2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2) பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்காமைக்காக நிறுவனங்கள் மீது நிதியியல் ரீதியான தண்டங்கள் விதிக்கப்படலாம். நிதியியல் நிறுவனத்தின் அல்லது பெயர் குறிக்கப்பட்ட நிதிசாரா தொழிலின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரமான தன்மை என்பவற்றை பரிசீலனையில் கொண்டு தண்டங்கள் குறித்துரைக்கப்படலாம்.
-
Imposition of penalties to enforce compliance on Financial Institutions during 2019 and 2020 by the Financial Intelligence Unit (FIU)
-
The Central Bank approved 3,985 new loans amounting to Rs.11,829 million under the Saubagya COVID-19 renaissance facility during the period 13-23 July 2020
2020 யூலை 13-23 காலப்பகுதியின் போது சௌபாக்யா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதி கட்டம் ஐஐ மற்றும் ஐஐஐஇன் கீழ் உரிமம்பெற்ற வங்கிகள் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட ரூ.11,829 மில்லியன் தொகையுடைய 3,985 புதிய கடன் விண்ணப்பங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
-
Compensation Payments to the depositors of ETI Finance Limited (ETIFL) and Swarnamahal Financial Services PLC (SFSP)
இலங்கை மத்திய வங்கியானது ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி என்பனவற்றின் நிதி வியாபாரங்கள் 2020.07.13ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இடைநிறுத்தப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்திலிருந்து ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி வைப்பாளர்களுக்கு நட்டஈட்டுக் கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான வழிமுறைகளை எடுத்துள்ளது. அதற்கமைய தீவு முழுவதிலுமுள்ள தெரிவுசெய்யப்பட்ட மக்கள் வங்கிக் கிளைகளினூடாக 2020.07.25ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் நட்டஈட்டுக் கொடுப்பனவு ஆரம்பிக்கப்படும்.
-
NCPI based Inflation increased in June 2020
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 மேயின் 5.2 சதவீதத்திலிருந்து யூனில் 6.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பின் மூலம் பிரதானமாக தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 மேயின் 11.1 சதவீதத்திலிருந்து 2020 யூனில் 13.6 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 யூனில் 0.8 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது.
ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 மேயின் 5.2 சதவீதத்திலிருந்து 2020 யூனில் 5.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.
-
Continuation of Measures Taken to Preserve the Foreign Currency Reserve Position of Sri Lanka
நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலைமையினைப் பேணும் நோக்குடனும் கொவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய சாத்தியமான எதிர்க்கணியத் தாக்கங்களைப் பரிசீலனையில் கொண்டும் இலங்கை மத்திய வங்கியினது நாணயச் சபையின் விதந்துரைப்புடனும் அமைச்சரவையின் ஒப்புதலுடனும் மாண்புமிகு நிதிஇ பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர்இ மூலதனக் கொடுக்கல்வாங்கல்கள் மீதான வெளிமுகப் பணவனுப்பல்கள் மீது 2020 யூலை 02ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் ஆறு (6) மாத காலப்பகுதிக்குப் பின்வரும் வழிமுறைகளை அறிமுகப்படுத்துகின்ற கட்டளையொன்றினை விடுத்திருக்கின்றார்.
-
Sri Lanka Purchasing Managers’ Index - June 2020
நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகளை முழுமையாகத் தளர்த்தியதனைத் தொடர்ந்து நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளின் இயல்புநிலையிலிருந்து நன்மையடைந்து தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது 2020 மேயுடன் ஒப்பிடுகையில் 18.0 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட மாதத்திற்கு மாத அதிகரிப்புடன் 67.3 இனைப் பதிவுசெய்து 2020 யூனில் கணிசமாக அதிகரித்தது.
-
Appointments to the Monetary Board - Mr Sanjeeva Jayawardena PC, Dr (Mrs) Ranee Jayamaha and Mr Samantha Kumarasinghe
அரசியல் யாப்பு ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் நாணயவிதிச் சட்டத்தின் பிரிவு 8(2) (இ) இன்கீழ் மேதகு சனாதிபதியினால் சபைக்கு நியமிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மூன்று புதிய உறுப்பினர்களும் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராகப் பணியாற்றும் பொருட்டு கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டனர்.
திரு. சஞ்சீவ ஜயவர்த்தன, சனாதிபதி சட்டத்தரணி 2020.02.26ஆம் நாளிலிருந்து இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கான உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதுடன் முனைவர். ராணி ஜயமகா மற்றும் திரு. சமந்த குமாரசிங்க ஆகிய இருவரும் 2020.06.29ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நாணயச் சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:
-
External Sector Performance – May 2020
2020 மேயின் இரண்டாம் வாரத்தில் பெரும்பாலான முடக்க வழிமுறைகள் நீக்கப்பட்டதன் காரணமாக வெளிநாட்டுத் துறை உறுதியடைந்தமைக்கான அறிகுறிகளைக் காட்டியது. அத்தியாவசியமல்லா இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் வணிகப்பொருள் இறக்குமதிகளில் குறிப்பிடத்தக்க குறைப்பினை ஏற்படுத்தியதன் காரணமாக மேயில் அதன் தாக்கம் அவதானிக்கப்பட்டது. அதேவேளை, ஏப்பிறலில் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்திருந்த வணிகப்பொருள் ஏற்றுமதிகள் இம்மாத காலப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்கக் கூடுதலாக எழுச்சியுற்றது. 2019இன் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2020 மேயில் தொழிலாளர் பணவனுப்பல்கள் குறிப்பிடத்தக்களவிற்குக் குறைவாக இருந்த போதும் 2020 ஏப்பிறலில் பதிவுசெய்யப்பட்ட கடுமையான குறைந்த மட்டத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பினைப் பதிவுசெய்தது.
-
Compensation Payments to the depositors of The Finance Company PLC under the Sri Lanka Deposit Insurance and Liquidity Support Scheme (SLDILSS)
த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் வைப்பாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகள், இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழ் வைப்பாளரொருவருக்கு உயர்ந்தபட்சம் ரூ.600,000 தொகைக்குட்பட்டு தீவுமுழுவதுமுள்ள 63 மக்கள் வங்கிக் கிளைகள் ஊடாக 2020.06.07 அன்று ஆரம்பிக்கப்பட்டன.
த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மூலம் தகைமை உறுதிப்படுத்தப்பட்ட ஏறத்தாள 147,000 வைப்பாளர்களுக்கு நட்டஈடு வழங்கத் தேவையான நிதியங்கள், இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்திலிருந்து ஏற்கனவே ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன.
-
Suspension of Business of “ETI Finance Ltd and Swarnamahal Financial Services PLC”
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2020 யூலை 10ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 31ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் 2020 யூலை 13ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி நிறுவனங்களின் வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.