நாட்டிற்கு வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியானது கௌரவ நிதி அமைச்சரின் சம்மதத்துடனும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இசைவாகவும் தனியார் துறையின் வலிமைகள் மீது உந்துசக்தியளிக்கின்ற கரைகடந்த நிதியளித்தலை திரட்டுவதற்கான வழிகளைப் பின்பற்றுமாறு தனியார் துறைக்கு அழைப்பு விடுக்கின்றது.
இது தொடர்பில், கரைகடந்த கடன்பாடுகள் பற்றிய வெளிநாட்டுச் செலாவணி இடர்நேர்வுக்கு காப்பளிப்பதற்கு வருடாந்தம் மீளாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படக்கூடிய சொல்லப்பட்ட கடன்பாடுகளின் காலப்பகுதிக்காக தனியார் துறையினரின் வெளிநாட்டுச் செலாவணி கடன்பெறுநர்களுக்காக செலவில்லாத பரஸ்பரப் பரிமாற்றல் ஒப்பந்த வசதியொன்று இலங்கை மத்திய வங்கி மூலம் கிடைக்கப்பெறச் செய்யப்படும்.