தேசிய நுகா்வோா் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 ஒத்தோபாின் 5.6 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 4.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு 2018 நவெம்பாில் நிலவிய உயா்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கமே பங்களித்தது. ஆண்டுக்கு ஆண்டு உணவுப் பணவீக்கம் 2019 ஒத்தோபாின் 7.3 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 4.0 சதவீதத்திற்கு கணிசமாக வீழ்ச்சியடைந்த வேளையில் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு) 2019 ஒத்தோபாின் 4.3 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது.
ஆண்டுச் சராசாியின் அடிப்படையொன்றில் அளவிடப்படுகின்ற தேசிய நுகா்வோா் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 ஒத்தோபாின் 2.8 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 3.0 சதவீதத்திற்கு அதிகாித்தது.