• Further Measures to Encourage Opening of Special Deposit Accounts

    நாட்டில் கொவிட்-19 நோய்த்தொற்றின் தாக்கங்களை வெற்றிகொள்வதற்கான தேசிய முயற்சிக்கு ஆதரவினை நாடும் பொருட்டு இலங்கை அரசாங்கமானது 2020.04.08ஆம் திகதியன்று சிறப்பு வைப்புக் கணக்கினை அறிமுகப்படுத்தியது. இதற்குச் சாதகமாக பதிலிறுத்தி இதுவரையிலும் சிறப்பு வைப்புக் கணக்குகளினுள் ஐ.அ.டொலர் 87 மில்லியன் தொகையினை (ஏறத்தாழ) இலங்கை பெற்றுக்கொண்டுள்ளது என்பதனைக் குறிப்பிடுவது ஊக்கமளிக்கின்றது.

    இலங்கை அரசாங்கமானது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையுடனான ஆலோசனையுடன் சிறப்பு வைப்புக் கணக்குகளை ஊக்குவிப்பதற்காக கீழே குறிப்பிடப்பட்டவாறு மேலும் வழிமுறைகளை எடுத்துள்ளது.

    முழுவடிவம்

  • Central Bank approved more than Rs. 60 billion working capital loans to COVID-19 affected businesses

    2020 யூன் 10ஆம் திகதியுடன் முடிவடைந்த இவ்வார காலப்பகுதியில் ரூ.6,978 மில்லியன் தொகை கொண்ட 2,066 புதிய கடன்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புதலுடன் 2020 யூலை 10ஆம் நாள் உள்ளவாறு இலங்கை மத்திய வங்கி சௌபாக்கியா கொவிட்-19 புத்துயிர்ப்பு வசதியின் கீழ் ரூ.60,250 மில்லியன் கொண்ட 22,306 கடன்களுக்கு ஒப்புதலளித்தது. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் 2020 யூலை 09ஆம் நாள் உள்ளவாறு நாடளாவிய ரீதியில் 13,333 கடன்பாட்டாளர்களிடையே ரூ.30,526 மில்லியன்களைப் பகிர்ந்தளித்துள்ளன.

  • Monetary Policy Review - July 2020

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 யூலை 08ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் 100 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 4.50 சதவீதத்திற்கும் 5.50 சதவீதத்திற்கும் குறைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. சந்தைக் கடன் வழங்கல் வீதங்களை மேலும் குறைப்பதனைத் தூண்டி அதன்மூலம் பொருளாதாரத்தின் உற்பத்தியாக்கத் துறைகளுக்கான கடன் வழங்கல் தீவிரமான முறையில் அதிகரிப்பதற்காக நிதியியல் முறைமையை ஊக்குவிப்பதனையும் நோக்கமாகக் கொண்டு சபை இத்தீர்மானத்திற்கு வந்திருக்கின்றது. இது, குறைக்கப்பட்ட பணவீக்க நிலைமைகளுள்ள சூழலில் கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் அதேபோன்று பரந்த பொருளாதாரத்திற்கும் வலுப்படுத்தப்பட்ட ஆதரவினை வழங்கும். 

  • Committee to Inquire into and Report on the Irregularities and Illegal Activities of the Finance and Finance Leasing Businesses

    நிதிக் குத்தகைக்குவிடும் வியாபாரங்களில் அண்மையில் ஏற்பட்ட சம்பவங்களைக் கருத்திற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், நிதி மற்றும் நிதிக் குத்தகைக்குவிடும் வியாபாரங்களின் ஒழுங்கீனங்கள் மற்றும் சட்டத்திற்கு மாறான நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கும் அத்தகைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான விதந்துரைப்புக்களைச் செய்வதற்குமாக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றினை நியமித்திருந்தார். 

  • CBSL Commences the Process of Developing a Blockchain Technology based Know-Your-Customer Proof of Concept

    இலங்கை மத்திய வங்கியானது தொடரேட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த உங்களது வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் முன்னோடித் திட்ட வடிவமைப்புச் செயன்முறையினைத் தொடங்குவதற்கு 2020 யூலை 7ஆம் திகதியன்று ஒப்பத்தங்களைக் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கையின் நிதியியல் பணிகளுக்கான சாத்தியமான நன்மைகளை இலங்கை மத்திய வங்கி 2018இல் இனங்கண்டு வங்கிகள் அதேபோன்று தகவல் தொழில்நுட்ப தொழிற்துறை என்பவற்றின் தன்னார்வ பங்கேற்புடன் தொடரேட்டு தொழில்நுட்பம் பற்றிய தொழிற்துறைகளுக்கிடையிலான ஆய்வுகளைத் தொடங்கியது. பகிரப்பட்ட உங்கள் வாடிக்கையாளர்களைத் தெரிந்துகொள்ளுங்கள் தீர்வொன்றினை உருவாக்கி இலங்கையின் தொடரேட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த நிதியியல் பணித் தீர்வுகளுக்கு வழியமைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்தது.

