இலங்கையின் வெளிநாட்டுத் துறை 2021 சனவரி காலப்பகுதியில் பல்வேறு நோக்குகளில் தொடர்ந்தும் மீட்சியடைந்தது. மேம்பட்ட வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்பன இதற்குப் பிரதானமாக துணையளித்திருந்தன. 2020 சனவரியுடன் ஒப்பிடுகையில் 2021 சனவரியில் வர்த்தகக் கணக்கில் குறைவடைந்த பற்றாக்குறைக்கு வணிகப் பொருள் ஏற்றுமதிகளைவிட வணிகப் பொருள் இறக்குமதியில் பாரிய வீழ்ச்சியே காரணமாக அமைந்தது. அதேவேளை, தொழிலாளர் பணவனுப்பல்கள் 2021 சனவரியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியொன்றினைத் தொடர்ந்தும் பதிவுசெய்து வெளிநாட்டு நடைமுறைக் கணக்கினை வலுப்படுத்தியது. நிதியியல் கணக்கில் 2021 சனவரியில் அரசாங்கப் பிணையங்கள் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் சிறிய தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த அதேவேளை, கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை தேறிய வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. ஆயினும், மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட வழிமுறைகளும் அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் தொடர்ந்தமையும் இவ்வழுத்தத்தினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவின.
-
External Sector Performance - January 2021
-
Launching of the First-ever National Financial Inclusion Strategy of Sri Lanka
தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தினை இலங்கையில் முதன்முறையாக 2021 மாச்சு 04 அன்று தொடங்கி வைப்பதனை அறிவிப்பதில் இலங்கை மத்திய வங்கி பெருமகிழ்ச்சியடைகின்றது. இத்தொடக்க நிகழ்வைக் குறிக்கும்முகமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதம அமைச்சரும் நிதித் திட்டமிடல் அமைச்சருமான கௌரவ மகிந்த ராஜபக்ஷ் அவர்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் அவர்கள் மூலம் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயம் வழங்கி வைக்கப்பட்டது. இத்தொடக்க நிகழ்வில் பணம் மற்றும் மூலதனச் சந்தை அத்துடன் அரச தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹோலி அத்துடன் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபன நாட்டிற்கான பிரதானி திருமதி. அமீனா ஆரிப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
-
The Central Bank of Sri Lanka Reaffirms its Commitment to Continue the Current Accommodative Monetary Policy Stance
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2021 மாச்சு 03ஆம் திகதியன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பேரண்ட பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலித்ததன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. சபையானது தனியார் துறைக்கான கொடுகடன் பகிர்ந்தளிப்புக்களில் அண்மைக்கால மெதுவடைதலினையும் பொருளாதாரத்தின் உற்பத்தித் திறன்மிக்க துறைகளுக்கு போதுமானதற்ற கடன்வழங்கலையும் அவதானத்தில் கொண்டதுடன் தற்போது முன்னெடுக்கப்படும் உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலமைந்த பொருளாதார நடவடிக்கையின் மீட்சிக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, உற்பத்தித் திறன்மிக்க துறைகளுக்கு முனைப்புடன் கடன் வழங்குவதற்கான நிதியியல் முறைமைக்கான தேவையினையும் வலியுறுத்தியது. மேலும், சில சந்தை வட்டி வீதங்களில் அண்மைக்கால மேல்நோக்கிய போக்குகளை சபை அவதானித்ததுடன் குறைவான பணவீக்கச் சூழலைக் கொண்ட பின்னணியில் பொருளாதாரம், உறுதியாக புத்துயிர்பெறுகின்ற அறிகுறிகளை காண்பிக்கும் வரை குறைந்த வட்டி வீதக் கட்டமைப்பினை தொடந்தும் முன்னெடுப்பதற்கான அதன் அர்ப்பணிப்பினை மீளவும் வலியுறுத்தியது.
-
Land Valuation Indicator - Second Half of 2020
கொழும்பு மாவட்டத்தின் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2020இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது 4.6 சதவீத ஆண்டு அதிகரிப்பினைப் பதிவுசெய்து 145.2ஆகக் காணப்பட்டது. எனினும், காணி மதிப்பீட்டுக் குறிகாட்டியின் அதிகரிப்பு மட்ட சதவீதமானது அண்மைக்காலங்களில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சிப் போக்கிற்கு இசைவாகக் காணப்பட்டது. மேலும், காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி 2020இன் முதலரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2020இன் இரண்டாம் அரையாண்டிற்கு 2.5 சதவீதம் கொண்ட அதகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது.
