தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 மாச்சின் 2.9 சதவீதத்திலிருந்து 2019 ஏப்பிறலில் 3.6 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்புக்களே காரணமாகும். இதேவேளையில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் உணவுப் பணவீக்கமானது 2019 ஏப்பிறலில் -1.2 சதவீதமாகக் காணப்பட்ட வேளையில் உணவல்லாப் பணவீக்கம் தொடர்ந்து நான்காவது மாதமாக அதிகரித்த போக்கினைக்காட்டி நடைமுறை மாதத்தில் 7.5 சதவீத அதிகரிப்பினைப் பதிவுசெய்தது.
-
Inflation Increased in April 2019
-
Sri Lanka Purchasing Managers’ Index - April 2019
2019 ஏப்பிறலில், தயாரிப்பு நடவடிக்கைகள், 2019 மாச்சிலிருந்து 25.9 சுட்டெண் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக முன்னெப்பொழுதுமில்லாத விதத்தில் தாழ்ந்த 41.0 சுட்டெண் பெறுமதியினை பதிவுசெய்தது. தயாரிப்பு கொ.மு.சுட்டெண்ணின் வீழ்ச்சிக்கு உணவு, குடிபானம் மற்றும் புகையிலைத் தயாரிப்பு மற்றும் புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் தொடர்பான நடவடிக்கைகளுக்கான உற்பத்திகள் என்பனவற்றிற்கான புதிய கட்டளைகளிலும் அவற்றின் உற்பத்தியிலும் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியே முக்கிய தூண்டுதலாக அமைந்தது. இவ்வீழ்ச்சிக்கு, ஏப்பிறலில் காணப்பட்ட புத்தாண்டு விடுமுறைகளும் மற்றும் சுமூகமான தொழிற்சாலை தொழிற்பாடுகளைப் பாதித்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதுகாப்புக் கரிசனைகளும் காரணங்களாக அமைந்தன.
-
Regulatory Actions Taken by the Central Bank of Sri Lanka on The Finance Co PLC
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, கம்பனியின் வைப்பாளர்களினதும் ஏனைய ஆர்வலர்களினதும் நலன்களைப் பாதுகாக்கும் நோக்குடன் 2019 பெப்புருவரி 15ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தற்காலிக வழிமுறைகளாக, பல எண்ணிக்கையான ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை எடுத்தது. த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கு வசதியளிப்பதற்கான ஒழுங்குமுறைப்படுத்தும் வழிமுறைகள் புதிய வைப்புக்களை ஏற்றுக்கொள்தல், வைப்புக்களின் மீளப்பெறுகைகள், கடன்கள் மற்றும் முற்பணங்களின் பகிர்ந்தளிப்பு என்பனவற்றை இடைநிறுத்துவது உள்ளிட்ட வழிமுறைகளை உள்ளடக்கியிருக்கின்றன.
-
The International Monetary Fund Releases the Sixth Tranche of US Dollars 164.1 Million Under the Extended Fund Facility
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ், பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை ஐந்தாவது மீளாய்வினை நிறைவுசெய்ததுடன் சிஎஉ 118.5 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 164.1 மில்லியன்) கொண்ட ஆறாவது தொகுதியை பகிர்ந்தளிப்பதற்கு ஒப்புதலளித்திருக்கிறது. நிறைவேற்றுச் சபை ஒழுங்கினை ஓராண்டினால் 2020 யூன் வரை நீடிப்பதற்கும் எஞ்சிய பகிர்ந்தளிப்புக்களை மீள்கட்டப்படுத்துவதற்கும் ஒப்புதல் அளித்திருக்கிறது.
-
Sale of Subsidiaries Sub-subsidiaries and Investment Properties of ETI Finance Ltd
இலங்கை மத்திய வங்கி, 2017இன் பிற்பகுதியில் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டினால் எதிர்நோக்கப்பட்ட கடுமையான திரவத்தன்மைத் தடைகள் உட்பட, 2011 இலிருந்து கம்பனியில் இடம்பெற்ற பல்வேறுபட்ட ஒழுங்கீனங்களையும் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளையும் மேற்கொண்டது.
-
Measures to Reduce Lending Rates and Drive Credit Flows to Small and Medium Enterprises (SMEs) Sector
இலங்கை மத்திய வங்கி நியதி ஒதுக்கு வீதத்தைக் குறைப்பதன் மூலம் வட்டி வீதங்களை குறைப்பதற்கும் சந்தைத் திரவத்தன்மையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் (உரிமம் பெற்ற வங்கிகள்) மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் என்பன அதிக வட்டி வீதங்களைக் கடன்களுக்கு அறவிடுவதையும் அதிகப்படியான வட்டி வீதங்களை வைப்புகளுக்கு வழங்குவதையும் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக பணவீக்கம் மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புக்கள் நன்றாக கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இலங்கையின் உண்மை வட்டி விகிதங்களைப் பிராந்தியப் பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் அதிகப்படியானதாகக் காணப்படுகின்றன.
