இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது, 2020 ஏப்பிரல் 15 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் முதன்மை கொள்கை வட்டி வீதங்களான துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன 2019 மே 31இலிருந்து 200 அடிப்படை புள்ளிகளால் ஒட்டுமொத்தமாக குறைக்கப்பட்டமையினை அவதானத்தில் கொண்டு, வங்கி வீதத்தினை +300 அடிப்படை புள்ளிகள் எல்லையுடன் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்துடன் இசைந்து செல்லும் விதத்தில் தன்னியக்கமாக சரிசெய்துகொள்ள அனுமதிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றது.
-
The Central Bank of Sri Lanka Reduces the Bank Rate
-
Measures taken by the Central Bank of Sri Lanka to Provide Flexibility to Non-Bank Financial Institutions (NBFIs) to Support Businesses and Individuals Affected by the Outbreak of Coronavirus
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்ப்பரவலினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஆதரவளிப்பதற்கு வசதிசெய்யும் பொருட்டு, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்த
-
Introducing a Special Deposit Account to Support the National Effort to Manage the Challenges Faced due to COVID-19 Outbreak
இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையின் ஆலோசனையுடன் இலங்கை அரசாங்கமானது, நாட்டின் கொரோனா வைரஸ் (கொவிட் - 19) எதிர்பாராத் தாக்கத்திலிருந்து மீண்டெழுவதற்கான தேசிய அளவிலான முயற்சிகளுக்கான உதவிகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஒரு சிறப்பு வைப்பு கணக்கினை அறிமுகப்படுத்துகிறது.
-
The Government and the Central Bank of Sri Lanka Introduce Further Measures to Preserve the Foreign Currency Reserve Position of Sri Lanka
கொவிட் - 19 உலகளாவிய தொற்றுநோய்ப் பரவலின் காரணமாக இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கத்தினைக் கருத்திற்கொண்டு, நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலையினைப் பேணுதல் மற்றும் வெளிநாட்டுச் செலாவணி வீதம் மீது தற்போது காணப்படுகின்ற அழுத்தத்தினைக் குறைத்தல் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையுடனும் அமைச்சரவையின் ஒப்புதலுடனும் கௌரவ நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர், மூன்று (03) மாதங்களைக் கொண்ட காலப்பகுதியொன்றுக்காக மூலதனக் கொடுக்கல்வாங்கல் மீதான வெளிமுகப் பணவனுப்பல்கள் மீது பின்வரும் வழிமுறைகளை விதிக்கின்ற கட்டளையொன்றினை வழங்கியுள்ளார்.
-
The Central Bank of Sri Lanka Further Reduces Policy Interest Rates
2020 ஏப்பிறல் 03 அன்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2020 ஏப்பிறல் 03 அன்று வியாபாரம் முடிவுறுத்தப்பட்டதிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் 25 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 6.00 சதவீதத்திற்கும் 7.00 சதவீதத்திற்கும் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானமானது, சந்தை நிலைமைகளை இலகுபடுத்துவதற்கு இதுவரையில் எடுக்கப்பட்ட வழிமுறைகளை பூரணப்படுத்துவதுடன், கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்த்தொற்றுப் பரவலின் வெளித்தாக்கத்தினாலும் நாட்டிற்குள் அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படுகின்ற கட்டுப்பாடுகளினாலும் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனியாட்களுக்கு மேலதிக நிவாரணங்களை வழங்குவதற்கு உள்நாட்டு நிதியியல் சந்தையினை இயலுமைப்படுத்தும்.
