Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

அரச பிணையக் கொடுக்கல்வாங்கல்களின் அதேநேர அறிவித்தல்கள் (குறுஞ்செய்தி/ மின்னஞ்சல் மூல எச்சரிக்கைச் சேவை)

அரச பிணையங்களின் முதலீட்டாளர்களின் லங்காசெக்குயர் முறைமையின் ஷவாடிக்கையாளர்கள்| விழிப்புணர்வினை மேம்படுத்தும் பொருட்டு மற்றும் முதலீடுகளுக்கு மேலுமொரு சிறப்பியல்பினை அறிமுகப்படுத்தும் முகமாகவும், லங்காசெக்குயர் முறைமையை நடைமுறைப்படுத்தி பராமரிக்கும் இலங்கை மத்திய வங்கியானது குறுஞ்செய்தி/ மின்னஞ்சல் மூல எச்சரிக்கை சேவையினை 2019 மாச்சு 25 முதல் நடைமுறைப்படுத்தியது. 

வாடிக்கையாளர்களின் பிணையக் கணக்குகளில் இடம்பெறும் பத்திரங்களற்ற பிணையங்களின் ஒவ்வொரு அசைவின் அதேநேர அறிவித்தல்கள், குறுஞ்செய்தி/ மின்னஞ்சல் எச்சரிக்கையின் மூலமாக, அரச பிணையங்களின் முதலீட்டாளர்களுக்கு இச்சேவையின் மூலம் வழங்கப்படுகிறது. அதாவது வாடிக்கையாளர்கள் அவர்களது பிணையக் கணக்குகளில் கொடுக்கல்வாங்கல் இடம்பெற்றதற்கான அறிவுறுத்தல்களை ('லங்காசெக்குயர்" இலிருந்து குறுஞ்செய்தி மற்றும் 'reply@cbsl.lk" இலிருந்து மின்னஞ்சல்) உடனடியாகப் பெற்றுக்கொள்வர். 

நாணயக் கொள்கை மீளாய்வு - இல. 02 - 2019

மத்திய வங்கியின் நாணயச்சபை இன்று, 2019 ஏப்பிறல் 08, நடைபெற்ற அதன் கூட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. அதன்படி, மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் என்பன முறையே 8.00 சதவீதமாகவும் 9.00 சதவீதமாகவும் காணப்படும். பொருளாதாரம் அதனது சாத்தியப்பாட்டு மட்டத்தை அடைவதனை இயலுமைப்படுத்தும் விதத்தில் நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதியாக பேணவேண்டியதன் பரந்த நோக்குடன், உள்நாட்டுப் பொருளாதாரம், நிதியியல் சந்தை அதேபோன்று உலகளாவிய பொருளாதாரத்தின் அபிவிருத்திகள் என்பவற்றின் தற்போதைய மற்றும் எதிர்கால அபிவிருத்திகளை மிகக்கவனமாக பகுப்பாய்வு செய்ததன் பின்னர் நாணயச்சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. 

பொதுமக்களுக்கு நாணயக் குற்றிகளை வழங்குவதற்கு ஒரு கருமபீடத்தினை திறத்தல்

2019 மாச்சு 27இல் இல.30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 1 இல் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் தலைமைக் காரியாலயக் கட்டிடத்திலுள்ள தரைத்தள காசுக் கரும பீடங்களில் ஒரு கருமபீடத்தினைப் பொதுமக்களுக்கு நாணயக் குற்றிகளை வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கி திறந்துவைக்கின்றது. 

இக்கருமபீடமானது, அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தவிர்ந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மு.ப 9.00 மணி தொடக்கம் மு.ப 11.00 மணிவரை பொதுமக்களுக்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும். 

நாணயக் குற்றிகளானது, ஒவ்வொன்றும் 100 எண்ணிக்கைகள் கொண்ட பக்கற்றுக்களில் வழங்கப்படுமென்பதுடன் ஒரே நேரத்தில் குறைந்தளவு ஒரே முகப்பெறுமதியிலிருந்து 100 குற்றிகளைக் கொண்ட ஒரு பக்கற்றேனும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல் வேண்டும். இக்கருமபீடத்திலிருந்து ஒரே நேரத்தில் ஒரு தனிநபரினால் பெற்றுக்கொள்ளக்கூடிய ரூ.1/=,ரூ.2/=, ரூ.5/=, ரூ.10/= போன்ற ஏதாகிலும் முகப்பெறுமதியிலிருந்து உயர்ந்தபட்சப் பெறுமதி ரூ.20,000 ஆகும். 

2019 பெப்புருவரியில் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100)  ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் தளத்தாக்கத்தின் பிரதானமான காரணத்தினால் 2019 சனவரியின் 1.2 சதவீதத்திலிருந்து 2019 பெப்புருவரியில் 2.4 சதவீதமாக அதிகரித்தது. இதேவேளையில், ஆண்டுக்கு ஆண்டு உணவல்லாப் பணவீக்கமானது 2019 சனவரியின் 6.5 சதவீதத்திலிருந்து 2019 பெப்புருவரியில் 6.7 சதவீதத்திற்கு அதிகரித்திருந்த வேளையில், உணவுப் பணவீக்கமும் 2019 சனவரியின் -4.8 சதவீதத்திலிருந்து 2019 பெப்புருவரியில் -2.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

இலங்கை மத்திய வங்கியின் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கல்

இலங்கை அரசாங்கத்தின் சார்பில், இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட 5 ஆண்டு மற்றும் 10 ஆண்டு கால நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் தொடர்பிலான ஆளுகை செயன்முறைகள் மற்றும் விளைவுகளை வழங்குவது தொடர்பான அண்மைய பத்திரிகைக் கட்டுரைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி பின்வரும் தெளிவுபடுத்தல்களை வழங்க விரும்புகின்றது:

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2019 பெப்புருவரி

தயாரிப்பு நடவடிக்கைகள் 2019 சனவரியுடன் ஒப்பிடுகையில் 2019 பெப்புருவரியில் மெதுவான வீதத்தில் அதிகரித்தமைக்கு குறிப்பாக புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் தொடர்பான தயாரிப்புநடவடிக்கைகளில் புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகள் குறைவடைந்தமையே முக்கிய காரணமாகும். இவ்வீழ்ச்சிக்கு பெப்புருவரியில் வேலைநாட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையே முக்கிய காரணமாகும். புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் இணைந்துசெல்லும் விதத்தில் இம்மாதகாலத்தில் கொள்வனவுகளின் இருப்பும் குறைவடைந்தது.

எவ்வாறாயினும், இனிவரும் பருவகால கேள்விகளுக்காக வியாபார நடவடிக்கைகளை உயர்த்தும் பொருட்டு புதிய ஊழியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதன் காரணமாக தொழில்நிலையில் சிறிய முன்னேற்றமொன்று காணப்பட்டது. அதேவேளை, நிரம்பலர் வழங்கல் நேரம் சிறிதளவு வீதத்தினால் நீடிக்கப்பட்டது. பெப்புருவரியின் தொடக்கத்தில் பொருட்களின் வழங்கல் ஏற்பாடுகளும் சீன புத்தாண்டு பண்டிகை விடுமுறை காரணமாக ஏற்பட்ட வழங்கல் இடையூறுகளும் நிரம்பலர் வழங்கல் நேரத்தை நீடித்திருக்கின்றன. புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகள் நீங்கலான அனைத்து துணைச் சுட்டெண்களும் நடுநிலையான 50.0 இற்கு மேலான பெறுமதியைப் பதிவுசெய்தன. 

Pages

சந்தை அறிவிப்புகள்