2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமமளிக்கப்பட்ட நிதிக் கம்பனியொன்றான த பினான்ஸ் கம்பனி பிஎல்சி 2008 ஆண்டில் செலிங்கோ குழுமத்தினுள்ளான பல எண்ணிக்கையான நிதியியல் நிறுவனங்களின் தோல்வியினால் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அப்போதிருந்து கம்பனியின் நிதியியல் நிலைமை படிப்படியாக சீர்குலைந்து, உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய தேவையாகவுள்ள மோசமான திரவத்தன்மைப் பிரச்சனைகளுடன் தற்போது காணப்படுகின்றது. வாய்ப்புமிக்க முதலீட்டாளர்களை இனங்காண்பதற்கும் கம்பனியினை மீள்கட்டமைப்பதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அத்தகைய முயற்சிகள் இன்னும் பயனளிக்கவில்லை.
-
Regulatory actions taken by the Central Bank of Sri Lanka on The Finance Company PLC
-
Sri Lanka Purchasing Managers’ Index - August 2019
2019 ஓகத்தில் தயாரிப்பு நடவடிக்கைகள் மேலும் உயர்ந்த வீதத்தில் விரிவடைந்து 56.6 கொண்ட பெறுமதிச் சுட்டெண் ஒன்றினைப் பதிவுசெய்தன. இது, 2019 யூலையுடன் ஒப்பிடுகையில் 0.9 சுட்டெண் புள்ளிகளைக் கொண்டதொரு அதிகரிப்பாகும். தயாரிப்பு கொள்வனவு முகாமைத்துவச் சுட்டெண்ணில் ஏற்பட்ட இவ்விரிவிற்கு புதிய கட்டளைகளில் விசேடமாக எதிர்வருகின்ற பண்டிகைக் கால கேள்வியினை நிறைவுசெய்வதற்காக உணவு மற்றும் குடிபானங்கள் அத்துடன் ஆடைகள் மற்றும் அணியும் ஆடைகள் துறையின் தயாரிப்பில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். அதேவேளை, ஓகத்து மாதகாலப்பகுதியின் போது தொழில்நிலையானது விசேடமாக உணவு மற்றும் குடிபானத் துறையில் மெதுவான வீதத்தில் மேலும் அதிகரித்தது. அதேவேளை, புடவை மற்றும் ஆடை தொழில்துறையிலுள்ள பல பதிலிறுப்பாளர்கள் சந்தையில் தொழிலாளர் கிடைக்கப்பெறும் தன்மை குறைவாகவிருந்தது என சுட்டிக்காட்டினர்.
-
Financial Intelligence Unit of Sri Lanka entered into Memoranda of Understanding with Condominium Management Authority and National Gem and Jewellery Authority
2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், கூட்டுறுதி தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் மற்றும் இலங்கையிலுள்ள உரிமம்பெற்ற இரத்தினக்கல் மற்றும் ஆபரண வணிகர்கள் தொடர்பில் பணம் தூயதாக்கலைத் தடுத்தல்/ பயங்கரவாததத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் பற்றிய சட்ட ரீதியான கடப்பாடுகள் காத்திரமான விதத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்தும் விதத்தில் கூட்டுறுதி தொடர்மாடிமனை முகாமைத்துவ அதிகாரசபையிடமிருந்தும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையிடமிருந்தும் நிதியியல் உளவறிதல் பிரிவு எதிர்பார்க்கின்றவாறு தகவல்களை வழங்குதல் மற்றும் ஆதரவுத் தன்மையினை வரைவிலக்கணப்படுத்துவது தொடர்பான செயன்முறைகளை மேலோட்டமாக அவற்றிற்குத் தெரிவிக்கும் விதத்தில் இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது இலங்கை தொடர்மாடிமனை முகாமைத்துவ அதிகாரசபையுடனும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடனும் 2019 ஓகத்து 28ஆம் நாளன்று இலங்
-
Land Price Index – First Half of 2019
இலங்கை மத்திய வங்கியினால் தொகுக்கப்படுகின்ற கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைச் சுட்டெண் 2018இன் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 13.6 சதவீத அதிகரிப்பினைப் பதிவுசெய்து 2019 முதல் அரையாண்டின் போது 132.2 சுட்டெண்களை அடைந்தது. காணி விலைச் சுட்டெண்ணின் மூன்று துணை விலைச் சுட்டெண்களான அதாவது, வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் துணைச் சுட்டெண்கள் இவ்வதிகரிப்பிற்கு பங்களிப்புச் செய்தன.
-
The Central Bank of Sri Lanka Reduces its Policy Interest Rates
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2019 ஓகத்து 22ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் 50 அடிப்படை புள்ளிகளால் முறையே 7.00 சதவீதம் 8.00 சதவீதமாக குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. நாணயச் சபையானது உள்நாட்டுப் பொருளாதாரத்திலும் நிதியியல் சந்தைகளிலும் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரத்திலும் தற்பொழுது காணப்படுகின்ற மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளை மிகக் கவனமாக பகுப்பாய்வு செய்தமையினைத் தொடர்ந்து தற்போது நிலவும் தாழ்ந்த பணவீக்கம் மற்றும் விரும்பத்தக்க 4-6 சதவீத வீச்சில் சிறந்த முறையில் நிலைப்படுத்தப்பட்ட நடுத்தர கால பணவீக்கத் தோற்றப்பாடு காணப்படும் சூழலில் பொருளாதாரச் செயற்பாடுகளின் மீளெழுச்சிக்கு மேலும் ஆதரவளிக்கும் நோக்கத்துடன் இத்தீர்மானத்திற்கு வந்துள்ளது.
