தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 சனவரியின் 7.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2020 பெப்புருவரியில் 8.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, 2019 பெப்புருவரியில் காணப்பட்ட தாழ்ந்த தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கத்தினால் உந்தப்பட்டது. மேலும், 2020 பெப்புருவரியில் உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 16.3 சதவீதமாகக் காணப்பட்ட வேளையில் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2.1 சதவீதத்தினைப் பதிவுசெய்தது.
-
NCPI based Inflation increased in February 2020
-
Operations of Banks on 23rd March 2020
பொதுமக்களுக்கு வங்கித்தொழில் பணிகளை வழங்கும்பொருட்டு பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் 2020 மாச்சு 23ஆம் நாளன்று குறைந்த இரண்டு (2) மணி நேரம் தமது கிளைகளைத் திறந்துவைக்குமாறு அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளையும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளையும் இலங்கை மத்திய வங்கி கோரியுள்ளது.
-
The Central Bank of Sri Lanka Introduces Urgent Measures to Ease the Pressure on the Exchange Rate and Prevent Financial Market Panic due to the COVID-19 Pandemic
1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டம், 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டம் மற்றும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டம் என்பனவற்றின் ஒதுக்கங்களின் அடிப்படையில், இலங்கை மத்திய வங்கியானது கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்த்தொற்றுப் பரவுதலினால் ஏற்படக்கூடிய வெளிநாட்டுச் செலாவணி வீதம் மீதான அழுத்தத்தினை இலகுபடுத்தவும் மற்றும் நிதியியல் சந்தைக் குழப்பத்தைத் தடுப்பதற்கும் பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
-
Sri Lanka Purchasing Managers’ Index - February 2020
2020 பெப்புருவரியில் தயாரிப்புக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மெதுவான வேகத்தில் அதிகரித்து 53.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தமைக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸின் நோய்ப் பரவலின் காரணமாக புதிய கட்டளைகளிலும் தொழில்நிலையில் விரிவாக்கத்தில் வேகம் குறைந்த அதேவேளை, அடுத்த மூன்று மாதங்களுக்கான எதிர்பார்க்கைகள் கணிசமாகக் குறைவடைந்தமை முக்கிய காரணமாக அமைந்தது.
கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்ப் பரம்பலின் காரணமாக புதிய வியாபார நடவடிக்கை மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட மெதுவான விரிவடைதல் மூலம் துணையளிக்கப்பட்டு 2020 பெப்புருவரியில் பணிகள் துறை விரிவாக்கமானது 2020 சனவரியுடன் ஒப்பிடுகையில் மெதுவடைந்தது.
-
Measures Adopted by Central Bank of Sri Lanka during the Public Holiday Period Announced by the Government
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பொது விடுமுறைக் காலத்தின் போது இலங்கை மத்திய வங்கியினால் பின்வரும் வழிமுறைகள் பின்பற்றப்படுமென இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறியத்தருகின்றது.
-
The Central Bank of Sri Lanka Eases Monetary Policy Further to Support Economic Activity amidst the Spread of the COVID-19 Pandemic
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 மாச்சு 16ஆம் திகதி அதன் நாணயக் கொள்கை நிலைப்பாடு தொடர்பாக நடைபெற்ற அவசரக்கூட்டத்தில், 2020 மாச்சு 17ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையூம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையூம் 25 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 6.25 சதவீதத்திற்கும் 7.25 சதவீதத்திற்கும் குறைப்பதற்கும் தற்பொழுதுள்ள ஒதுக்கு பேணப்படுகின்ற காலப்பகுதியில் நடைமுறைக்குவரும் வகையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் சார்ந்த வைப்புப் பொறுப்புக்களுக்குமான நியதி ஒதுக்கு விகிதத்தினை 1.00 சதவீதப் புள்ளியினால் 4.00 சதவீதத்திற்கும் குறைப்பதற்கும் தீர்மானித்துள்ளது.
-
Launching of '2020 - Year of Digital Transactions' Promotional Campaign
“2020 - டிஜிட்டல் கொடுக்கல்வாங்கல்கள் ஆண்டு” ஊக்குவிப்புப் பிரசாரம், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் அவர்களினால் 2020 மாச்சு 11ஆம் திகதியன்று சிரேஷ்ட வங்கியாளர்கள், வங்கியல்லா நிதி நிறுவனங்களின் அலுவலர்கள், மத்திய வங்கி அலுவலர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்களின் பங்கேற்புடன் இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் தொடங்கிவைக்கப்பட்டது. ஆரம்ப வைபவத்தைத் தொடர்ந்து இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. டி. குமாரதுங்க, “Cash වදේ” என்ற காசுத் தொல்லை பற்றிய விளம்பரப் பிரசாரத்தினை அறிமுகம் செய்தார். பணத்தைப் பயன்படுத்துவதன் காரணமாக திருட்டுப் போகும் இடர்நேர்வு அல்லது வரிசைகளில் காத்திருந்து நேரத்தை விரையமாக்குதல் போன்றன காரணமாக நுகர்வோரும் வர்த்தகர்களும் எதிர்கொள்கின்ற இன்னல்களை இவ்விளம்பரப் பிரசாரம் எடுத்துக்காட்டுகின்றது.
-
Credit Support to Accelerate Economic Growth
நாட்டில் பொருளாதார வளர்ச்சியினை துரிதப்படுத்தும் நோக்குடன் வங்கித்தொழில் துறையின் தகைமையுடைய சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சிக் கடன் பெறுநர்களுன்கென விசேட கொடுகடன் ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, வங்கியல்லா நிதி நிறுவனங்கள் துறை கடன் பெறுநர்களுக்கும் நன்மைகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தினைக் கருத்திற்கொண்டு வங்கியல்லா நிதி நிறுவனங்களுக்கும் இதனையொத்த திட்டமொன்றினை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
-
Monetary Policy Review - No. 2 of 2020
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 மாச்சு 04ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 6.50 சதவீதம் மற்றும் 7.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கும் இதன்மூலம் அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்வதற்கும் தீர்மானித்தது. சபையானது, உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தை அதேபோன்று உலகளாவிய பொருளாதாரம் என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் என்பனவற்றை மிகக் கவனமாக ஆய்வு செய்தமையினைத் தொடர்ந்து இத்தீர்மானத்திற்கு வந்துள்ளது. பணவீக்கத்தினை 4–6 சதவீத வீச்சிற்குள் பேணும் நோக்குடன் நாணயச் சபையின் தீர்மானம் இசைவானதாகக் காணப்படும் அதேவேளையில் இது நடுத்தர காலத்தில் பொருளாதார வளர்ச்சி தனது உள்ளாற்றலை எய்துவதற்கு ஆதரவளிக்கும்.
-
CCPI based Inflation increased in February 2020
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013ஸ்ரீ100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 சனவரியின் 5.7 சதவீதத்திலிருந்து 2020 பெப்புருவரியில் 6.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு, 2019 பெப்புருவரியில் நிலவிய தாழ்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கமே ஒரே காரணமாக அமைந்திருந்தது. 2020 பெப்புருவரியில் உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 14.7 சதவீதத்தில் அமைந்திருந்த வேளையில் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2.8 சதவீதத்தில் பதிவுசெய்யப்பட்டது.
ஆண்டுச் சராசரியின் அடிப்படையொன்றில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 சனவரியின் 4.5 சதவீதத்திலிருந்து 2020 பெப்புருவரியில் 4.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.