2019 செத்தெம்பர் 27ஆம் நாளன்று மூடிஸ் இன்வெஸ்டர் சேர்விஸ் “இலங்கையின் கடன்வழங்கல் வீதக் குறைப்பானது வங்கிகளுக்கான கொடுகடன் எதிர்மறையாகும்” என்ற தலைப்பில் இலங்கையிலுள்ள வங்கிகள் மீதான துறைக் கருத்து ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பில், இலங்கை மத்திய வங்கி, மூடியின் முடிவுரையானது முழுத் தகவலையும் கருத்திற் கொண்டிருக்கவில்லை என்பதனால் எவ்வித அடிப்படையுமற்றது என்று கருதுகிறது.
-
The Central Bank’s View on the Sector Comment on Sri Lankan Banks by Moody’s Investors Service
-
External Sector Performance - July 2019
இறக்குமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சியிலும் பார்க்க கூடுதலாக ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக 2019 யூலையில் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. பல மாதங்களாகக் காணப்பட்ட உறுதியான வளர்ச்சியின் பின்னர் 2019 யூலையில் ஏற்றுமதி வருவாய்கள் 7.0 சதவீதம் கொண்ட (ஆண்டிற்கு ஆண்டு) வீழ்ச்சியைப் பதிவுசெய்ததுடன் இறக்குமதிச் செலவினம் 2.2 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) வீழ்ச்சியடைந்தது.
2019 யூலையில் ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு நீர்க்கல எரிபொருளின் குறைந்த விலைகள் காரணமாக பெற்றோலிய உற்பத்திகளிலிருந்தான வருவாய் குறைவடைந்தமையும் முன்னைய ஆண்டின் தொடர்பான மாதத்தில் உயர்ந்த ஏற்றுமதித் தளத்தினைத் தோற்றுவித்த 2018 யூலையில் இடம்பெற்ற கப்பற் கலமொன்றின் ஏற்றுமதியும் காரணங்களாக அமைந்தன.
-
Withdrawal of the Monetary Law Act Order on Maximum Interest Rates on Sri Lanka Rupee Deposits of Licensed Banks
இலங்கை ரூபாவிற்கான சந்தைக் கொடுகடன் வீதங்கள் தொடர்பான அண்மைய கொள்கைத் தீர்மானங்களை ஊடுகடத்துவதன் வினைத்திறனை மேம்படுத்தும் வகையில் உரிமம் பெற்ற வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட பணிப்புரைகளின் தொடர்ச்சியாக, இலங்கை ரூபா வைப்புக்களின் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை விதித்து 26 ஏப்பிறல் 2019இல் வெளியிடப்பட்ட 2019ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாணய விதிச் சட்டக் கட்டளை 24 செத்தெம்பர் 2019இல் அமுலுக்குவரும் வகையில் நாணயச் சபையால் மீளப்பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
Provincial Gross Domestic Product - 2018
2018ஆம் ஆண்டிற்காக இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மதிப்பிடப்பட்ட மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கமைய மேல் மாகாணம் தொடர்ந்தும் பாரிய பங்கிற்கு வகைகூறியது. முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகூடிய பங்களிப்பாளர்களாக மத்திய மற்றும் வட மேல் மாகாணங்கள் காணப்பட்டன.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் மாகாண ரீதியான மொ.உ.உற்பத்திப் பங்கில் அதிகூடிய அதிகரிப்பு மேல் மாகாணத்தில் பதிவாகியிருந்தது. அதிகரிப்பினைப் பதிவுசெய்த ஒரேயொரு வேறு மாகாணம் வட மத்திய மாகாணம் ஆகும். மத்தியஇ சப்பிரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பங்குகள் 2018இல் குறைவடைந்த அதேவேளை வடமேல்இ தென்இ கிழக்கு மற்றும் வட மாகாணங்களின் பங்குகள் மாற்றமின்றிக் காணப்பட்டன.
-
IMF Reaches Staff-Level Agreement on the Sixth Review of Sri Lanka’s Extended Fund Facility
இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இதுவரைக்கும் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில் அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிப்பதுடன் இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும்.
