• Central Bank Extends the Deadline of Application for 4% Working Capital Loan Scheme until 30th September 2020

    நாணயச் சபை 2020 ஓகத்து 19ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் 4 சதவீதம் கொண்ட தொழிற்படு மூலதனக் கடன் திட்டத்தின் இறுதித் திகதியினை நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. இதற்கமைய, கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களும் தனிப்பட்டவர்களும் சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் வசதியின் கீழான தமது கடன் விண்ணப்பங்களை தொடர்பான உரிமம்பெற்ற வங்கிகளுக்கு 2020 செத்தெம்பர் 30ஆம் நாள்வரை சமர்ப்பிக்கமுடியும். 

    அதேவேளை, மேற்குறிப்பிட்ட வசதியின் கீழ் 36,489 விண்ணப்பதாரிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட கடன்களுக்கு ரூ.100,017 மில்லியன் பெறுமதியான தொகைக்கு ஒப்புதலளித்ததன் மூலம் 2020 ஓகத்து 18ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் கடன் தொகை ரூ.100 பில்லியன் கடன் தொகைகள் மைல்கல்லினைக் கடந்தது. ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களில் 2020 ஓகத்து 18ஆம் நாள் உள்ளவாறு, நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட 25,365 வியாபாரங்கள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கிடையே ரூ.68.5 பில்லியனுக்கும் கூடுதலான தொகையினை உரிமம்பெற்ற வங்கிகள் ஏற்கனவே பகிர்ந்தளித்திருக்கின்றன. (விபரங்களுக்கு அட்டவணை 1இனைப் பார்க்கவும்).

  • NCPI based Inflation decreased in July 2020

    தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 யூனின் 6.3 சதவீதத்திலிருந்து யூலையில் 6.1 சதவீதத்திற்கு குறைவடைந்தது. இதற்கு 2019 யூலையில் நிலவிய உயர்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கமே முக்கிய தூண்டுதலாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 யூனின் 13.6 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 12.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த வேளையில், உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 யூனின் 0.8 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 1.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.

    ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 யூனின் 5.6 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 5.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

  • Establishment of Financial Consumer Relations Department of the Central Bank of Sri Lanka

    திருத்தப்பட்டவாறான, 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் 33ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிறுவனங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பப்படும் அனைத்து வெளிவாரி முறைப்பாடுகளையும் குறைகளையும் கையாளும் பொருட்டு ஒரே கூரையின் கீழ் பணியாற்றும் விதத்தில் 2020.08.10ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கி “நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம்” என்ற பெயரில் புதிய திணைக்களமொன்றினை நிறுவியுள்ளது.

  • The Central Bank of Sri Lanka continues its Accommodative Monetary Policy Stance

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 ஓகத்து 19ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அதன் தற்போதைய மட்டங்களான முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதங்களில் பேணுவதென தீர்மானித்தது. இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைத் தளர்த்தல் வழிமுறைகளினை சந்தைக் கடன் வழங்கல் வீதங்கள் இன்னமும் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லையாகையால் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினை தொடரவேண்டிய அவசியத்தினை சபை அங்கீகரித்திருக்கிறது. மிக அதிகமாகவிருப்பதாகக் கருதப்படுகின்ற குறிப்பிட்ட சில வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு இலக்கிடப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு சபை தீர்மானித்திருக்கிறது. இது, சிறியளவிலான கடன்பாட்டாளர்களுக்கு உதவும்.

  • Sri Lanka Purchasing Managers’ Index - July 2020

    தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2020 யூனுடன் ஒப்பிடுகையில் பொருளாதார நடவடிக்கை இயல்புநிலையடைவதிலிருந்து நன்மையடைந்து 2020 யூலையில் தொடர்ந்தும் விரிவடைந்தன. 

    வியாபார நடவடிக்கைகளின் இயல்புநிலை மூலம் தயாரிப்பு நடவடிக்கைகள் படிப்படியாக கொவிட் நோய்த்தொற்றிற்கு முந்திய மட்டங்களை நோக்கிச் செல்வதனைப் பிரதிபலித்து, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது 2020 யூலையில் 64.6இனைப் பதிவுசெய்து தொடர்ந்தும் விரிவடைந்தது. இதற்கு புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி துணைச் சுட்டெண்களின் விரிவடைதலே முக்கிய காரணங்களாக அமைந்தன.

    2020 யூலையில் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்; 51.4 இனை அடைந்ததன் மூலம் பணிகள் துறை தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக தொடர்ந்தும் விரிவடைந்தது. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த பணிகள் துறையில் மேலதிக மீட்சியினை எடுத்துக்காட்டி 2020 யூனுடன் ஒப்பிடுகையில் புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட விரிவடைதல்கள் மூலம் இது துணையளிக்கப்பட்டிருந்தது.

