‘இலங்கையின் பொருளாதார சமூகப் புள்ளிவிபரங்கள் - 2024’ என்ற இலங்கை மத்திய வங்கியின் சமூகப் பொருளாதார புள்ளிவிபரங்களின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.
‘தேசிய வெளியீடு, செலவினம் மற்றும் வருமானம்’, ‘பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு’, ‘விலைகள், கூலிகள் மற்றும் தொழில்நிலை’, ‘வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் நிதி’, ‘அரச நிதி’, ‘பணம், வட்டி வீதங்கள் மற்றும் மூலதனச் சந்தைகள்’, ‘நிதியியல் துறைச் செயலாற்றம்’ அத்துடன் ‘இலங்கை மற்றும் உலகின் ஏனைய நாடுகள்’ ஆகிய எட்டு முக்கிய விடயப்பரப்புக்களின் கீழ் வகைப்படுத்தப்பட்ட புள்ளிவிபர அட்டவணைகளை உள்ளடக்குகின்ற இத்தகவல்களை இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களம் தொகுத்துள்ளது. ஒவ்வொரு இவ் விடயங்களும் சமூகப் பொருளாதார புள்ளிவிபரங்களில் ஆர்வமுள்ளோருக்கு பயனுள்ள தகவல் சேகரிப்பாக அமையும்.