கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 2024 யூனில் 59.5 சுட்டெண் பெறுமதியினை அடைந்து, மூன்றாவது தொடர்ச்சியான அளவீட்டுச் சுற்றுக்களில் அதன் அதிகூடிய சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. தொழிற்துறையானது பல்தரப்பு முகவராண்மைகள் மூலம் நிதியளிக்கப்பட்ட குறிப்பாக, வீதிப் புனரமைப்பு மற்றும் நீர் விநியோகத்துடன் தொடர்புபட்ட கருத்திட்டங்கள் மூலம் பிரதானமாக தூண்டப்பட்டிருந்ததென அநேகமான பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர்.
















