Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

நிதியியல் ஆற்றல்த்தன்மைக் குறிகாட்டிகள் பற்றிய வெளியீடு – வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள்

மத்திய வங்கியினால் மேற்பார்வைசெய்யப்படுகின்ற வங்கிகளினதும் நிதிக் கம்பனிகளினதும் செயலாற்றத்தினை தொடர்பூட்டுவதற்கான முக்கிய கருவியொன்றான ‘நிதியியல் ஆற்றல்த்தன்மைக் குறிகாட்டிகளை’ மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இவ்வெளியீடானது நிதியியல் முறைமையில் காணப்படுகின்ற வலிமைகள் மற்றும் பாதிக்கப்படும் தன்மைகள் என்பவற்றை அடையாளம் காணுவதற்கான கொள்கை பகுப்பாய்வுகளில் பயன்படுத்தப்படுகின்ற முக்கிய விகிதங்களையும் நிதியியல் பெறுபேறுகளையும் உள்ளடக்குகின்றது.

இவ்வெளியீடானது, சொத்துக்கள், பொறுப்புக்கள், உழைப்புகள், இலாபங்கள், மூலதனம் போன்ற துறைசார் நிதியியல் தகவல்களை எடுத்துக்காட்டுகின்ற அதேவேளை ஒவ்வொரு வகையுடனும் இணையப்பெற்ற முக்கிய விகிதங்களையும் வழங்குகின்றது. இலங்கையிலுள்ள முக்கிய நிதியியல் நிறுவனங்களின் செயலாற்றம் பற்றிய ஆர்வமுடையவர்களுக்கு பயனுள்ள மற்றும் நம்பகமான உசாத்துணை மூலமொன்றாக இவ்வெளியீடு அமைந்துள்ளது.

நிதியியல் ஆற்றல்த்தன்மைக் குறிகாட்டிகள் பற்றிய வெளியீடு இலத்திரனியல் வடிவில் மத்திய வங்கி வலைத்தளத்தில் கிடைக்கப்பெறுகின்றது.
https://www.cbsl.gov.lk/ta/நிதியியல்-ஆற்றல்த்தன்மை-குறிகாட்டிகள்

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (தயாரித்தல் மற்றும் பணிகள்) - 2023 ஓகத்து

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2023 ஓகத்தில் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலையும் தயாரித்தல் நடவடிக்கைகளின் சுருக்கம் மெதுவடைதலையும் எடுத்துக்காட்டின.  

தயாரிப்புக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2023 ஓகத்தில் 49.3 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, நடுநிலையான அடிப்படை அளவை அண்மித்துச் சென்று முன்னைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் தயாரித்தல் நடவடிக்கைகளில் மீட்சிக்கான சமிக்ஞைகளை எடுத்துக்காட்டியது. துணைச் சுட்டெண்களைக் கருத்திற்கொள்கையில், புதிய கட்டளைகள் மற்றும் நிரம்பலர் விநியோக நேரம் என்பன மாதகாலப்பகுதியில் அதிகரித்த அதேவேளை உற்பத்தி மற்றும் தொழில் நிலை ஆகியன சுருக்கமடைந்தே காணப்பட்டன.

பணம் தூயதாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் குழுமம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது – பரஸ்பர மதிப்பீட்டு தயார்படுத்தல் பற்றிய விளக்கமளித்தலும் செயலமர்வும் (2023 செத்தெம்பர் 6-8)

இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் கட்டமைப்பு பற்றிய எதிர்வருகின்ற பரஸ்பர மதிப்பீடு தொடர்பில் உள்நாட்டு அதிகாரிகளுடன் ஈடுபடுவதற்கும் முக்கிய உள்நோக்குகளை அவர்களுக்கு வழங்குவதற்கும், இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பணம் தூயதாக்கல் மீதான ஆசிய பசுபிக் குழுமத்தலிருந்து உயர்மட்ட பேராளர் குழு இலங்கைக்கு விஜயம் செய்தது. பன்னாட்டு பேராளர் குழு பின்வருவோரை உள்ளடக்கியிருந்தது: 

உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்டத்தை அனுசரித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட தகைமையுடைய திறைசேரி முறிகளை பன்னிரண்டு (12) புதிய கிரமமாகக் குறைவடையும் (Step-Down) கூப்பன் திறைசேரி முறிகளுக்கான பரிமாற்றுத் தீர்ப்பனவு

2023 யூலை 04ஆம் திகதியிடப்பட்ட திறைசேரி முறி பரிமாற்ற விஞ்ஞாபனமானது (“பரிமாற்ற விஞ்ஞாபனம்), அதனைத்தொடர்ந்து, 2023 செத்தெம்பர் 12 அன்று திறைசேரி முறிகளைப் பரிமாற்றுவதற்கான அழைப்பின் பெறுபேறுகள் பற்றிய அறிவித்தல்களுடன் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் வெளியிடப்பட்டது. (இதில் பயன்படுத்தப்பட்ட ஆனால் வேறுவகையில் வரைவிலக்கணம் செய்யப்படாத சொற்பதங்கள் பரிமாற்று விஞ்ஞாபனத்திலுள்ள அத்தகைய சொற்களுக்கு வழங்கப்பட்ட பொருளைக் கொண்டுள்ளன).

அதற்கமைய, குடியரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த செல்லுபடியான முன்வைப்புகளுக்கான வெளிநின்ற தகைமையுடைய முறிகள், பன்னிரண்டு (12) புதிய கிரமமாகக் குறைவடையும் (ளுவநி-னுழறn) நிலையான கூப்பன்ழூ திறைசேரி முறிகளாக விலைஈட்டு விகிதத்திற்கு பரிமாற்றுவதைத் தொடர்புபடுத்தி மாற்றம்செய்யப்பட்டன.

உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்டத்தில் ஊழியர் சேமலாப நிதியம் பங்குபற்றுதல்

ஊழியர் சேமலாப நிதியம், ஒரு தகைமையுடைய பங்கேற்பாளர் என்றவகையிலும் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் அங்கீகாரத்துடனும் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானமொன்றினைத் தொடர்ந்து நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சினால் (நிதி அமைச்சு) ஆக்கப்பட்ட அழைப்பின் நியதிகளின் பிரகாரம் ஊழியர் சேமலாப நிதியமானது உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஊழியர் சேமலாப நிதியத்தின் திறைசேரி முறிகள் சொத்துப்பட்டியலினை பரிமாற்றுவதற்கான விருப்பறிவிப்பை சமர்ப்பித்துள்ளதென நிதியத்தின் உறுப்பினர்களுக்கு அறிவிக்க விரும்புகின்றது. அதற்கமைய பின்வருவன உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன.

பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தொடர்பான இரண்டாவது தேசிய இடர்நேர்வு மதிப்பீட்டின் மட்டுப்படுத்தப்பட்ட விடய அறிக்கையை இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு வெளியிடுகிறது

அரச மற்றும் தனியார் துறை பங்குதாரர்களுடன் இணைந்து இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவினால் நடாத்தப்பட்ட மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதி நிதியளித்தல் தொடர்பான 2021/2022ஆம் ஆண்டுகளுக்கான தேசிய இடர்நேர்வு மதிப்பீட்டின் மட்டுப்படுத்தப்பட்ட விடய அறிக்கையை இலங்கை வெளியிட்டது. இம்மதிப்பீடானது நாட்டிலுள்ள பணம் தூயதாக்கல்ஃபயங்கரவாதிக்கு நிதியளித்தல் இடர்நேர்வுகளை இனங்காண்பதை இலக்காகக் கொண்டது. இலங்கை எதிர்கொண்ட மிகவும் குறிப்பிடத்தக்க பணம் தூயதாக்கல்/பயங்கரவாதிக்கு நிதியளித்தல் அச்சுறுத்தல்கள், பாதிக்கப்படும் தன்மைகள் மற்றும் இடர்நேர்வுகளை இம்மதிப்பீடு எடுத்துக்காட்டுகின்றது. 

Pages

சந்தை அறிவிப்புகள்