தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் பருவகால மாதிரியினை பின் பற்றி ஏப்பிறல் மாதத்தில் 41.8 கொண்ட சுட்டெண்ணினை பதிவு செய்ததுடன், இது, மாச்சு மாதத்துடன் ஒப்பிடுகையில் 24.7 சுட்டெண் புள்ளிகளை கொண்ட ஒரு குறைவாகும். இது 2017 ஏப்பிறலில் தயாரிப்பு நடவடிக்கைகள் சுருக்கமடைந்தமையினை குறித்து காட்டியதுடன் 2017 மாச்சில் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் அவதானிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பினை தொடர்ந்து உற்பத்தி மற்றும் புதிய கடட் ளைகள் துணைச்சுட்டெண்களில் ஏற்பட்ட குறைவே பெரிதும் காரணமாக அமைந்தன. மேலும், அளவீட்டு பதிலிறுப்பாளர்களினால் எடுத்துக்காட்டப்பட்டவாறு ஏப்பிறலின் புத்தாண்டு விடுமுறைகளும் தயாரிப்பு நடவடிக்கைகளின் இந்த பருவகால நடவடிக்கைகளில் காணப்பட்ட குறைவுக்கு பங்களிப்பு செய்தன. மேலும், கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைவடைந்து காணப்பட்டன. மேலும், நிரமப்லர் வழங்கல் நேர துணைச்சுட்டெண்ணினை தவிர கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் ஏனைய அனைத்து துணைச்சுட்டெண்களும் 2017 ஏப்பிறலில் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு கீழாக வீழ்ச்சியடைந்து காணப்பட்டன.