ஐரோப்பிய ஆணைக்குழுவானது 2020 மே 07ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் உபாய ரீதியான குறைபாடுகளுடன்கூடிய உயர் இடர்நேர்வுமிக்க மூன்றாம் நிலை நாடுகளைக் கொண்ட அதன் பட்டியலிலிருந்து இலங்கையினை நீக்கியுள்ளது.
-
Delisting of Sri Lanka by the European Commission from its List of High Risk 3rd Countries
-
The Central Bank of Sri Lanka Further Reduces Policy Rates to Support Economic Activity
2020 மே 06 அன்று நடைபெற்ற தனது விசேட கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, தற்போதைய நாணயக்கொள்கை நிலைப்பாட்டினை மீளாய்வு செய்து, 2020 மே 06 அன்று வியாபாரம் முடிவுறுத்தப்பட்டதிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் 50 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 5.50 சதவீதத்திற்கும் 6.50 சதவீதத்திற்கும் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. நாணயச்சபையானது, மந்தமான பணவீக்க அழுத்தங்கள் காணப்படுகையில் கொரோனா வைரஸ் (கொவிட் - 19) உலகளாவிய நோய்த்தொற்றினால் விளைவிக்கப்பட்ட பாதகமான பொருளாதார தாக்கங்களினை சரி செய்வதற்கு பொருளாதாரத்திற்கு மேலும் ஆதரவளிப்பதனை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது.
-
The Central Bank of Sri Lanka Extends the Deadlines to Facilitate Covid-19 Affected Businesses and Individuals
கொவிட் - 19 பரம்பலினால் நிதி நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதில் பாதிக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களினால் எதிர்கொள்ளப்படும் கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கி கடன் பிற்போடுதல் மற்றும் இரண்டு மாத தொழிற்படு மூலதனத்திற்காக 4 சதவீத வருடாந்த வட்டியுடைய மீள்நிதியிடல் வசதி போன்றவற்றிற்கான வேண்டுகோளைச் சமர்ப்பிக்கும் முடிவுத் திகதியினை 2020.04.30 இருந்து 2020.05.15 வரை நீடித்திருக்கின்றது. மேலும், ரூ.500,000 இற்கு உட்பட்ட பெறுமதியுடைய காசோலைகளின் செல்லுபடிக்காலம் காலாவதியாகியிருக்குமிடத்தில், 2020 மே 15 வரை அதனுடைய செல்லுபடியாகும் காலமாகக் கருத்திற்கொள்ள வேண்டுமென வங்கிகள் வேண்டிக்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான நீடிப்புக்கள் 2020.04.28ஆம் திகதியிடப்பட்ட 2020இன் 06ஆம் இலக்க சுற்றறிக்கையினூடாக அமுல்படுத்தப்பட்டுள்ளன.
-
CCPI based Inflation decreased in April 2020
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 மாச்சின் 5.4 சதவீதத்திலிருந்து 2020 ஏப்பிறலில் 5.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இது 2019 ஏப்பிறலில் காணப்பட்ட உயர்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கத்தினால் மாத்திரமே உந்தப்பட்டது. இதே வேளையில், ஆண்டிற்கு ஆண்டு உணவுப்பணவீக்கமானது 2020 ஏப்பிறலில் 13.2 சதவீதத்தினை பதிவு செய்ததுடன் ஆண்டிற்கு ஆண்டு உணவல்லா பணவீக்கமானது 2020 மாச்சின் 2.5 சதவீதத்திலிருந்து 2020 ஏப்பிறலில் 2.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
-
The Central Bank of Sri Lanka Releases its Annual Report for the Year 2019
1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின்படி இலங்கை மத்திய வங்கி நாணயச்சபையின் எழுபதாவது ஆண்டறிக்கை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமானிய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் அவர்களால் இலங்கையின் பிரதம அமைச்சரும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சருமான மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
-
The Central Bank of Sri Lanka Imposes Maximum Interest Rates on Pawning Advances of Licensed Banks
உரிமம்பெற்ற வங்கிகளால் அடகு முற்பணங்களின் மீது தற்போது அறவிடப்படும் வட்டி வீதம் ஆண்டுக்கு 12 சதவீதத்திலிருந்து 17.5 சதவீதம் வரை இருப்பதை இலங்கை வங்கி அவதானித்துள்ளது. கொவிட் - 19 பரவலாக்கலின் விளைவாக ஏற்பட்ட பாதகமான பொருளாதார நிலைமை காரணமாக தமது குறுங்கால நிதித் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்காக தங்க நகைகளை அடகுவைக்கும் குறைந்த வருமானமீட்டும் தனிநபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய தேவைப்பாட்டைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உரிமம்பெற்ற வங்கிகளின் அடகு முற்பணங்களின் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை விதித்துள்ளது.