-
Inflation in July 2019
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 யூனின் 2.1 சதவீதத்திலிருந்து 2019 யூலையில் 2.2 சதவீதமாக சிறிதளவு அதிகரித்தமைக்கு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் பொருட்களின் விலைகளிலான மாதாந்த அதிகரிப்புக்களே காரணமாக அமைந்தன. அதேவேளை, 2019 யூலையில் ஆண்டிற்கு ஆண்டு உணவு மற்றும் உணவல்லாப் பணவீக்கம் முறையே -2.5 சதவீதத்தினையும் 6.1 சதவீதத்தினையும் பதிவுசெய்தது.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 யூனின் 2.0 சதவீதத்திலிருந்து 2019 யூலையில் 1.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
-
President confers the “Deshamanya” title on Dr. Indrajit Coomaraswamy, Governor of the Central Bank of Sri Lanka
உன்னதமிக்க மற்றும் தலைசிறந்த சேவையினை தாய் நாட்டிற்கு வழங்கியமைக்காக புகழ்பெற்ற ஆளுமைமிக்கவர்களுக்கான 'தேசிய கௌரவம்" அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் 2019 ஓகத்து 19ஆம் திகதியன்று வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களுடன் மேலும் ஐந்து ஆளுமைமிக்கவர்களுக்கு சனாதிபதியினால் 'தேசமான்ய" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
'தேசமான்ய" என்பது குடியியல் கௌரவமாக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் இரண்டாவது அதியுயர்வான தேசிய கௌரவமாகும். இது தேசத்திற்கு வழங்கிய உன்னதமிக்க மற்றும் தலைசிறந்த சேவையினை அடையாளப்படுத்தி வழங்கப்படுகின்றது.
-
External Sector Performance - June 2019
வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சுருக்கத்தின் காரணமாக 2019 யூனில் வெளிநாட்டுத் துறை மேலும் வலுவடைந்த வேளையில் நாட்டிற்கான இரு பன்னாட்டு முறிகளின் வழங்கலிலிருந்தான பெறுகைகளின் காரணமாக மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் பெருமளவிற்கு அதிகரித்தன.
2019 யூனில், வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஐ.அ.டொலர் 316 மில்லியன்களுக்கு குறுக்கமடைந்தது. இது, 2010 ஒத்தோபருக்குப் பின்னர் ஏற்பட்ட மிகக்குறைந்ததொரு அளவாகும்.
இக்குறிப்பிடத்தக்க குறைப்பிற்கு இறக்குமதிச் செலவினம் 23.1 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமையும் ஏற்றுமதி வருவாய்கள் 5.8 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) அதிகரித்தமையுமே காரணமாகும்.
-
Release of “Economic and Social Statistics of Sri Lanka – 2019” Publication
இலங்கை மத்திய வங்கி, இலங்கையின் பொருளாதார சமுகப் புள்ளிவிபரங்கள் - 2019 என்ற இலங்கை மத்திய வங் கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.
இவ்வெளியீடானது, தேசிய கணக்குகள், வேளாண்மை, கைத்தொழில், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் நிதி, அரசநிதி, வங்கித்தொழில் மற்றும் நிதியியல் நிறுவனங்கள், பணம் மற்றும் மூலதனச் சந்தைகள், விலைகள் மற்றும் கூலிகள், குடித்தொகை மற்றும் தொழிற்படை, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், தொலைத் தொடர்பூட்டல் பணிகள், காலநிலை ஆகிய துறைகளிலுள்ள இலங்கையின் பொருளாதார, சமூகக் குறிகாட்டிகளையும் ஏனைய நாடுகளிலுள்ள பொருளாதார, சமூகக் குறிகாட்டிகள் மீதான தெரிந்தெடுக்கப்பட்ட தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது.
-
Sri Lanka Purchasing Managers’ Index - July 2019
2019 யூலையில் தயாரிப்பு நடவடிக்கைகள் மேலும் உயர்ந்த வீதத்தில் விரிவடைந்து 55.7 கொண்ட பெறுமதிச் சுட்டெண் ஒன்றினைப் பதிவுசெய்தன. இதுஇ 2019 யூனுடன் ஒப்பிடுகையில் 1.8 சுட்டெண் புள்ளிகளைக் கொண்டதொரு அதிகரிப்பாகும். தயாரிப்புஇ கொள்வனவு முகாமைத்துவச் சுட்டெண்ணில் ஏற்பட்ட விரிவிற்கு புதிய கட்டளைகளிலும் அதனைத் தொடர்ந்து உற்பத்தியிலும்இ குறிப்பாகஇ உணவு மற்றும் குடிபானத் துறையின் தயாரிப்பில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். புதிய கட்டளைகளில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்பான இடையூறுகளிலிருந்து பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்தமையே காரணமாகும். அதேவேளைஇ யூலை மாதகாலப்பகுதியில் தொழில்நிலை மெதுவான வீதத்தில் அதிகரித்த போதும் புடவை மற்றும் ஆடை தொழில்துறையிலுள்ள பல பதிலிறுப்பாளர்கள் இம்மாத காலப்பகுதியில் தாம் உயர்ந்த வீத தொழிலாளர் புரள்வினை எதிர்நோக்கியமையினை முக்கியமாகக் குறிப்பிடுகின்றனர்.