-
CCPI based Inflation increased to 3.3 per cent in February 2021
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 சனவரியின் 3.0 சதவீதத்திலிருந்து 2021 பெப்புருவரியில் 3.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 சனவரியின் 6.8 சதவீதத்திலிருந்து 2021 பெப்புருவரியில் 7.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. எனினும், உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 சனவரியின் 1.4 சதவீதத்திலிருந்து 2021 பெப்புருவரியில் 1.3 சதவீதத்திற்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்தது.
-
The Central Bank of Sri Lanka issues Circulation Standard Commemorative Coin to Mark its 70th Anniversary
இலங்கை மத்திய வங்கி, 1950 ஓகத்தில் அதன் தொழிற்பாடுகளைத் தொடங்கி இலங்கையின் சுபீட்சத்திற்கு அதன் தனித்துவமும் பெறுமதிவாய்ந்ததுமான பங்களிப்பின் 70 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. அதன் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக 2020 திசெம்பர் 31 அன்று ரூ.20 வகை சுற்றோட்டத்திற்கு விடப்படாத ஞாபகார்த்த குற்றி (அலுமீனிய வெண்கலம்) ஒன்றினை வெளியிட்டது. இதற்குச் சமாந்தரமாக மேற்குறித்த சுற்றோட்டத்திற்கு விடப்படாத ஞாபகார்த்தக் குற்றியினை ஒத்த வடிவத்துடன் கூடிய ரூ.20 வகை சுற்றோட்ட நியமத்திலான ஞாபகார்த்தக் குற்றியொன்றினை (நிக்கல் பூசப்பட்ட உருக்கு) வெளியிடுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நாணயத்தின் விரிவான விபரம் மற்றும் உற்பத்திக் குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது.
-
Repatriation and Conversion of Export Proceeds: Why are these measures needed?
2021 பெப்புருவரி 18 அன்று, நாணயச் சபையானது ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்குத் அனுப்புதல் அத்துடன் அத்தகைய பெறுகைகளை இலங்கை ரூபாவிற்கு மாற்றுதல் தொடர்பில் விதிகளை வழங்கியதுடன் இது தொடர்பில் உரிமம்பெற்ற வங்கிகளுக்கு தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களையும் வழங்கியது.
ஏற்கனவே நடைமுறையிலுள்ள நாட்டிற்க்கு அனுப்புதல் தேவைப்பாட்டிற்கு மேலதிகமான மேற்குறித்த விதிகளும் தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களும் நாட்டில் வெளிநாட்டுச் செலாவணி நிலைமையினை வலுப்படுத்துவதற்கும் செலாவணி வீதத்தில் சில மிதமிஞ்சிய தளம்பல்களை ஏற்படுத்திய ஊகச் செயற்பாட்டினை தணிக்கும் பொருட்டும் விடுக்கப்பட்டன.
-
NCPI Based Inflation Decreased in January 2021
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 திசெம்பரின் 4.6 சதவீதத்திலிருந்து 2021 சனவரியில் 3.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, 2020 சனவரியில் நிலவிய உயர்வான தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கம் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 திசெம்பரின் 7.5 சதவீதத்திலிருந்து 2021 சனவரியில் 5.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மேலும், உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 திசெம்பரின் 2.2 சதவீதத்திலிருந்து 2021 சனவரியில் 1.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
-
Repatriation of Export Proceeds into Sri Lanka
நாணயச் சபையானது, ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்குத் திருப்பியனுப்புதல் அத்தகைய பெறுகைகளை இலங்கை ரூபாவிற்கு மாற்றிக்கொள்ளுதல் தொடர்பில் 2021.02.18ஆம் திகதியிடப்பட்ட 2215/39ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டவாறான விதிகளை வழங்கியுள்ளது.
அதற்கமைய, 2021 பெப்புருவரி 18ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் மேலதிக அறிவித்தல் வரை பின்வரும் விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.
-
Sri Lanka Purchasing Managers’ Index - January 2021
தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2021 சனவரியில் விரிவடைந்தன.
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2021 சனவரியில் 60.2 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து விரிவடைந்து காணப்பட்டது. இதற்கு புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தியின் விரிவடைதல் காரணமாகும். கொள்வனவுகளின் இருப்பு துணைச் சுட்டெண்களின் அதிகரிப்பு ஒட்டுமொத்த கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் விரிவடைதலுக்குப் பங்களித்தது.
சாதகமான எண்ணப்பாங்குடன் ஆண்டு தொடங்கி பணிகள் துறை கொ.மு.சுட்டெண் 2021 சனவரியில் 56.2 பெறுமதியினைப் பதிவுசெய்தது. இது கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் இரண்டாம் அலையினால் பாதிக்கப்பட்டிருந்த பணிகள் துறையில் மேலும் மீட்சியொன்றினை எடுத்துக்காட்டுகின்றது. இவ்வதிகரிப்பிற்கு புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகளில் அவதானிக்கப்பட்ட அவதானிக்கப்பட்ட விரிவடைதல்கள் துணையளித்திருந்தன.