பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கடட்ளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2018 யூலை 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் ஆறு மாத காலப்பகுதிக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானித்திருக்கிறது.















2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில் இலங்கை நிதியியல் உளவறில் பிரிவு பிணையங்கள் துறையில் பணம் தூயதாக்கலுக்கெதிரான பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தலை முக்கிய கவனத்தில் கொண்டு அனைத்தையுமுள்ளடக்கிய இடர்நேர்வின் அடிப்படையிலும் மேற்பார்வையின் அடிப்படையிலும் கண்டறியப்பட்டவை தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான கட்டமைப்பொன்றினை உருவாக்குவதற்காக இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை 2018 யூன் 19ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியில் மேற்கொண்டது.