• External Sector Performance - December 2020

    நாட்டில் கொவிட் - 19 உலகளாவிய நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கத்திலிருந்து 2020 திசெம்பரில் வணிகப் பொருள் ஏற்றுமதிகள் மீட்சியடைந்த அதேவேளை, அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் மீது கட்டுப்பாடுகள் தொடர்ந்தமை ஒப்பீட்டளவில் குறைவான உலகளாவிய எரிபொருள் விலைகள் என்பன மூலம் துணையளிக்கப்பட்டு வணிகப் பொருள் இறக்குமதிகள் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் தொடர்ந்தும்  வீழ்ச்சியடைந்தன. ஒட்டுமொத்தமாக, வர்த்தகப் பற்றாக்குறையானது ஐ.அ.டொ. 2.0 பில்லியனால் கணிசமாக சுருக்கமடைந்தது. வரலாற்றிலேயே உயர்வான மாதாந்த உட்பாய்ச்சலை பதிவுசெய்து, தொழிலாளர் பணவனுப்பல்கள் 2020 திசெம்பரிலும் வெளிநாட்டுத் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மைக்கு தொடர்ந்தும்;  துணையளித்தது. நிதியியல் கணக்கில் அரசாங்க பிணையங்கள் சந்தையில் வெளிநாட்டு முதலீடு மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை இரண்டிலும் வெளிநாட்டு முதலீடு 2020 திசெம்பரில் சிறிதளவு தேறிய வெளிப்பாய்ச்சலை பதிவுசெய்தது. ஆண்டின் இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 5.7 பில்லியனாக இருந்தது. 2020 காலப்பகுதியில் இலங்கை ரூபா 2.6 சதவீதத்தினால் தேய்வடைந்தது. 2020 திசெம்பர் காலப்பகுதியில் இலங்கை ரூபா குறிப்பிடத்தக்க தேய்மான அழுத்;தத்தினை அனுபவித்தது. 2020 திசெம்பரிலும் அதேபோன்று 2021 இதுவரையான காலப்பகுதியிலும் செலாவணி வீதம் சில தளம்பல்களை அனுபவித்தது.

  • Swarnamahal Financial Services PLC - Repayment of 50% of the Remaining Deposits

    2021 சனவரி 12ஆம் திகதியிடப்பட்ட எமது ஊடக அறிக்கை மூலம் தொடர்பூட்டப்பட்டவாறு, நாணயச் சபையினால் நியமிக்கப்பட்ட முகாமைத்துவக் குழாத்தின் மேற்பார்வையின் கீழ் கம்பனியின் எஞ்சியுள்ள வைப்புக்களின் 50 சதவீதம் (50%) வரையான மீள்கொடுப்பனவுக்கான (மீள்கொடுப்பனவுத் திட்டம்) நோக்கத்திற்காக மாத்திரம் நிபந்தனையுடனான அடிப்படையொன்றில் மட்டுப்படுத்தப்பட்ட காலமொன்றிற்கு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வியாபாரத்தினை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் வழங்கப்பட்ட கட்டளையினைத் தொடர்ந்து, சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி அத்தகைய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை எடுத்துள்ளது. அதற்கமைய, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட 30 சதவீத மீள்கொடுப்பனவு மற்றும் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் கீழ் தகைமையுடைய நட்டஈடு என்பவற்றைக் கழித்ததன் பின்னர் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வைப்புகளின் எஞ்சியுள்ள பெறுமதியின் 50 சதவீதம் 2021 பெப்புருவரி 03ஆம் திகதியிலிருந்து ஆரம்பித்து மீள்கொடுப்பனவு செய்யப்படவுள்ளது.

  • CCPI based Inflation decreased to 3.0 per cent in January 2021

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2020 திசெம்பரின் 4.2 சதவீதத்திலிருந்து 2021 சனவரியில் 3.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2020 சனவரி காலப்பகுதியில் நிலவிய உயர்வான தளத்தின் புள்ளிவிபரத் தாக்கம் இதற்குக் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 திசெம்பரின் 9.2 சதவீதத்திலிருந்து 2021 சனவரியில் 6.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மேலும், உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 திசெம்பரின் 2.0 சதவீதத்திலிருந்து 2021 சனவரியில் 1.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது

    ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 திசெம்பரில் 4.6 சதவீதத்திலிருந்து 2021 சனவரியில் 4.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

  • Discretionary Payments of Licensed Banks

    உரிமம்பெற்ற வங்கியினால் காசுப் பங்கிலாபம் செலுத்துதல் உள்ளிட்ட தற்றுணிபுக் கொடுப்பனவுகள் தொடர்பில் சமீப காலத்தில் வெளியாகும் மாறுபட்ட கருத்துக்களை அவதானிக்குமிடத்து இலங்கை மத்திய வங்கி பின்வருவனவற்றைத் தெளிவுபடுத்த விரும்புகின்றது.