-
Withdrawal of Primary Dealership by Union Bank of Colombo PLC
யூனியன் பாங்க் ஒப் கொழும்பு பிஎல்சி இனால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதனை கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2020 மே 01 இலிருந்து யூனியன் பாங்க் ஒப் கொழும்பு பிஎல்சி முதனிலை வணிகராக செயற்படுவதனை நிறுத்துவதற்கு அனுமதியளித்திருக்கின்றதென்பதை பொதுமக்களுக்கு இத்தால் அறிவித்திருக்கின்றது. யூனியன் பாங்க் ஒப் கொழும்பு பிஎல்சியானது லங்கா தீர்ப்பனவு முறைமையில் நேரடி வணிக பங்குபற்றுநராக தொடர்ந்து தொழிற்படும் என்பதுடன் தனது வாடிக்கையாளர் சார்பாக பத்திரங்களற்ற அரச பிணையங்களின் கொடுக்கல்வாங்கலில் ஈடுபட்டு லங்கா செக்குயர் முறைமையில் வாடிக்கையாளர் கணக்குகளையும் பராமரிக்கும்.
-
NCPI based Inflation decreased in March 2020
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 பெப்புருவரியின் 8.1 சதவீதத்திலிருந்து 2020 மாச்சில் 7.0 சதவீதத்திற்கு குறைவடைந்தது. இது உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த குறைவினால் பிரதானமாக உந்தப்பட்டது. அதன்படி, ஆண்டிற்கு ஆண்டு உணவுப்பணவீக்கமானது 2020 பெப்புருவரியின் 16.3 சதவீதத்திலிருந்து 2020 மாச்சில் 14.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதே வேளையில், ஆண்டிற்கு ஆண்டு உணவல்லா பணவீக்கமானது 2020 மாச்சில் 1.8 சதவீதத்தினை பதிவு செய்தது.
-
Remittance of Funds to Sri Lankans Abroad to Pursue Studies and on Short Term Visits, to Meet Their Expenses
இலங்கை மத்திய வங்கியானது, ஓய்வு மற்றும் விடுமுறை, உறவினர்களை மற்றும் நண்பர்களைச் சந்தித்தல், யாத்திரை, வியாபார நோக்கங்கள், பயிற்சி, கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள், மருத்துவச் சிகிச்சைகள், விளையாட்டுகள், பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார செயற்பாடுகள் போன்றவற்றுக்கான குறுகிய விஜயங்களுக்காகவும் அத்துடன் மாணவர் அல்லது அதற்குச் சமமான வீசாக்களிலும் வெளிநாடு சென்றுள்ள சில இலங்கையர்கள் தற்போது நிலவுகின்ற தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ளனர் என்றும் இலங்கையிலுள்ள அவர்களது குடும்பங்கள் வெளிநாடுகளிலுள்ள அத்தகைய ஆட்களுக்கு வாழ்க்கைச் செலவுகளை/ பராமரிப்புச் செலவுகளை நிறைவேற்றுவதற்கு பணம் அனுப்புவதற்கு ஆர்வமாகவுள்ளனர் என்பது பற்றியும் அறிந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியானது பின்வரும் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்கின்றது.
-
Sri Lanka Purchasing Managers’ Index - March 2020
தயாரிப்பு நடவடிக்கைகள் கொரோனா வைரஸ் (கொவிட் - 19) உலகளாவிய நோய்த்தொற்றுப் பரவலின் பாதகமான தாக்கங்களினால் குறிப்பிடத்தக்களவு சுருக்கமடைந்தது. கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2020 பெப்புருவரியிலிருந்து 23.6 சுட்டெண் புள்ளிகள் வீழ்ச்சியுடன் அனைத்து காலப்பகுதிக்குமான தாழ்ந்தளவு 30.0 சுட்டெண் பெறுமதியினை 2020 மாச்சில் பதிவுசெய்திருந்தது. தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணிலான வீழ்ச்சியானது, பிரதானமாக கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் துணைச் சுட்டெண்களான உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்களவு சுருக்கத்தினால் உந்தப்பட்டதுடன் இலங்கை தயாரிப்பு துறையில் கொரோனா வைரஸ் (கொவிட் - 19) இன் முக்கியத்துவத்தினையும் பிரதிபலிக்கின்றது.