Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கையில் நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் பற்றிய தகவல் ஏட்டை மத்திய வங்கி வெளியிடுகின்றது

இலங்கையில் நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலில் மத்திய வங்கியின் வகிபாகம் பற்றி பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் “இலங்கையில் நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்” என்ற தலைப்பில் தகவல் ஏடொன்றினை மத்திய வங்கி மூன்று மொழிகளிலும் வெளியிட்டுள்ளது. மத்திய வங்கியின் பரந்தளவிலான தொடர்பூட்டல் உபாயத்தின் பாகமொன்றாக இவ்வெளியீடு, நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தல் பற்றிய தொழில்நுட்ப நோக்குகள் மீது எளிமையான கலந்துரையாடலை எடுத்துரைத்து பல்வேறு பின்னணியைக் கொண்ட தனிப்பட்டவர்களும் அதனைப் பெற்றுக்கொள்வதை இயலச்செய்து, நாணயக் கொள்கை வகுத்தல், நடைமுறைப்படுத்தல், நாணயச் சாதனங்கள் மற்றும் ஊடுகடத்தல் பொறிமுறை பற்றிய பெறுமதிமிக்க உள்நோக்குகளை வழங்குகின்ற அதேவேளை பொதுமக்கள் மத்தியில் நாணயத் தொழிற்பாடுகள் மீதான ஏதேனும் தவறான எண்ணப்பாங்குகளை இல்லாதொழிப்பதற்கு உதவுகின்றது.   

பதினைந்து (15) நாணய மாற்றுநர்களின் 2023ஆம் ஆண்டிற்கான நாணயப் பரிமாற்றல் அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்காதிருத்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களின் நிபந்தனைகளுடன் இணங்கியொழுகாமையின் காரணமாக, கீழே பட்டியிலிடப்பட்டுள்ள 15 நாணய மாற்றுநர்களின் நாணயப் பரிமாற்றல் அனுமதிப் பத்திரங்களை 2023ஆம் ஆண்டுக்கு புதுப்பிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதுடன், இவ்வறிவித்தலானது உரிய நாணய மாற்றுநர்களுக்கு 2023.02.22ஆம் திகதி அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணம் தூயதாக்கலுக்கெதிரான வழிமுறைகளை துரிதமாக அதிகரிக்குமாறு உண்மைச் சொத்து முகவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவானது “பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் இணங்குவிப்பு கடப்பாடுகள் மற்றும் புதிய அபிவிருத்திகள்” பற்றி 2023 யூன் 26 அன்று உண்மைச் சொத்துத் துறைக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றை ஏற்பாடுசெய்தது. இலங்கை மத்திய வங்கி ஆளுநரும்ஃபணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மீதான தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர் நந்தலால் வீரசிங்க தலைமை உரையினை நிகழ்த்தியதுடன் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் திரு. டபிள்யு. எஸ். சத்யானந்த, நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் எந்திரி. ஆர். எச். ருவினிஸ் மற்றும் உண்மைச் சொத்துத் துறையினைப் பிரதிநிதித்துவப்படுத்தி திரு. ஹார்டி ஜமால்தீன் ஆகியோரும் கூடியிருந்தவர்களுக்கு உரை நிகழ்த்திய அதேவேளை கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையின் தலைவர் திரு. சரண கருணாரத்னவும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2023 யூலை 05ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 11.00 சதவீதத்திற்கும் 12.00 சதவீதத்திற்கும் 200 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. எதிர்பார்த்ததிலும் பார்க்க விரைவான பணவீக்க வீழ்ச்சிச் செயல்முறை மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் சாதகமான பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பன உள்ளடங்கலாக தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளின் உன்னிப்பான பகுப்பாய்வொன்;றினைத் தொடர்ந்து சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டு பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலை அடைவதனை இயலுமைப்படுத்துவதனையும் நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதிநிலைப்படுத்தும் வேளையில் நிதியியல் சந்தைகளிலுள்ள அழுத்தங்களைத் தளர்த்துவதனையும் நோக்காகக் கொண்டது.

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, பதிவுசெய்யப்பட்ட பங்குத்தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின் பிரகாரம் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில், 2023 யூலை 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டுநடாத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம், 2023 யூன் இல் மற்றுமொரு சடுதியான வீழ்ச்சியொன்றைப் பதிவுசெய்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 மேயின் 25.2 சதவீதத்திலிருந்து 2023 யூனில் 12.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் இவ்வீழ்ச்சியானது, பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் 2023 ஏப்பிறலில் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வீழ்ச்சிப் பாதைக்கு இசைவாக காணப்படுகின்றது.

Pages

சந்தை அறிவிப்புகள்