  • Extension of the Suspension of Business of Perpetual Treasuries Limited

    பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2020 யூலை 05ஆம் திகதி பி.ப 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்து முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றது.

  • Central Bank approved Rs. 53 billion for 20,240 COVID-19 affected Businesses

    மத்திய வங்கியானது இலங்கை அரசாங்கத்துடனான ஆலோசனையுடன் கொவிட்-19 நோய்த்தொற்றின் மூலம் மோசமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு உரிமம்பெற்ற வங்கிகள் ஊடாக 4 சதவீத வட்டிவீதத்தில் தொழிற்பாட்டு மூலதனத்தினை வழங்குவதற்காக சௌபாக்யா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தி நாட்டில் பொருளாதார நடவடிக்கை புத்துயிர் பெறுவதற்கு ஆதரவளிக்கின்றது. இக்கடன் திட்டமானது சுயதொழில் மற்றும் தனிப்பட்டவர்கள் உள்ளடங்கலாக ரூ. 1 பில்லியனுக்கு குறைவான வருடாந்த புரள்வுடன் கூடிய கொவிட்-19 மூலம் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது. 1 பில்லியன் வருடாந்த புரள்வு மட்டுப்பாடானது சுற்றுலா, ஏற்றுமதிகள் மற்றும் தொடர்புபட்ட ஏற்பாட்டுச்சேவை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள வியாபாரங்களுக்கு ஏற்புடையதாகாது.

  • Clarification on Opening Special Deposit Accounts

    அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு வைப்புக் கணக்குகளைத் திறந்து பேணுவதில் வேண்டப்பட்ட உரிய விழிப்புக்கவனச் செயன்முறைகள் இலங்கையில் தொழிற்படுகின்ற வங்கிகள் மூலம் (அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள்) பின்பற்றப்படவில்லை என ஒரு சில அதிகாரிகளினாலும் நபர்களினாலும் தெரிவிக்கப்பட்ட/ முன்வைக்கப்பட்ட கருத்துக்களை/ கரிசனைகளை இலங்கை மத்திய வங்கி திட்டவட்டமாக நிராகரிக்கின்றது. 

    கொவிட்-19 நோய்த்தொற்றின் தாக்கங்களை வெற்றிகொள்வதற்கான தேசிய முயற்சிக்கு உதவியினை நாடும் நோக்குடன் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 2020.04.08ஆம் திகதியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை வழங்குவதன் ஊடாக இலங்கை அரசாங்கமானது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் ஆலோசனையுடன் சிறப்பு வைப்புக் கணக்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. 

  • CCPI based Inflation Declined Further in June 2020

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)   ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 மேயில் 4.0 சதவீதத்திலிருந்து 2020 யூனில் 3.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இது பிரத்தியேகமாக 2019 யூனில் காணப்பட்ட உயர்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கத்தினாலேயே உந்தப்பட்டிருந்தது. உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 மேயில் 9.9 சதவீதத்திலிருந்து 2020 யூனில் 10.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, உணவல்லா பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2020 மேயில் 1.6 சதவீதத்திலிருந்து 2020 யூனில் 1.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.   

    ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாற்றமானது 2020 யூனில் 4.7 சதவீதத்தில் மாறாதிருந்தது.

  • The Central Bank Implements a Credit Guarantee and Interest Subsidy Scheme for Businesses affected by the COVID-19 Pandemic

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது, 2020 யூன் 26ம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், கொவிட் - 19 உலகளாவிய நோய்த்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு வங்கிகளின் கடன்வழங்கலை துரிதப்படுத்துவதற்கு ஒரு கொடுகடன் உத்தரவாதம் மற்றும் வட்டி உதவுதொகைத் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்த தீர்மானித்திருக்கின்றது. இந்த திட்டமானது,  2020 யூலை 01ம் திகதி அன்று தொடங்கிவைக்கப்படவிருப்பதுடன், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ. 150 பில்லியன் வரையறையினுள், சௌபாக்யா கொவிட் - 19 மறுமலர்ச்சி வசதி மற்றும் நாணயவிதிச்சட்டத்தின் 83ம் பிரிவின் கீழ் நாணயச்சபையினால் அங்கீகாரமளிக்கப்பட்ட புதிய கடன் வசதிகளுடன் இணையாக செயற்படும்.

Pages