள்ளடக்கி இலங்கை விலை மதிப்புத் திணைக்களத்தினால் சேகரிக்கப்படும் காணி விலைத் தரவுகளைப் பயன்படுத்துகின்றது. காணிப் பல்வகைப் பயன்பாட்டுத்தன்மை நோக்கிலும் ஒரேசீர்மை அமைப்பினைப் பேணுவதற்கும் வதிவிட, வர்த்தக ரீதியான மற்றும் கைத்தொழில் காணிகளுக்காக மூன்று சுட்டெண்கள் வெவ்வேறாகக் கணிக்கப்பட்டுள்ளன. இம்மூன்று துணைச் சுட்டெண்களினதும் சராசரியினைக் கருத்திற்கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த காணி விலைச் சுட்டெண் கணிக்கப்படுகின்றது.

முழுவடிவம்

Monetary Policy Review - No. 7 of 2017

Considering developments in the domestic and international macroeconomic environment, the Monetary Board, at its meeting held on 06 November 2017, was of the view that the current monetary policy stance is appropriate. Accordingly, the policy interest rates of the Central Bank of Sri Lanka will remain unchanged at their current levels.

The decision of the Monetary Board is consistent with the objective of maintaining inflation at midsingle digit levels over the medium term and thereby facilitating a sustainable growth trajectory. The rationale underpinning the monetary policy stance is set out below.

மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட தொழில்நிலை எண்ணிக்கைகள் பற்றிய தெளிவுபடுத்தல்

2014, 2015 மற்றும் 2016 ஆண்டுகளுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொழில் நிலை எண்ணிக்கைகளை மேற்கோள் காட்டி வெளிவருகின்ற  ஊடக அறிக்கைகள் மீது இலங்கை மத்திய வங்கி அவதானம் செலுத்தியுள்ளது.  

தீவு முழுவதனையும் உள்ளடக்கி தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2012இன் குடித்தொகை மற்றும் வீடமைப்புத் தொகைமதிப்பினைத் தொடர்ந்து, பதிவாளர் நாயகம் திணைகக்ளமானது நடு ஆண்டு குடித்தொகை மதிப்பீடுகளுக்கான மாற்றங்களை அறிமுகப்படுத்தியதுடன் திருத்தப்பட்ட தொகுதியொன்றினை வெளியிட்டது. அதற்கமைய, 2016 யூலையில் தொழிற்படை அளவீடுகள் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைகக் ளத்தினால் மீள் நிறையேற்றம் செய்யப்பட்டு 2011இன் பின்னரான ஆண்டுகளுடன் தொடர்புடைய தரவுகளுக்காக புதிய தொகுதியொன்று வெளியிடப்பட்டது. இது, ஏனைய அனைத்து நாடுகளிலும் பொதுவான நடைமுறையொன்றாகக் காணப்படுவதுடன் திருத்தப்பட்ட நடு ஆண்டு மதிப்பீடுகளுடனான தொழிற்படை அளவீடு மதிப்பீடுகளின் இசைவுத் தன்மையினைப் பேணுகின்றது.

மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி – 2016

2016ஆம் ஆண்டிற்கான மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொகைமதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மூலம் தொகுக்கப்பட்ட பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியினை பிரிப்பதன் மூலம் இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் கணிக்கப்பட்டிருக்கிறது. மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டில், மொ.உ. உற்பத்தியிலுள்ள ஒவn; வாரு தொகுதி விடயத்தினதும் பெறுமதியானது மாகாண மட்டத்தில் தொடர்பான குறிகாடடி;களைப் பயன்படுத்தி பிரிக்கப்பட்டுள்ளது. 

உரிமம் பெற்ற வங்கிகள் 2020 அளவில் குறைந்தபட்ச மூலதனத்தை உயர்த்துதல்

பலமானதும் இயலாற்றல் மிக்கதுமான வங்கித்தொழில் துறையை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கை மத்திய வங்கி உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளுக்கான குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாடுகளை அதிகரித்திருக்கிறது. இந்நோக்கத்திற்காக கருத்திலெடுக்கப்பட்ட மூலதனமானது உயர் இழப்புக்களை ஈர்க்கும் இயலளவுள்ள உயர்தர மூலதனத்தினால் பெருமளவு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. 

குறைந்தபட்ச மூலதன தேவைப்பாடுகளை உயர்த்துவது வங்கிகளின் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையை பலப்படுத்துவதற்காக இலங்கையில் பாசல் III இனை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் என்பதுடன் வங்கித்தொழில் துறையின் திரட்சிப்படுத்தலுக்கும் வழிவகுக்கும். இதன்படி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கையில் நிறுவப்பட்ட அல்லது கூட்டிணைக்கப்பட இருக்கும் புதிய வங்கிகள் பின்வரும் மூலதனத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு தேவைப்படுத்தப்படுகின்றன:

முழுவடிவம்

2017 செத்தெம்பரில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 செத்தெம்பரில் 8.6 சதவீதத்திற்கு 2017 ஓகத்தின் 7.9 சதவீதத்திலிருந ;து அதிகரித்தது. 2017 செத்தெம்பரின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்துக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாக பங்களித்தன.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றம் 2017 ஓகத்தின் 6.5 சதவீதத்திலிருந்து 2017 செத்தெம்பரின் 6.8 சதவீதத்துக்கு அதிகரித்தது.  

Pages

சந்தை அறிவிப்புகள்