இலங்கை மத்திய வங்கியானது பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர் சமூகத்திற்கு பின்வரும் தகவல்களை வழங்க விரும்;புகின்ற அதேவேளை, வங்கித்துறையின் நிலைத்திருக்கும் தன்மைக்கு சவால்விடுக்கின்ற தரமிடல் நிறுவனங்களின் அறிக்கைகள் மற்றும் இலங்கை நாட்டுக்கான பன்னாட்டு முறிகள் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகள் என்பவற்றில் உரிமம்பெற்ற வங்கிகளின் முதலீடுகள் தொடர்பான ஊகங்களையும் மறுக்கின்றது.
பின்வரும் முக்கிய இடர்நேர்வு தணிப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் முதலீட்டு வாய்ப்புக்களை வசதிப்படுத்துவதற்காகவும் நாட்டுக்கான வெளிநாட்;டுச் செலாவணியின் உட்பாய்ச்சலை மேலும் ஊக்குவிப்பதற்குமாக இலங்கை மத்திய வங்கியானது, வெளிமூலங்களிலிருந்தான வளங்களிலிருந்து நாட்டுக்கான பன்னாட்டு முறி மற்றும் இலங்கை அபிவிருத்தி முறி ஆகியவற்றில் சமமாகப் பகிரப்பட்டளவிலான முதலீடுகளை உரிமம்பெற்ற வணிக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவை மேற்கொள்ள அனுமதிக்கின்றது.