நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு இடர்நேர்வுகளை தோற்றுவிக்கின்ற தடைசெய்யப்பட்ட திட்டங்களின் எச்சரிக்கைமிக்க அதிகரிப்பினை கட்டுப்படுத்துவதற்கும் அத்தகைய திட்டங்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் இலங்கை மத்திய வங்கி முனைப்பான வழிமுறைகளை எடுத்து வருகின்றது. தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள், வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) (1) ஆம் பிரிவின் ஏற்பாடுகளை மீறியுள்ளனரா அல்லது மீறுவதற்கு சாத்தியம் காணப்படுகின்றதா என்பதனை தீர்மானிப்பதற்கு வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) (3)ஆம் பிரிவின் கீழ் விசாரணைகளை நடாத்துவதை இம்முயற்சிகள் உள்ளடக்குகின்றன.
