  • External Sector Performance - June 2020

    உள்நாட்டு பொருளாதார நடவடிக்கை படிப்படியாக வழமைக்குத் திரும்பியமையின் காரணமாக 2020 யூனில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை மேலும் உறுதியடைந்தது. வணிக ஏற்றுமதிகள் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க கூடுதலானளவிற்கு மீண்டும் உத்வேகமடைந்தமை அத்தியாவசியமல்லா இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகளின் காரணமாக வணிகப்பொருள் இறக்குமதிகள் குறிப்பிடத்தக்களவிற்குக் குறைவடைந்தமை என்பனவற்றின் காரணமாக 2020 யூனில் வர்த்தகப் பற்றாக்குறை (ஆண்டிற்கு ஆண்டு) வீழ்ச்சியடைந்தது. கொவிட்-19 தொற்று பரவியமைக்குப் பின்னர் முதற்றடவையாக யூனில் தொழிலாளர் பணவனுப்பல்கள் வளர்ச்சியைப் பதிவுசெய்தன. இம்மாத காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை ஆகிய இரண்டும் சில வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட குறைப்பின் உதவியுடன் 2020 யூன் மாத காலப்பகுதியில் இலங்கை ரூபா சிறிதளவு அதிகரிப்பினை பதிவுசெய்தது.

  • CCPI based Inflation increased in July 2020

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)   ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 யூனின் 3.9 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 4.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு, 2019 யூலையில் நிலவிய தாழ்ந்த தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கங்களுடன் சேர்ந்து உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பே முக்கிய தூண்டுதலாக அமைந்தது. உணவுப் பணவீக்கம்  (ஆண்டுக்கு ஆண்டு) 2020 யூனின் 10.0 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 10.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. மேலும், உணவல்லாப் பணவீக்கமும் (ஆண்டுக்கு ஆண்டு) 2020 யூனின் 1.4 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 1.5 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.

  • The Central Bank of Sri Lanka Denies Media Reports on Macroeconomic Projection Updates

    பல ஊடக அறிக்கைகள் பற்றி மத்திய வங்கியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் இதில் குறிப்பிட்ட சில பேரண்டப் பொருளாதார எறிவுகள் இலங்கை மத்திய வங்கியுடன் தொடர்பானவை எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

    இலங்கை மத்திய வங்கி, 2020 ஏப்பிறலில், இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையினை வெளியிட்டதன் பின்னர் அதன் பேரண்டப் பொருளாதார எறிவுகளுக்கு எந்தவித இற்றைப்படுத்தல்களையும் பொதுமக்களுக்கு வெளியிடவில்லை. கொவிட்-19 தொற்றினால் உருவான நிச்சயமற்ற நிலைமைகளைக் கவனத்தில் கொள்கையில் பேரண்டப் பொருளாதார எறிவுகளுக்கான இற்றைப்படுத்தல்கள் அடிக்கடி தேவைப்படுகின்றதுடன் இலங்கை மத்திய வங்கி, பொருளாதார நடவடிக்கைகளின் நியமக் குறிகாட்டிகள் கிடைக்கப்பெற்றதும் அவற்றைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறது. இது அதன் பகுப்பாய்வுகளிலும் கொள்கை வழிகாட்டல்களிலும் மரபுவழியற்ற குறிகாட்டிகளையும் அதேநேர அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றது. 

  • The Central Bank enters into a Bilateral Currency Swap Agreement with the Reserve Bank of India

    இலங்கை மத்திய வங்கியும் இந்திய ரிசேர்வ் வங்கியும் 2019-2020 காலப்பகுதிக்கான தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் (சார்க்) நாணயப் பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கைக் கட்டமைப்பின் கீழ் 2020 யூலை 24ஆம் திகதியன்று நாணயப் பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கையொன்றினைக் கைச்சாத்திட்டுள்ளன. இது, நாட்டின் சென்மதி நிலுவைத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு இலங்கை மத்திய வங்கிக்கு குறுகிய கால நிதியிடலை வழங்கும்.

  • The Central Bank clarifies its Repurchase Agreement with the Federal Reserve Bank, New York

    இலங்கை மத்திய வங்கி தேவையானபொழுது பயன்படுத்திக்கொள்வதற்காக தற்காலிக மூலமொன்றாக ஐ.அ.டொலர் திரவத்தன்மையினைப் பெற்றுக்கொள்வதற்காக பெடரல் ரிசேர்வ் வங்கி நியூயோர்க்குடன் அண்மையில் உடன்படிக்கையொன்றினைச் செய்திருக்கிறது. இவ்வசதியானது தொழில்நுட்ப சொற்பதத்தில் 'வெளிநாட்டு மற்றும் பன்னாட்டு நாணய அதிகார சபைகளுக்கு" கிடைக்கத்தக்கதாக இருக்கும் ஓரிரவு மீள்கொள்வனவு வசதியாகும். உலகில் உள்ள அநேக மத்திய வங்கிகள் அவற்றின் குறுங்கால ஐ.அ.டொலர் திரவத்தன்மைத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்காக இவ்வசதியினை நாடியிருக்கின்றன. இவ்வசதியானது, மத்திய வங்கியை வெளிநாட்டுச் செலாவணியிலமைந்த அதன் நீண்டகால முதலீட்டு சொத்துப்பட்டியலில் சடுதியான எந்தவொரு அமைப்பியல் சீராக்கத்தினையும் செய்யாமல் தேவையானபொழுது குறுங்கால நிதியிடல்களைப் பெற்றுக்கொள்வதனை இயலுமைப்படுத்துகின்றது.

Pages