-
Central Bank of Sri Lanka Decides to Establish a Rupees 50 Billion, Six Month Re-Financing Facility and Issues Instructions to Financial Institutions to Support Covid-19 Hit Businesses and Individuals
கொவிட் - 19இன் தாக்கத்திற்குள்ளான தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு, கடன் மீள்செலுத்தலைப் பிற்போடுதல் (மூலதனம்+வட்டி) மற்றும் ஒரு தொழிற்படு மூலதனக் கடன் உள்ளடங்கலான ஒரு பரந்தளவிலான சலுகைகளை அறிமுகப்படுத்துவதென 2020.03.20இல் அமைச்சரவை அமைச்சர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கி ஓர் மீள்நிதியிடல் வசதியை உருவாக்கத் தீர்மானித்துள்ளது. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக் கம்பனிகள் (நிதி நிறுவனங்கள்) ஆகியவை 2020.03.25இல் ஆரம்பமாகும் இம் மீள்நிதியிடல் வசதியில் பங்குபற்றுவதற்குத் தகுதியானவை என்பதோடு அவை அறிவிக்கப்பட்ட சலுகைகளையும் வழங்கலாம்.
-
Inflation decreased in March 2020
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 பெப்புருவரியின் 6.2 சதவீதத்திலிருந்து 2020 மாச்சில் 5.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்தமையே காரணமாக அமைந்தன. அதன்படி, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான உணவுப் பணவீக்கமானது 2020 பெப்புருவரியின் 14.7 சதவீதத்திலிருந்து 2020 மாச்சில் 12.8 சதவீதத்திற்கு வீழச்சியடைந்ததுடன் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான உணவல்லாப் பணவீக்கமானது 2020 மாச்சில் 2.5 சதவீதத்தினைப் பதிவுசெய்தது.
-
Measures taken by the Central Bank of Sri Lanka to Provide Flexibility to Licensed Finance Companies and Specialised Leasing Companies to Support Businesses and Individuals Affected by the Outbreak of Coronavirus (COVID – 19)
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்ப்பரவலினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனியாட்களுக்கு ஆதரவளிப்பதற்கு வசதிசெய்யும் பொருட்டு, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்கும் பொருட்டு பல்வேறு எண்ணிக்கையிலான வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானமெடுத்திருக்கின்றது. இந்த ஆரம்ப முயற்சிகளுக்கு ஒத்திசைவாக, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் முகம் கொடுக்கின்ற உடனடியான அச்சுறுத்தல்களை மிகவும் கருத்திற்கொண்டு மூலதன விரிவாக்கம் போன்ற பல்வேறு ஒழுங்குபடுத்தல் வழிமுறைகளின் நடைமுறைப்படுத்தல் பின்தள்ளிப்போடப்படும் வேளையில் தற்காலிக படிமுறையாக குறிப்பிட்ட ஒழுங்குபடுத்தல் வழிமுறைகள் தளர்த்தப்படுகின்றன.
-
External Sector Performance - January 2020
வர்த்தகப் பற்றாக்குறையானது ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் வீழ்ச்சியடைந்த அதேவேளையில் இறக்குமதிகள் மீதான செலவினம் அதிகரித்தமையின் காரணமாக 2019 சனவரியுடன் ஒப்பிடுகையில் 2020 சனவரியில் விரிவடைந்தது. சுற்றுலாக் கைத்தொழிலானது 2019இன் இறுதியில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களிலிருந்து துரிதமாக மீட்சியடைந்த போதிலும் கொவிட் - 19 நோய்த்தொற்று 2020 சனவரியில் மீட்சியடைகின்ற போக்கினைத் திரும்பலடையச் செய்தது. தொழிலாளர் பணவனுப்பல்கள், 2020 சனவரியில் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன. அதேவேளை, அரச பிணையங்கள் சந்தையிலிருந்தான வெளிநாட்டு முதலீடுகள் 2020 சனவரியில் தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த அதேவேளை கொழும்புப் பங்குச் சந்தையிலிருந்து தேறிய வெளிப்பாய்ச்சலொன்று அவதானிக்கப்பட்டது. இலங்கை ரூபா ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிராக பரந்தளவில் நிலையானதாகக் காணப்பட்டதுடன் மீண்டும் 2020 சனவரியில் உயர்வடைந்தது.
-
Central Bank of Sri Lanka implements Extraordinary Regulatory Measures to facilitate Banks to support COVID-19 affected Businesses and Individuals
கொவிட் - 19ஆல் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சில சலுகைகளை வழங்குவதற்காக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளுக்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்குமுகமாக பல அதிவிசேட ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை முடிவுசெய்துள்ளது.