-
The Annual Report of the Central Bank of Sri Lanka for the Year 2018
இவ்வாண்டுப்பகுதியில் காணப்பட்ட தாழ்ந்த பணவீக்க சூழலுக்கிடையிலும் உண்மை பொருளாதார நடவடிக்கைகளில் காணப்பட்ட மிதமான விரிவாக்கத்துடன் உலகளாவிய மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களினால் இலங்கைப் பொருளாதாரத்தின் பாதிக்கப்படக்கூடியதன்மை 2018இல் அதிகளவிற்குப் புலனாகக் கூடியதொன்றாகவிருந்தது. 2018இல் உண்மை மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சி முன்னைய ஆண்டின் 3.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 3.2 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. இவ்வளர்ச்சிக்கு 4.7 சதவீதத்தினால் விரிவடைந்த பணிகள் நடவடிக்கைகளும் 4.8 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்த வேளாண்மை நடவடிக்கைகளில் ஏற்பட்ட மீட்சியும் பெருமளவிற்கு ஆதரவாக அமைந்தன. கட்டடவாக்கம் சுருக்கமடைந்தமையின் முக்கிய விளைவாக இவ்வாண்டுப்பகுதியில் கைத்தொழில் நடவடிக்கைகள் 0.9 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவிற்கு மெதுவடைந்தன. செலவின அணுகுமுறையின்படி, நுகர்வு மற்றும் முதலீட்டுச் செலவினம் இரண்டும் வளர்ச்சிக்கு ஆதரவளித்தன.
-
Inflation in March 2019
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் முன்னைய ஆண்டின் தொடர்பான மாதத்தில் நிலவிய தாழ்ந்த தளத்தின் காரணமாக 2019 பெப்புருவரியின் 2.4 சதவீதத்திலிருந்து 2019 மாச்சில் 2.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதேவேளையில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், உணவு மற்றும் உணவல்லாப் பணவீக்கமானது 2019 மாச்சில் -2.3 சதவீதம் மற்றும் 7.1 சதவீதங்களைப் பதிவுசெய்தது.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 மாச்சில் 1.7 சதவீதத்தில் மாற்றமின்றியிருந்தது.
-
External Sector Performance - February 2019
2019 பெப்புருவரியில் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஐ.அ.டொலர் 451 மில்லியனுக்கு மேலும் குறுக்கமடைந்து ஐந்து ஆண்டுகளுக்கும் கூடுதலான காலப்பகுதியில் மிகக்குறைந்த மாதாந்த பற்றாக்குறையினைப் பதிவுசெய்தது.
வர்த்தகப் பற்றாக்குறையில் காணப்பட்ட கணிசமான குறைப்பிற்கு இறக்குமதிச் செலவினம் 27.6 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில்) குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தமையும் 2019 பெப்புருவரியில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 7.2 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில்) அதிகரித்தமையும் காரணங்களாக அமைந்தன.
சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் தொடர்ந்தும் அதன் உத்வேகம் மிக்கச் செயலாற்றத்தினைக் காட்டி, 2018 திசெம்பருக்குப் பின்னர் மாதமொன்றிற்கு 240,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலா வருகைகளைப் பதிவுசெய்து, 2019 பெப்புருவரியில் 7.0 சதவீதம் கொண்ட வளர்ச்சியை (ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில்) பதிவுசெய்தது.
-
External Sector Performance - January 2019
கடந்த சில மாதங்களில் அவதானிக்கப்பட்டவாறு, வர்த்தகப் பற்றாக்குறை 2019 சனவரியில் தொடர்ந்தும் அதன் மேம்பட்ட போக்கினைக் கொண்டிருந்தது. 2018 திசெம்பரின் ஐ.அ.டொலர் 701 மில்லியன் கொண்ட பற்றாக்குறையுடனும் 2018 சனவரியின் ஐ.அ.டொலர் 1,049 மில்லியன் கொண்ட பற்றாக்குறையுடனும் ஒப்பிடுகையில், இம்மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 617 மில்லியன் கொண்ட வர்த்தகப் பற்றாக்குறையொன்று பதிவுசெய்யப்பட்டது.
வர்த்தகப் பற்றாக்குறையில் காணப்பட்ட இக்குறிப்பிடத்தக்க குறைப்பிற்கு ஏற்றுமதிகளிலிருந்தான உயர்ந்த வருவாய்களினதும் இறக்குமதிச் செலவினத்தில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினதும் இணைந்த தாக்கமே காரணமாகும். 2019 சனவரியில் ஏற்றுமதிகள் 7.5 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) அதிகரித்தவேளையில் இறக்குமதிகள் 17.8 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தன.
2019 சனவரியில் சுற்றுலாவருகைகள் 2.2 சதவீதத்தினால் (ஆண்டிற்குஆண்டு) அதிகரித்தமையின் மூலம் இம்மாதகாலப்பகுதியில் ஐ.அ.டொலர் 458 மில்லியன் கொண்ட வருவாய்களைத் தோற்றுவித்தது.