• NCPI based Inflation decreased in November 2020

    தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 ஒத்தோபரின் 5.5 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 5.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, 2019 நவெம்பரில் நிலவிய உயர்வான தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கம் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 ஒத்தோபரின் 10.6 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 9.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஒத்தோபரின் 1.5 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 1.7 சதவீதத்திற்கு அதிகரித்தது.

    ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 ஒத்தோபரில் 6.2 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 6.3 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.

  • Provincial Gross Domestic Product - 2019

    நாட்டின் வர்த்தக மற்றும் நிர்வாக தலைநகரத்தை தன்னகத்தே கொண்ட மேல் மாகாணம், பொருளாதாரத்தின் முன்னோடியாக தொடர்ந்தும் விளங்கியது. எனினும் பிராந்திய ஏற்றத்தாழ்வு சுருக்கமடைவதற்கு பங்களித்து அதன் பங்கு வீழ்ச்சியடைந்தது

    நாட்டின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பாரிய பங்கினை (39.1 சதவீதம்) மேல் மாகாணம் தனதாக்கிக் கொண்டது. எனினும், ஏனைய மாகாணங்களில் கிடைத்த அதிகரித்த பங்களிப்பின் காரணமாக அதன் பங்கு 2018 இலிருந்து 0.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. மத்திய (11.5 சதவீதம்) மற்றும் வடமேல் (10.7 சதவீதம்) மாகாணங்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளுக்கு தரப்படுத்தப்பட்டன.

  • Appoinment of New Deputy Governors

    நாணயச் சபையானது கௌரவ நிதி அமைச்சரின் ஒப்புதலுடன் திருமதி. ரி. எம். ஜே. வை. பி. பர்னாந்து மற்றும் திரு. என். டபிள்யு. ஜி. ஆர். டி. நாணயக்கார ஆகிய உதவி ஆளுநர்களை 2020 திசெம்பர் 14ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு பதவி உயர்த்தியுள்ளது.

  • Sri Lanka Purchasing Managers’ Index - November 2020

    தயாரிப்புத் துறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2020 நவெம்பரில் விரிவடைந்த வேளையில், பணிகள் துறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மேல்நோக்கி திருப்பமடைந்த போதிலும் இன்னும் குறிப்பிடத்தக்களவு மட்டத்திற்கு கீழாகவே காணப்படுகிறது.

  • External Sector Performance - October 2020

    2020 ஒத்தோபரில் இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது ஐ.அ.டொலர் 1.0 பில்லியன் கொண்ட முதிர்வடைந்த நாட்டிற்கான பன்னாட்டு முறியினை வெற்றிகரமாக மீளச்செலுத்தியதன் மூலம் அதன் தாக்குப்பிடிக்கும் தன்மையினை எடுத்துக்காட்டியது. வர்த்தகப் பற்றாக்குறையில் தொடர்ச்சியான மேம்படுத்தல், தொழிலாளர் பணவனுப்பல்களில் அதிகரிப்பு, உள்நாட்டு  வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் ஏற்பட்ட உறுதிப்பாடு என்பன மாத காலப்பகுதியில் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றத்திற்கு துணையளித்தன. குறைவான உலகளாவிய எரிபொருள் விலைகள் மற்றும் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் கீழ் இறக்குமதிகள் தொடர்ந்தும் கட்டுப்பட்டிருந்த அதேவேளை, ஒத்தோபரின் ஆரம்பம் தொடக்கம் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தி மற்றும் துணைப் பணிகளுக்கான இடையூறுகளின் காரணமாகவும் வெளிநாட்டுக் கொள்வனவாளர்களிடமிருந்து கேள்வி குறைவடைந்தமை மூலமும் 2020 ஒத்தோபரில் ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்தன.

  • Response to the Downgrade of Sri Lanka's Rating by S&P Global Ratings

    இலங்கையின் நாட்டிற்கான தரப்படுத்தலினை தரங்குறைத்து எஸ் அன்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் (S&P Global Ratings) மூலம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிதியமைச்சு பதிலிறுத்தலொன்றினை வெளியிட்டுள்ளது. இதனை கீழேயுள்ள இணைய இணைப்பில் காணலாம்.

  • Extension of the validity period to open Special Deposit Accounts and permission to retain funds held in such accounts in Sri Lanka

    நாட்டில் கொவிட்-19 நோய்த்தொற்றின் தாக்கங்களை வெற்றிகொள்வதற்கான தேசிய முயற்சிக்கு ஆதரவினை நாடும் பொருட்டு இலங்கை அரசாங்கமானது 2020 ஏப்பிறல் 08ஆம் திகதியன்று சிறப்பு வைப்புக் கணக்கினை அறிமுகப்படுத்தியது. அதற்கமைய, 2020 ஒத்தோபர் 07 அன்றுள்ளவாறு சிறப்பு வைப்புக் கணக்குகளிலுள்ள மொத்த வைப்புகள் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 272 மில்லியன் தொகையாகவிருந்தது.

    நாட்டினுள் கணிசமான வெளிநாட்டுச் செலாவணித் தொகையினை ஈர்ப்பதற்கு சிறப்பு வைப்புக் கணக்குகளின் சாத்தியத்தன்மையினையும் அதன் பயனாக நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலைமை மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் மீதான சாதகமான தாக்கத்தினையும் கருத்திற்கொண்டு, இலங்கை அரசாங்கமானது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையின் மீது சிறப்பு வைப்புக் கணக்குகளைத் திறப்பதற்கு செல்லுபடியான காலப்பகுதியினை 2021 ஏப்பிறல் 07ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

  • CCPI based Inflation increased to 4.1 per cent in November 2020

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2020 ஒத்தோபரின் 4.0 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 4.1 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலைகளின் அதிகரிப்பு மூலம் இது பிரதானமாக தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஒத்தோபரின் 10.0 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 10.3 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.  உணவல்லா பணவீக்கமும் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஒத்தோபரின் 1.3 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 1.6 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.

  • Withdrawal of Appoinment of Natwealth Securities Limited as a Primary Dealer

    நட்வெல்த் செக்குரிட்டீஸ் லிமிடெட் மூலம் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையொன்றினைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது முதனிலை வணிகரொருவராகத் தொழிற்படுவதற்கு நட்வெல்த் செக்குரிட்டீஸ் லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட நியமனத்தை 2020.11.30ஆம் திகதியன்று பி.ப.4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் புறக்கீடு செய்வதற்கு தீர்மானித்துள்ளது.

  • Response to the Downgrade of Sri Lanka’s Rating by Fitch Ratings

    இலங்கையின் நாட்டிற்கான தரப்படுத்தலினை தரங்குறைத்து பிட்ச் ரேட்டிங் மூலம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிதியமைச்சு பதிலிறுத்தலொன்றினை வெளியிட்டுள்ளது. இதனை கீழேயுள்ள இணைய இணைப்பில் காணலாம்:

Pages