-
Enhancing Efficiency of the Transmission of Recent Policy Decisions to Market Lending Rates
சந்தைக் கடன்வழங்கல் வீதங்களில் குறைப்பொன்றினைத் தூண்டுவதற்கு கடந்த பதினொரு மாதங்களாக இலங்கை மத்திய வங்கி பல எண்ணிக்கையான நாணய மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கொள்கை வழிமுறைகளை எடுத்துள்ளது. மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் இரு கட்டங்களில் 100 அடிப்படைப் புள்ளிகளினால் குறைத்தல், நிதியியல் சந்தைக்கு ஏறத்தாழ ரூ.150 பில்லியன் கொண்ட மேலதிகத் திரவத்தன்மையை விடுவித்த உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் ரூபா வைப்பு பொறுப்புக்கள் மீது ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2.50 சதவீதப் புள்ளிகளினால் குறைத்தல் மற்றும் பொதுமக்களிடமிருந்து நிதியங்களைத் திரட்டும் செலவினைக் குறைப்பதற்கு உரிமம் பெற்ற நிதியியல் நிறுவனங்களை இயலச்செய்த அந்நிறுவனங்களினால் வழங்கப்படும் ரூபா வைப்பு வட்டி வீதங்கள் மீது உச்சங்களை விதித்தல் போன்றவற்றை இவ்வழிமுறைகள் உள்ளடக்குகின்றன.
-
Inflation increased in August 2019
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 யூலையில் 2.2 சதவீதத்திலிருந்து 2019 ஓகத்தில் 3.4 சதவீதமாக அதிகரித்தது. முன்னைய ஆண்டின் தொடர்புடைய மாதத்தில் நிலவிய குறைந்த தளம் மற்றும் உணவு அத்துடன் உணவல்லா வகைகள் இரண்டினதும் பொருட்களின் மாதாந்த விலைகளின் உயர்வும் இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்தது. அதேவேளை, 2019 ஒகத்தில் ஆண்டிற்கு ஆண்டு உணவு மற்றும் உணவல்லாப் பணவீக்கம் முறையே 0.6 சதவீதத்தினையும் 5.6 சதவீதத்தினையும் பதிவுசெய்தது.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது 2019 யூலையில் 1.9 சதவீதத்திலிருந்து 2019 ஓகத்தில் 2.0 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.
-
Release of “Sri Lanka Socio Economic Data – 2019” Publication
இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடான தரவு ஏடான “இலங்கை சமூக பொருளாதாரத் தரவு – 2019” பொதுமக்களின் தகவல்களுக்காக இப்போது கிடைக்கக்கூடியதாகவுள்ளது. தற்போதைய தரவு ஏடானது தொடரின் 40ஆவது வெளியீடாகும்.
எடுத்துச் செல்வதற்கு இலகுவான இத்தரவு ஏடானது நாட்டின் தோற்றப்பாடு, முதன்மைப் பொருளாதார குறிகாட்டிகள்; நாட்டின் ஒப்பீடுகள்; சமூக பொருளாதார நிலைமைகள்; மனித வளங்கள்; தேசிய கணக்குகள்; வேளாண்மை; கைத்தொழில்; பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்புக்கள்; விலைக;ம் கூலிகளும்; வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலர் வெளிநாட்டு நிதி; அரச நிதி மற்றும் பணம் வங்கித்தொழில் மற்றும் நிதி போன்ற தகவல்களை உள்ளடக்கியுள்ளது.
-
Sinhaputhra Finance PLC
சிங்கபுத்ர பினான்ஸ் பிஎல்சி மீது விதிக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக 2019.09.08 மற்றும் 2019.09.09 திகதிகளில் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிவித்தல்களுக்கு மேலதிகமாக, சிங்கபுத்ர பினான்ஸ் பிஎல்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச மூலதனத்தைப் பெருக்குகின்ற திட்டத்தினையும் வைப்பாளர்களின் நலவுரித்துக்களையும் கருத்திற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, சிங்கபுத்ர பினான்ஸ் பிஎல்சி சமர்ப்பித்த முன்மொழியப்பட்ட மூலதனத்தைப் பெருக்கும் திட்டத்தினைக் குறித்துரைக்கப்பட்ட காலவரையறைக்குள் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பினை சிங்கபுத்ர பினான்ஸ் பிஎல்சி இற்கு வழங்கியுள்ளது என்பதனை பொதுமக்களுக்கு அறியத்தருகின்றது.
-
TKS Finance Limited - Cancellation of License issued under the Finance Business Act, No. 42 of 2011
011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்ட நிதிக் கம்பனியான ரிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட் நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளையும் அதன் கீழ் விடுக்கப்பட்ட பல்வேறு பணிப்புரைகளையும் விதிகளையும் தொடர்ச்சியாக மீறிஃ மறுத்து வந்திருக்கின்றது. மேலும், ரிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட்டின் நிதியியல் நிலைமையும் போதுமானதற்ற மூலதன மட்டம், சொத்துக்களின் மோசமான தரம், தொடர்ச்சியான இழப்புக்கள் மற்றும் கோருகின்றமை அல்லது முதிர்ச்சியடைகின்றமை போன்ற சந்தர்ப்பங்களில் வைப்பாளர்களின் பணத்தினை மீளச் செலுத்தத் தவறுதல் போன்ற காரணங்களினால் திருப்திகரமானதாக காணப்படவில்லை.