  • Beware of Online Financial Frauds and Scams

    சமூக வலைத்தளங்கள், இணையத்தளம் அடிப்படையிலமைந்த செயலிகள் மற்றும் செல்லிட கொடுப்பனவுச் செயலிகள் ஊடாக பல வகையான நிதியியல் மோசடிகள் மற்றும் ஏமாற்றுக்கள் இடம்பெற்றுவருகின்றமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இம்மோசடிகளில் அநேகமானவை பொதுமக்களைக் கவருகின்ற வலைத்தளம் அல்லது செல்லிடத்தொலைபேசி செயலி அடிப்படையிலமைந்த இலகு கடன் திட்டங்கள் ஊடாகவே நடாத்தப்படுகின்றன. அத்தகைய கடன் விண்ணப்ப மதிப்பீட்டுச் செயன்முறையின் போது மோசடிக்காரர்கள் பின்வருவன போன்ற அந்தரங்கமான தனிப்பட்ட வாடிக்கையாளர் தகவல்களைப்/ தரவுகளைப் பகிர்வதற்கு பொதுமக்களை தூண்டுகின்றனர்;

  • NCPI based Inflation decreased in December 2020

    தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 நவெம்பரின் 5.2 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 4.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, 2019 திசெம்பரில் நிலவிய உயர்வான தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கம் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 நவெம்பரின் 9.4 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 7.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 நவெம்பரின் 1.7 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 2.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

    ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 நவெம்பரின்  6.3 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 6.2 சதவீதத்திற்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்தது.

  • The Central Bank of Sri Lanka Continues its Accommodative Monetary Policy Stance

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2021 சனவரி 18ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. பேரண்ட பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலித்ததன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. சபையானது 2020 காலப்பகுதியில் ஒட்டுமொத்த சந்தைக் கடன்வழங்கல் வீதங்களில் குறைப்பினைக் கருத்திற்கொண்டு, கேள்வியினால் தூண்டப்பட்ட பணவீக்க அழுத்தங்கள் இன்மையில் குறிப்பாக உள்நாட்டு பணச் சந்தையில் நிலவுகின்ற குறிப்பிடத்தக்க மிகையான திரவத்தன்மை மட்டங்களைக் கருத்திற்கொண்டு, பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலளிப்பதற்கு கடன்வழங்கல் வீதங்களில் தொடர்ச்சியான கீழ்நோக்கிய திருத்தமொன்றிற்கான தேவையினை வலியுறுத்தியது.

  • Sri Lanka Purchasing Managers’ Index - December 2020

    நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக இயல்புநிலை அடைவதிலிருந்து நன்மையடைந்து தயாரிப்பு கொ.மு.சுட்டெண்ணானது 2020 திசெம்பரில்  தொடர்ந்தும் அதிகரித்து  மாதாந்த அடிப்படையில் 61.2 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. இதற்கு உற்பத்தி, புதிய கட்டளைகள், தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் முக்கிய காரணமாக அமைந்தது.

  • External Sector Performance - November 2020

    ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் வீழ்ச்சிக்கு மத்தியிலும் 2020 நவெம்பரில் வெளிநாட்டுத் துறையில் குறைவான வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்பன உள்ளடங்கலாக பல சாதகமான முன்னேற்றங்கள் அவதானிக்கப்பட்டன. அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்தமை மற்றும் குறைவான உலகளாவிய எரிபொருள் விலைகள் என்பன மூலம் துணையளிக்கப்பட்டு வணிகப்பொருள் இறக்குமதிகள் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தன. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் இரண்டாம் அலையுடன் உள்நாட்டு உற்பத்திச் செயன்முறைகளுக்கான இடைத்தடங்கலின் காரணமாக முன்னைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் நவெம்பரில் வணிகப்பொருள் ஏற்றுமதிகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியொன்று காணப்பட்டது. தொழிலாளர் பணவனுப்பல்கள் நவெம்பரிலும் தொடர்ந்தும் வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன.

  • Swarnamahal Financial Services PLC - Resumption of Business for a Limited Purpose on a Conditional Basis

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 31(5)(அ)ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் கம்பனியின் எஞ்சியுள்ள வைப்புக்களின்; ஐம்பது சதவீத (50%) மீள்கொடுப்பனவு (மீள்கொடுப்பனவுத் திட்டம்) நோக்கத்திற்காக மாத்திரம் 2021 சனவரி 13ஆம் திகதியிலிருந்து தொடங்கி 2021 ஏப்பிறல் 12ஆம் திகதி வரையான மட்டுப்படுத்தப்பட்ட மூன்று (03) மாதங்களைக் கொண்ட காலப்பகுதியொன்றுக்காக பொது நலனுக்காகவும் கம்பனியின் வைப்பாளர்களின் நலன்களுக்காகவும் பல கட்டாய நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாணயச் சபையினால் நியமிக்கப்பட்ட முகாமைத்துவக் குழாத்தின் (முகாமைத்துவக் குழாம்) மேற்பார்வையின் கீழ் வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்காக  மற்றும் வரையறுக்கப்பட்ட காலமொன்றுக்காக வியாபாரத்தினை பெயரளவில் மீள ஆரம்பிப்பதற்கு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியினை அனுமதிக்கின்ற கட்டளையொன்றினைப் பிறப்பித்துள்ளது.

Pages