Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கையில் வதிகின்றவர்களிற்கிடையிலான வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்கள்

இலங்கையில் வதிகின்றவர்கள் இலங்கை ரூபாயை விடவும் வெளிநாட்டு நாணயத்தில் கொடுக்கல்வாங்கல் செய்கின்ற சில நிகழ்வுகளை இலங்கை மத்திய வங்கி அவதானத்திற்கொண்டுள்ளது. இது தொடர்பில், 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இலங்கையில் வதிகின்றவர்களுக்கிடையில் அல்லது அவர்கள் மத்தியில் நிறைவேற்றப்படுகின்ற அனைத்துக் கொடுக்கல்வாங்கல்களும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் நோக்கங்களுக்காக மத்திய வங்கியினால் வேறுவகையில் அதிகாரமளிக்கப்பட்டாலன்றி இலங்கை ரூபாவில் மேற்கொள்ளப்படல் வேண்டும் என மத்திய வங்கி தெளிவுபடுத்த விரும்புகின்றது. 

சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கை - 2025 திசெம்பர் வெளியீட்டை இலங்கை மத்திய வங்கி வெளியிடுகின்றது

இலங்கை மத்திய வங்கி அதன் பிந்திய சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கையினை 2026 சனவரி 30 அன்று வெளியிட்டது. நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த செலாவணி வீத வீழ்ச்சியினால் ஆதரவளிக்கப்படும் நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழ் நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலினை அனுசரித்து மத்திய வங்கியினால் மேற்கொண்ட நாணய மற்றும் வெளிநாட்டுச் செலாவணித் தொழிற்பாடுகள் பற்றிய ஆர்வலர் புரிந்துகொள்ளலை மேம்படுத்துவதனை சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கை நோக்காகக் கொள்கின்றது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2026 சனவரியில் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100)  அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக அதே மட்டத்தில் காணப்பட்டதன் பின்னர், 2026 சனவரியில் அதிகரித்தது. இதற்கமைய, முதன்மைப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) இலங்கை மத்திய வங்கியின் அண்மைய கால எறிவுகளுடன் பரந்தளவில் இசைந்துசெல்லும் வகையில், 2025 திசெம்பரின் 2.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026 சனவரியில் 2.3 சதவீதத்திற்கு பதிவாகியிருந்தது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2025 ​திசெம்பர்

நடைமுறைக் கணக்கானது 2025 திசெம்பரில் சிறியளவிலான மிகையொன்றினைப் பதிவுசெய்தது. 2025இல் அநேகமான மாதங்களில் மாதாந்த நடைமுறைக் கணக்கு மிகைகள் பதிவுசெய்யப்பட்டன. இதன் விளைவொன்றாக, நடைமுறைக் கணக்கானது 2025இல் ஐ.அ.டொலர் 1.7 பில்லியன் தொகையிலான (தற்காலிகமானது) மிகையொன்றினைப் பதிவுசெய்திருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. 

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 திசெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் விரிவடைந்தது. மேலும், ஏற்றுமதி வருவாய்கள் 2025இல் வரலாற்று ரீதியில் உயர்ந்தளவிலான மட்டமொன்றினைப் பதிவுசெய்ததற்கு மத்தியில், ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையானது 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 7.9 பில்லியனிற்கு விரிவடைந்து காணப்பட்டது. 

இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – கட்டடவாக்கம் 2025 திசெம்பரில் அதிகரித்துள்ளது

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 திசெம்பரில் 67.1 ஆக அதிகரித்தது. பாதகமான காலநிலை நிலைமைகளினால் ஏற்பட்ட ஆரம்ப தொழிற்பாடு சார்ந்த இடையூறுகளுக்கு மத்தியில் தொடர்புடைய காலப்பகுதியில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க விரிவடைதலை பெரும்பாண்மையான நிறுவனங்கள் அறிக்கையிட்டன.

பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர்கள் இலங்கைக்கான விஜயத்தை நிறைவுசெய்துள்ளனர்

தித்வா புயலின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கு திரு. இவான் பப்பாஜீயோர்ஜியு தலைமையிலான பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர் குழுவின் இலங்கைக்கான அண்மைய விஜயத்தின் இறுதியில், பன்னாட்டு நாணய நிதியமானது பின்வரும் ஊடக வெளியீட்டினை 2026 சனவரி 28 அன்று வெளியிட்டதுடன், இதனைக் கீழேயுள்ள இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

Pages

சந்தை அறிவிப்புகள்