2011 இன் 42 ம் இலக்க நிதித் தொழிற்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நிதி தொழிலை மேற்கொள்வதற்கு த பினான்ஸ் கம்பனி பிஎல்சிக்கு வழங்கப்பட்ட உரிமம் 22.05.2020 இல் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இரத்துசெய்யப்பட்டுள்ளது.
-
Compensation Payments to the Depositors of The Finance Company PLC under Sri Lanka Deposit Insurance and Liquidity Support Scheme
-
External Sector Performance - March 2020
கொவிட்-19 தொற்று மற்றும் 2020 மாச்சு பின்னரைப்பகுதியில் இலங்கை பகுதியளவில் முடக்கப்பட்டிருந்தமை என்பன 2020 மாச்சில் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றத்தினைப் பாதித்தன. உள்நாட்டு உற்பத்திச் செய்முறைகளின் இடையூறுகளுடன் சேர்ந்து நிரம்பல் மற்றும் கேள்விச் சங்கிலிகளில் காணப்பட்ட தடங்கல்கள் வணிகப்பொருட்களின் ஏற்றுமதிகளிலும் அதேபோன்று வணிகப்பொருட்களின் இறக்குமதிகளிலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைத் தோற்றுவித்தன. எனினும், ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் இறக்குமதிகள் மீதான செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி பெரிதாக இருந்தமையின் காரணமாக, 2019இன் இதே காலப்பகுதியினை விட வர்த்தகப் பற்றாக்குறை குறுக்கமடைந்தது. உலகளாவிய ரீதியில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள், பண்டாரநாயக்கா பன்னாட்டு வானூர்திநிலையம் மூடப்பட்டமை என்பனவற்றின் காரணமாக சுற்றுலாத் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
-
Suspension of Business of NatWealth Securities Limited
நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட் முதனிலை வணிகர்களுக்கு ஏற்புடைத்தான பணிப்புரைகளுக்கு இணங்கியொழுகுவதற்கு தொடர்ச்சியாக தவறியமையினை பரிசீலனையில் கொண்டு, மத்திய வங்கியின் நாணயச் சபை 2020.05.28 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளுக்கமைவாக செயற்பட்டு 2020.06.01ஆம் திகதி நடைமுறைக்குவரும் விதத்தில் நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட் அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் ஆறு மாத காலப்பகுதிக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானித்திருக்கிறது.
-
CCPI based Inflation declined further in May 2020
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 ஏப்பிறலின் 5.2 சதவீதத்திலிருந்து 2020 மேயில் 4.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இது 2019 மேயில் காணப்பட்ட உயர்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கத்தினால் மாத்திரமே உந்தப்பட்டது. ஆண்டிற்கு ஆண்டு உணவுப்பணவீக்கமானது 2020 ஏப்பிறலின் 13.2 சதவீதத்திலிருந்து 2020 மேயில் 9.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மேலும், ஆண்டிற்கு ஆண்டு உணவல்லா பணவீக்கமும் 2020 ஏப்பிறலின் 2.1 சதவீதத்திலிருந்து 2020 மேயில் 1.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
-
Cancellation of the licence of 'The Finance Company PLC'
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்ட நிதிக்கம்பனியொன்றான த பினான்ஸ் கம்பனி பிஎல்சியானது 2008இல் செலிங்கோ குழுமத்தினுள் காணப்பட்ட பல எண்ணிக்கையான நிதியியல் நிறுவனங்களின் தோல்வியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போதிலிருந்து கம்பெனியின் நிதியியல் நிலைமை படிப்படியாக சீர்குலைந்து கடுமையான திரவத்தன்மை நெருக்கடிகளுக்கு வழிவகுத்தது.
-
NCPI based Inflation decreased further in April 2020
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 மாச்சின் 7.0 சதவீதத்திலிருந்து 2020 ஏப்பிறலில் 5.9 சதவீதத்திற்கு குறைவடைந்தது. இது, உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த வீழ்ச்சியினாலும் 2019 ஏப்பிறலில் காணப்பட்ட உயர்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கத்தினாலும் உந்தப்பட்டது. அதன்படி, ஆண்டிற்கு ஆண்டு உணவுப்பணவீக்கமானது 2020 மாச்சின் 14.1 சதவீதத்திலிருந்து 2020 ஏப்பிறலில் 12.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதேவேளையில், ஆண்டிற்கு ஆண்டு உணவல்லா பணவீக்கமும் 2020 மாச்சின் 1.8 சதவீதத்திலிருந்து 2020 ஏப்பிறலில் 1.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
-
Sri Lanka Reiterates its Commitment to Meeting all its Financial Obligations
இலங்கை அரசாங்கமானது அதன் படுகடன் தீர்ப்பனவுக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான அதன் இயலுமைபற்றி கேள்வியெழுப்புகின்ற அண்மைய ஊடக அறிக்கைகளில் காணப்படும் அனுமானங்கள் பற்றி அவதானம் செலுத்துகின்றது. நாட்டிற்கான படுகடன் நெருக்கடி இடர்நேர்வுக்குள் தள்ளப்பட்டுள்ள நிலைமையில் உள்ள நாடுகளாகக் கூறப்படுகின்ற பிற நாடுகளுடன் இலங்கையினை ஒப்பிடுவதன் மூலம் அதனையொத்த நிலைமைக்கு இலங்கையும் உள்ளாகின்றது என்பதனை எடுத்துக்காட்டுவதற்கு சில ஊடகங்களினால் மேற்கொள்ளப்பட்ட அத்தகைய அனுமானங்களை அரசாங்கம் புறந்தள்ளுகின்றது.
-
Sri Lanka Purchasing Managers’ Index - April 2020
இலங்கையின் தயாரிப்புத் துறையில் கொவிட் - 19 இனால் தூண்டப்பட்ட வீழ்ச்சியானது தயாரித்தல் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் அளவீட்டின் தொடக்க காலத்திலிருந்து நோக்குகையில் மிகக் குறைந்த மட்டத்தினை அடைந்து, முன்னைய மாதத்திலிருந்து 5.8 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட வீழ்ச்சியொன்றுடன் 24.2 சுட்டெண் பெறுமதியில் பதிவாகிய மேலும் சுருக்கத்தினால் பிரதிபலிக்கப்பட்டவாறு ஏப்பிறல் காலப்பகுதியில் தீவிரமடைந்தது. சுட்டெண்ணின் இவ்வீழ்ச்சியானது ஒருபோதும் இல்லாத வீதங்களில் வீழ்ச்சியடைந்த புதிய கட்டளைகள், உற்பத்தி மற்றும் தொழில்நிலை மூலம் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது.
-
External Sector Performance - February 2020
ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் வீழ்ச்சியடைந்த வேளையில் இறக்குமதிகள் மீதான செலவினம் அதிகரித்தமையின் காரணமாக 2019 பெப்புருவரியுடன் ஒப்பிடுகையில் 2020 பெப்புருவரியில் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க விரைவாக மீட்சியடைந்த சுற்றுலாக் கைத்தொழில் 2020 பெப்புருவரி இறுதிப்பகுதியிலிருந்து படிப்படியாக பரவத் தொடங்கிய கொவிட்-19இன் தொற்றின் காரணமாக மீண்டும் பாதிக்கப்பட்டது. தொழிலாளர் பணவனுப்பல்கள் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியைப் பதிவுசெய்த வேளையில் அரச பிணையங்கள் சந்தையிலும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையிலும் காணப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2020 பெப்புருவரியில் தேறிய வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. இவ்வபிவிருத்திகளின் காரணமாக 2020 மாச்சின் இரண்டாவது வாரம் வரையில் ஒப்பீட்டு ரீதியில் உறுதியாகக் காணப்பட்ட இலங்கை ரூபா 2020 மாச்சு இறுதிப்பகுதியிலிருந்து ஏப்பிறல் நடுப்பகுதி வரை குறிப்பிடத்தக்களவிற்கு தேய்வடைந்ததெனினும், அதன் பின்னர் உறுதியடையத் தொடங்கி 2020 மே முதல் வாரத்தில் கணிசமான உயர்வினை பதிவுசெய்தது. வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் கொவிட்-19இன் தொற்றின் காரணமாக 2020 மாச்சு மாதத்திலிருந்து குறிப்பிடத்தக்களவிற்கு பாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இப்பாதிப்பு குறிப்பாக வணிகப்பொருள் ஏற்றுமதிகள், சுற்றுலா, தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் ஆகிய துறைகளில் எதிர்பார்க்கப்படுகிறது.
-
Central Bank of Sri Lanka Implements Extraordinary Regulatory Measures to Provide Liquidity to Banks amidst COVID-19 Outbreak
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களிற்கு உதவுவதற்காக கடன் உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக உரிமம்பெற்ற வணிக வங்கிகளின் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளின் (உரிமம்பெற்ற வங்கிகள்) திரவத்தன்மை மற்றும் ஏனைய முதன்மை செயற்றிறன் குறிகாட்டிகளில் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கத்தின் சாத்தியப்பாடு குறித்தும் உடனடித் திரவத்தன்மை தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய அவசியத்திற்காகவும் வங்கிகளின் திரவத்தன்மை நிலையை வலுப்படுத்துவது இன்றியமையாததெனக் கருதுகின்றது.